Thursday, December 07, 2006

இரண்டரை கோடியில் மீனாக்ஷி அம்மன் கோவில் செட்

வழக்கம் போல் மீனாக்ஷி அம்மன் கோவில் பற்றி ஏதேனும் புதிய எனக்கு கிடைக்குமா என்று தேடிய போது கிடைத்த ஒரு அரி(றி)ய தகவல். அர்ஜூன் என்ற தெலுங்கு படத்திற்க்காக ஒரு மீனாக்ஷி அம்மன் கோவில் போல் அமைத்திருந்த படங்களும் தகவல்களும் கிடைத்தது. சினிமா செட்டிங்ஸ் செய்வதில் கைதேர்ந்த "தொட்டா தரணி" மிகவும் அருமையாக செய்திருந்தார். அவருடைய பொற்றாமரை குளத்து படியை பார்த்து ஒரு கணம் ஏமாந்து விட்டேன் பிறகு அதன் மேல் புரத்தில் பார்க்கும் போது தான் கோபுரங்கள் இல்லாத ஒரு படமாக தெரிந்தது. 130 அடி உயரத்தில் ஒரு கோபுரம் கூட செய்திருந்தனர். பார்க்க நன்றாக இருந்தது. நீங்களும் பார்க்க செல்ல வேண்டிய தளம் சுட்டி இதோ: http://www.idlebrain.com/movie/showcase/arjun.html.

இதை தயாரிக்க ரூபாய் 2.5 கோடி செலவானது என்றும், 3 மாதம் கால ஆனது. இந்த கோவில் 3 வருடங்கள் கோவில் தாங்குமாம். தங்க வண்ணம் பூசபட்ட தாமரை போல் இந்த குளத்தில் இருந்தது.

நடிகர்க(கை)ளில் எனக்கு தெரிந்தவர் 'பிரகாஷ் ராஜ்' மட்டும் தான் பிற நடிகர்களை பற்றி தெரியவில்லை. 2004ல் வெளி வர திட்டமிட்ட படமாக தெரிகிறது.நிற்க.

அம்மன் கோவிலின் இப்பதிவில் வராத சில படங்கள் (செட் படங்கள் அல்ல).

ஆயிரங்கால் மண்டபத்தின் நுழைவாயில்

மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் ஒட்டகம்.

கார்த்திகை திருநாளில் ஜொலித்த கோவில்.

கழுகுபார்வையில் வரையப்பட்ட ஒரு ஓவியம்.

காசிவிஸ்வநாதர் சந்நிதி.


மேலும் சில படங்கள்.

Thursday, August 17, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள்

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்களில் விடுபட்டபடங்கள் இப்பதிவில்




கோவில் யானை அங்கயர்கன்னி



இரவு பள்ளியறை பூஜையின் போது



அதே சமயத்தில் மீனாக்ஷி அம்மன் சன்னிதியில் குழுமும் பக்தர்கள் கூட்டம்



வண்ண மயமான மேல பகுதியிலுள்ள சிறிய கோபுரம்



கல்யாண மண்டப பகுதியில் உள்ள சரபேஸ்வரர்



கம்பத்தடி மண்டப பகுதியின் ஒரு வித்யாசமான கோனம்



மயக்கும் மாலையில் மயக்கத்தை தெளிக்கும் அம்மையின் ஆலயம்



தியான மண்டபம் (நூறு கால் மண்டபம்)

Friday, July 21, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் அரிய படங்கள் # 3

இன்று ஆடி வெள்ளி...
ஆடி வெள்ளியில் விடி வெள்ளியாய் சில அரிய படங்கள்...
1858-ல் எடுக்கப்பட்ட ஒரு கோபுர படம்

அன்மையில் எடுக்கப்பட்ட கோபுர படங்கள். மேலும் கோபுர படங்கள் இங்கே, முந்தைய பதிவுகளில்

1798ல் வரையப்பட்ட டென்னிஸ் என்ற ஒவியரின் கைவண்ணத்தில் அம்மையின் ஆலையதோற்றம்

அதை தழுவி மேலும் 1857-ல் வரையப்பட்ட ஒரு படம்

கூரை இல்லாத ஒரு காட்சி, சுவாமி சன்னிதியில் கூரை இல்லாத ஒரு ஆடி வீதி காட்சி

இத்துடன் அரிய படங்கள் முற்றிறிற்று

Tuesday, July 18, 2006

அருள்மிகு ஏடகநாத சுவாமி திருக்கோயில்

தல வரலாறு :

சம்பந்தர் பூசிய திருநீரால் கூன்பாண்டியனது வெப்ப நோய் தணிந்தது. இதனால் ஆத்திரமுற்ற சமணர்கள் சம்பந்தரோடு அனல்(நெருப்பு) வாதம் புனல்(நீர்) வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்டபோது அது சாம்பல் ஆனது. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதப் பெற்ற சிவபதத்தை தீயில் இட்டனர். அது தீயில் வேகாமல் பச்சையாய் விளங்கிற்று. பின்பு புனல் வாதம் செய்தனர். புனல் வாதத்தின்போது சமணர்கள் அத்திநாத்தி என்று எழுதப்பட்ட ஏட்டை வைகையில் இட்டனர். அது ஆற்றில் அடித்து சென்றது. ஆனால் ஞானசம்பந்தர் "வாழ்க அந்தணர்" என்ற ஏட்டை வைகையில் இட்டபோது அது ஆற்றின் போக்கை எதிர்த்து சென்று கரை ஏறியது. அந்த ஏடு ஏறிய இடம் தான் திருவேடகம். மன்னனின் கூனும் நிமிர்ந்தது. கூன்பாண்டியன் நிமிர்ந்ததால் நெடுமாறன் எனப் பெயர் பெற்றான்.


ஏடகநாதர்

இங்குள்ள ஏடகநாதரை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். சித்த பிரம்மை நீங்கும் . மனஅமைதி,கல்யாண பாக்கியம் , குழந்தை பாக்கியம் ஆகியவை சுவாமியை வேண்டினால் கிடைக்கிறது.

தோஷங்கள் நீங்க

வனதுர்க்கை : செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், நாக தோஷம், பார தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு அருகில் ஓடும் வைகை ஆற்றின் கரையோரம் இத்தி மரத்தடியில் உள்ள 16 கைகளை உடைய வனதுர்க்கையம்மனை வழிபட்டு பரிகாரம் செய்து விட்டு, பின்பு சுவாமியிடம் வந்து மனதார பிரார்த்தித்து அர்ச்சனை செய்தால் மேற்கண்ட தோஷங்கள் நீங்குகின்றன.

பில்லிசூன்யங்கள் விலக

கால பைரவர் : இக்கோயிலில் உள்ள கால பைரவரை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் பால் தயிர் பன்னீர் ஜவ்வாது ஆகியவற்றால் அபிசேகம் செய்தால் பில்லி சூன்யங்கள் விலகுகின்றன. தடைபட்ட காரியங்கள் நல்ல தீர்வு காண்கின்றன.


திருமண காரியம் நடக்க

சுவாமி அம்பாள் இருவருக்கும் அர்ச்சனை செய்து அம்பாளுக்கு அணிவித்திருந்த பூமாலையை பெற்று கழுத்தில் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து பின்பு அப்பூமாலையை வீட்டிற்கு எடுத்து சென்று 45 நாட்கள் வைத்து வழிபாடு செய்தால் கண்டிப்பாக திருமணம் நடக்கிறது.

புத்திரப்பேறு கிடைக்க

கிருத்திகை தினத்தில் இத்தலத்து சண்முகப் பெருமானை வழிபட்டால் புத்திரப்பேறு கிடைக்கும்.

தலபெருமைகள் :
ஞானசம்பந்தர் சமணர்க்கு எதிராக சைவத்தின்மேன்மையை நிலைநாட்ட வைகையில் இட்ட ஏடு எதிர்த்து நின்ற தலம்.காசிக்கு சமமான தலம்.சித்தபிரம்மை நீங்க அவசியம் வந்து வணங்க வேண்டிய தலம்.பாடல் பெற்ற பாண்டி நாட்டுத் தலம்.

பாண்டி நாட்டு சிவதலங்கள் 14 ல் இத்தலம் 5 வது தலம்.

இங்கு ஞானசம்பந்தர் இங்கு குழந்தை வடிவத்தில் காட்சி தருகிறார்.

மிக முக்கியமான ஏடு ஏறிய புராண சம்பவம் நிகழ்ந்த தலம் இது.

வில்வ ஆரண்யம் என வழங்கபடும் சிவதலம்.

ஏடகப் பெருமானை அன்போடு மனதில் தியானித்து ஒரு நாள் தங்கி பூஜை முதலிய வழிபாடுகள் செய்தால் ஆயுள் முழுதும் காசியில் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும்.

பிரம்ம்ன, பராசர்,வியாசர் , திருமால்,கருடன்,ஆதிசேடன் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர் வழிபட்ட தலம்.

வைகை நதி இத்தலத்தில் தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கும் கங்கைக்கும் நிகரான சிறப்புடையது.

நேர்த்தி கடன்
பால், எண்ணெய், இளநீர்,சந்தனம்,பன்னீர்,நல்லெண்ணெய் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்யலாம்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

பொது தகவல்கள்
தங்கும் வசதி


கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

முக்கிய திருவிழாக்கள்
ஏடேறிய திருவிழா ஆவணி மாதம் முழு பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வர்.

நவராத்திரி திருவிழா.புரட்டாசி மாதம் 10 நாள் திருவிழா

சங்காபிசேகத் திருவிழா கார்த்திகை மாதம் திங்கள் கிழமை அன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும்.

ஆவணி மூல திருவிழா ஆவணி மாதம்

வைகாசி விசாகம் அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுப்பர்.


இத்தலம் குறித்த பதிகங்கள்
திருஞானசம்பந்தர் தேவாரம்
அருணகிரி நாதர் திருப்புகழ்
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம்


பொது தகவல்கள்

குடும்பத்தோடு வரும் பக்தர்கள் மதுரை மாநகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்

மதுரை - திருவேடகம் 20 கி.மீ.

மதுரையிலிருந்து சோழவந்தான் செல்லும் வழியில் திருவேடகம் இருப்பதால் அடிக்கடி நகர பேருந்து வசதி மதுரை பேருந்து நிலையத்திலிருந்து இருக்கின்றது

அருகில் உள்ள ரயில் நிலையம் சோழவந்தான், மதுரை

அருகில் உள்ள விமான நிலையம் மதுரை

கோயிலின் சிறப்பம்சம்

புனல் வாதத்தின் போது ஞானசம்பந்தரது வாழ்க அந்தணர் என துவங்கும் திருபாசுர ஏடு வைகை வெள்ளத்தில் எதிர் நீந்தி வந்து இங்கு கரை சேர்ந்ததால் திரு + ஏடு + அகம் = திரு ஏடகம் திருவேடகம் என பெயர் பெற்ற தலம்.

Saturday, July 15, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் அரிய படங்கள் # 2

மீனாக்ஷி அம்மன் கோவிலின் சில அரிய படங்கள் # 2



1858ல் அம்மன் சன்னிதி
எந்த கடையும்(தேங்காய் பழம் கடை உட்பட) இல்லை, தற்சமயம் மாடத்தில் இருக்கும் விநாயகரும், சுப்ரமணியரும் இப்படத்தில் இல்லை
மேலும் அஷ்ட சக்தி மண்டப மேல் மாடத்தில் தற்போது இருக்கும் மீனாட்சி அம்மன் திருவிளையாடல்கள் இப்படத்தில் இல்லை.




1912ல் அம்மன் சன்னிதி.
ஆனால் இப்படத்தில் எல்லா சிற்பங்களும், உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் வண்ணங்கள் இல்லாமல் இருப்பது சற்றே குறையாக தெரிந்தாலும், உள்ளதை உள்ளபடி சொல்லும் படங்கள் அழகாக இருப்பது சிறப்பு.


1935ல் மீனாக்ஷி அம்மன் சன்னிதி

மீனாக்ஷி அம்மன் கோவில் அரிய படங்கள் # 1

45 பதிவுகளை இட்டு நான் மீனாக்ஷி அம்மன் கோவில் படங்களை முடித்தாலும் அம்மனோ இந்தா இதையும் மக்களுக்கு காட்டு என்பது போல் மேலும் சில அரிய படங்களை காட்டியுள்ளார். அதை இங்கேயும் அடுத்த வரும் பதிவுகளிலும்.
1890ல் பாண்டவர் மண்டபம். தொங்கும் விளக்குகள் அதற்க்குச் சான்று
1908ல் பாண்டவர் மண்டபம்
அடுத்த பதிவு அம்மன் சன்னிதி வெளிப்புற படம்

Friday, July 14, 2006

அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில்

அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில்,



மதுரை, தெற்குமாசிவீதியில் உள்ள மிகவும் புகழ் பெற்ற தலம். அம்மன் கோவிலுக்கு செல்ல முடியாதவர் பலர் இக்கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

இங்குள்ள தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். மருத்துவமனை சிகிச்சையும் விலகுகிறது.

இறைவனை வணங்குவோர்க்கு மன நிம்மதி கிடைக்கும்.

கருணையே உருவான இத்தலத்து அம்பாளை வழிபட்டால் திருமணவரம், குழந்தை வரம் ஆகியன கிடைக்கின்றன.

சுவாமிக்கு வஸ்திரம் வழங்கி பெரும் அளவில் புண்ணியம் பெருகின்றனர்.

கல்வி வரம், எடுத்தகாரியம் நடைபெற இத்தலத்தில் இருக்கும் குரு பகவானை வழிபடலாம்.

தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில் இது. இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும்.திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.

இங்குள்ள மூலவர் மதுரையில் உள்ள சிவதலங்களில் அளவில் பெரியவர்.

வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் ஆகியவற்றில் இருந்தெல்லாம் இக்கோயிலுக்கு உடல்நலம் வேண்டி வருகிறார்கள்.
திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.
எமதர்மராஜன் வழிபட்டு மரணபயம் நீங்கிய தலம்.

சுவாமிக்கு இத்தலத்தில் பால் அபிசேகம் செய்தல் சிறப்பு.

தேன், எண்ணெய், இளநீர்,சந்தனம்,பன்னீர்,நல்லெண்ணெய் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்து நேர்த்திகடனை செய்கின்றனர்.

அம்பாளுக்கு மஞ்சள், சிவப்பு நிற புடவை சாத்து இத்தலத்தில் சிறப்புவாய்ந்த வழிபாடாகும்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர்.

இங்கிருக்கும், நவகிரஹங்களை வணங்கிட கிரஹ தோஷங்கள் நீங்கும்.

வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

தென்திருவாலவாய் என்றால்?

பண்டைய காலத்தில் “திருவிளையாடல் புராணத்தில்” மதுரைக்கு எல்லை காட்டிய படலம் என்று உண்டு. ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை நகரின் எல்லை எதுவென்றே தெரியாமல் போனது. அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க வங்கிய சேகர பாண்டிய மன்னன் சிவ பெருமானிடம் வேண்டுகிறான். அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசி போடுகிறார். போட்டு விட்டு அந்த பாம்பு மதுரையையே ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டுகிறது.அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய படமும், வாலும் ஒன்று சேர்ந்ததாக சொல்கிறது திருவிளையாடல் புராணம். மேலும் இந்த கோயிலும் தெற்கு திசையில் உள்ளது. அதனால் தென்திருவாலவாய் என்று பொருள்படுகிறது. ஆலவாய் என்ற பாம்பு , தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென்திருஆலவாய் என்று பெயர் வந்தது.


அஸ்வத்தபிரதட்சண்யம்

இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணயம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர். இத்தலத்தில் 60ம் (ஷஷ்டியப்த பூர்த்தி) கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது.அவர்களே சதாபிசேகமும் (80 ) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.

மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் 1. பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.

2. இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் ஸத்பதவி கிடைக்கும்.

3. முக்தீசுவரரை வணங்கினால் முக்தி கிடைக்கும்.

4. தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

5. தவிர இந்த நான்கு கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும்.


எமன் வழிபட்ட தலம்

மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை (சொற்றுனை வேதியன்) விடச் சிறந்த நண்பனும் இல்லை.இத்தகைய வைத்தியநாதப்பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்தலமே தென்திருவாலவாய் ஆகும். தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. அவர் சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார்.அப்போது தென்திருவாலவாய கோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு., இனி உனக்கு மரணபயமே கிடையாது என்கிறார்.எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் இது.

கந்த சஷ்டி ஐப்பசி 6 நாட்கள் திருவிழா சுப்ரமணியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள்.

அன்னாபிசேகம் ஐப்பசி பௌர்ணமி நாளில் சிறப்பாக நடைபெறும்.

ஆடிப்பூரம், கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிசேகம் சிறப்பாக நடைபெறும்.

பௌர்ணமி தோறும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும்.

ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய விஷேச தினங்களில் 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

தவிர தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு உள்ளிட்ட அனைத்து விஷேச நாட்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெறும்.

மாதத்தின் பிரதோஷ நாட்களில் வெகுசிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்படைகின்றனர்.

தல வரலாறு :
மதுரை மாநகரில் சைவ சமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம்.அப்போது மதுரையை ஆண்ட சைவ சமயத்தை சேர்ந்த பாண்டிய மன்னன், தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான்.அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள்.மிகவும் தீவிர சைவபற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள்.அப்போது வினைபயனாக பாண்டியனுக்கு வெப்பு நோய் வருகிறது. உடம்பு பூராவும் உஷ்ணத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய், அக்கொடிய நோயினால் அவதியுற்று கூன்விழுகிறது அதுவே அம்மன்னனின் பெயராகவும் “கூன்பாண்டியன்” என்றாகி விடுகிறது. அந்த நோயை தாங்க முடியாமல் தவிக்கிறான் மன்னன். அப்போது சமணர்கள் எவ்வளவோ மந்திர-தந்திர வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி, தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிஷேக அர்ச்சனைகளும் செய்து அந்த திருநீற்றை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய, சமணர்கள் ஒத்துகொள்ள மறுக்கின்றனர், பின் இருவருக்கிடையில் சமரசம் செய்து வலப்பக்கம் சமணர்களின் மந்திர மருத்துவமும், இடபாகத்தில் ஞானசம்பந்தரின் திருநீறு மருத்துவம் செய்ய இடப்பக்கம் குணமடைகின்றது, ஆனால் வலப்பக்கம் எந்த வித மாற்றமும் இல்லாமல் நோய் அப்படியே இருக்கிறது. இதைகண்ட மன்னன் சைவ சமயத்தை போற்றியும், சமணத்தை துறந்து இருபுறமும் திருநீறு பூச, அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது. கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளால் நெடுமாறனாக நிமிர்ந்து, இறைவனின் அருளை முழுமையாக உணர்ந்து தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சிவதொண்டு புரியலானார்.

நன்றி தினமலர்

அடுத்த பதிவில் ஏடேறிய படலம் நிகழ்ந்த ஏடகநாதர் கோவில்.

Friday, July 07, 2006

199: மடப்புரம் பத்ரகாளி

மதுரை செல்லும் போது, கிராம தெய்வத்தை, க்ஷேத்திர தெய்வத்தை, குல தெய்வத்தை என்று எல்லோரையும் வணங்க வேண்டும் என்று எண்ணுவேன், க்ஷேத்திர தெய்வத்தை வலம் வந்து விட்டேன், இப்பொது எல்லை தெய்வத்தை வலம் வருகிறென்.


நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வருபவர்களிடம் சத்தியமாச் சொல்றேன் என்று சத்தியப் பிரமாணம் வாங்குவது தற்போதைய நடைமுறை. ஆனால், நீதிபதிகளே கோயிலுக்கு வந்து குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காளிக்கு முன்பாக சத்தியம் பண்ணவைத்து தீர்ப்பெழுதிய சம்பவங்கள் மடப்புரம் காளி கோயிலில் நடந்திருக்கின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகிலிருக்கிறது மடப்புரம். இங்கு வளைந்தோடும் வைகையின் விளிம்பில் ஆக்ரோஷ அவதாரமாக நிற்கிறாள் பத்ரகாளி.

ஒரு பிரளய காலத்தில் மதுரை மாநகரை வெள்ளம் சூழ்ந்தபோது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி, மதுரையின் எல்லையைக் காட்டச் சொல்லி சிவனை வேண்டினார். அப்போது ஆதிசிவன் பாம்பு வடிவில் தோன்றி மதுரையின் நான்கு புறத்தையும் தன் உடலால் வளைத்துக் காட்டினார். அப்போது பாம்பின் படமும் அதன் வாலும் ஒன்றையன்று தொட்டுக்கொண்டு நின்ற இடம்தான் படப்புரம் எனப்பட்டது. இதுவே மருவி மடப்புரமாக ஆனது.

ஒருமுறை பார்வதியை அழைத்துக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பிய சிவபெருமான், மடப்புரம் பகுதிக்கு வந்தார். காடு மிகப் பரந்து கிடக்கிறது. இதற்குமேல் உன்னால் வரமுடியாது தேவி... அதனால் நீ இங்கேயே இரு. நான் மட்டும் வேட்டையாடிவிட்டு வருகிறேன் என்று பார்வதியிடம் சொன்னாராம். ‘இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் நான் மட்டும் தனியே இருப்பது எப்படி?’ என்று பார்வதி கேள்வி எழுப்ப, அய்யனாரை அழைத்து பார்வதிக்குத் துணையாக வைத்துவிட்டுப் போனார் சிவபெருமான். அப்போது பார்வதி, இந்த இடத்தில் நான் இருப்பதால் இந்த ஸ்தலத்துக்கு ஏதாவது சிறப்பைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க, இந்த இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் இருக்கும் வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும்! என்று வரம் கொடுத்தாராம் சிவபெருமான்.

அதன்பின்தான் மடப்புரத்தில் காளிவடிவில் தங்கினாள் சக்தி. காளிக்குத் துணையாக இருந்த அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக இங்கே ஆட்சி செலுத்தினாலும், சக்தியின் வடிவமாக நின்றுகொண்டிருக்கும் பத்ரகாளிக்குத்தான் பிரதான வழிபாடு!

சிவபெருமான் அருளிய வரத்தின்படி மடப்புரத்திலிருந்து மூன்று மைல் தொலைவுக்குள் வைகையில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்கிறது. காசு, பணம் செலவு செய்து காசிக்குப் போக முடியாதவர்கள் மடப்புரத்தை ஒட்டியுள்ள திருப்புவனத்துக்கு வந்து தங்களின் முன்னோர்களுக்குக் காரியங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு போவது இன்றும் நடக்கிறது.

கோயில் வளாகத்துக்குள் வெட்டவெளியில் கூரைகூட இல்லாமல் நாக்கைத் துருத்தியபடி ஆக்ரோஷமாக நிற்கிறாள் பத்ரகாளி. காளியின் இரண்டு பக்கமும் பிரமாண்டமாக இரண்டு பூதங்கள். பதின்மூன்றடி உயரம் கொண்ட காளியின் தலைக்குமேல் ராட்சதக் குதிரை ஒன்று தாவியபடி நிற்கிறது.

காளியை மனமுருகி வேண்டி நின்ற பக்தர் ஒருவர் எந்த நேரமும் உனக்குப் பக்கத்திலேயே இருக்க எனக்கு வரம் கொடுக்கவேண்டும் என்றாராம். அவரது பக்தியை மெச்சிய காளி அவரைக் குதிரையாக மாற்றி, தனக்கு நிழல்தரும் குடையாக வைத்துக்கொண்டாராம். தன்னை நாடிவரும் பக்தர்களைத் தாமதமின்றிக் காப்பாற்ற ஆயத்த நிலையில் காளியின் வலதுகையில் திரிசூலம். அநீதியை அழிக்கத் திரிசூலம் ஏந்திநிற்கும் காளி, அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.

காளிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டுவந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும். காளிக்குப் பிடித்தமான காணிக்கைப்பொருள் எலுமிச்சம்பழ மாலைதான். காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்கள் கோக்கிறார்கள். குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் கோக்கவேண்டியிருக்கும்.

மடப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாருக்காவது கொடுக்கல், வாங்கல் பிரச்னை என்றால் பெரும்பாலும் கோர்ட்டுக்கோ போலீஸக்கோ போவதில்லை. அவர்கள் நாடிவரும் கோர்ட், பத்ரகாளி கோயில்தான்.

காளிக்கு வலப்புறத்தில் சின்னதாக ஒரு திண்டு. இதன் பெயர் சத்தியக்கல். இரண்டு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தத் திண்டில் இருவரும் சூடத்தை ஏற்றி, அணைத்து நாங்கள் தப்புச் செய்யவில்லை என சத்தியம் செய்யவேண்டும். பின்னர் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு காளிக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடிதபடி, நாங்கள் தப்பு செய்யவில்லை என வாக்குக் கொடுக்க வேண்டும்.

இங்கு யாராவது பொய்ச் சத்தியம் செய்தால் முப்பது நாட்களுக்குள்ளாக அந்த நபரைக் குறைகேட்டுவிடுமாம் காளி. சில நேரம் பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதுண்டு. இப்படித் தண்டிக்கப்படுபவர்கள் மறுபடியும் காளியிடம் வந்து காணிக்கை செலுத்திப் பரிகாரம் தேடிக்கொண்டு போவது இப்போதும் நடக்கிறது.



இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது. காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக் கிறார்கள். அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க திராணி இல்லாதவர்கள் ஈரத்துணியுடன் இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு, அவங்களை எதுத்துக் கேக்க எனக்கு சக்தியில்லை. நீதான் எனக்கு கேட்டுக் கொடுக்கணும் என்று கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுகிறார்கள். இந்தக் கண்ணீருக்கு மனமிரங்கிவரும் காளி, அநியாயக்காரர்களை அடித்து எழுப்பி இம்சை பண்ணி அவர்களையும் தன்னுடைய வாசலுக்கு வரவழைத்து விடுகிறாள்.

காளியின் மகத்துவம் தெரிந்த எவரும் இங்கு வந்து பொய்ச்சத்தியம் பண்ணத் துணிவதில்லை.

காளிக்குப் பின்னால் பிராகாரத்தில் வேப்பமரம் ஒன்று உண்டு. இதற்கும் தெய்வசக்தி இருக்கிறது.
நீண்டநாட்களாகத் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்கள் இந்த மரத்தின் மடியில் மஞ்சள் தாலியைக் கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டி விட்டால் தாமதிக்காமல் அவர்களது வீட்டில் குவா&குவா சத்தம் கேட்கிறது. வேப்பமரத்தில் கட்டப்பட்டுள்ள தாலி மற்றும் தொட்டில்களின் எண்ணிக்கை இதையெல்லாம் பறைசாற்றுகின்றன.

எல்லா நாட்களும் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை கோயில் திறந்திருக்கிறது.

வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கே திருவிழா கணக்காகக் கூட்டம் கூடுகிறது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் இப்படித் திருவிழாக் கூட்டம் கூடுவதாலோ என்னவோ, பத்ரகாளிக்கென இங்கே தனியாக திருவிழா எதுவும் எடுக்கப்படுவதில்லை.

அடுத்த பதிவு, கூன் பாண்டியணுக்கு மருத்துவம் செய்ய திருநீறு தந்த தென் திருவாலய கோவில்.

195: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 45





தெற்க்கு கோபுரகாட்சி

திருவாச்சியில் உள்ள துவாரபாலகர்



மூலிகை ஓவியங்கள்

கிளிமண்டபத்தில் உள்ள கோவிலின் மாதிரி

அம்மனின் பிறந்த நட்சித்திரமான மாசி மகத்தில் விளக்கு பூஜை நடந்த போது

இத்துடன், என் கோப்பில் இருக்கும் மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் நிறைவடைகிறது.

அம்மா அங்கயற்கன்னி, சொக்கருடன் அருளும் மீன்கொடியளே மீனாக்ஷி!, இப்படங்களை தரிசித்தவர்கள் எங்கிருந்தாலும் முதல் பீடமாம் இந்த மனோன்மணி பீடத்தில்(மதுரையில்), உன்னை தரிசித்த புண்ணியம் வழங்கி, அந்த அபிராமி பட்டருக்கும், ஏனை அடியோருக்கும் தந்த பெருவழ்வை தந்தருளவும், உன்னை வணங்கும் அடியவர்கள் எந்த பிறவிபிணிகளும் அன்டாத வண்ணம் காத்தருளும் உன் திருவடியை வணங்குகிறேன்.

அவளருளால் 250 க்கும் மேற்ப்பட்ட படங்களை இங்கே பத்திதுள்ளேன்.

இப்பதிவுகளுக்கு காரணமான அத்தனைபேருக்கும், கோடான கோடி நன்றிகளுடன்

சிவமுருகன்.

அடுத்த பதிவு மடப்புரம் காளி.

194: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 44









கொபுர காட்சிகள் # 5


அடுத்த பதிவு, என் கோப்பில் இருக்கும் மீனாக்ஷி அம்மன் கோவில் படங்களின் நிறைவு பதிவு.