Thursday, September 18, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்,

முந்தைய பதிவில் திக் விஜய காட்சியை மூலிகை ஓவியத்தில் காட்டியிருந்தேன். யார் யாரென தெரியவில்லை என்று என்னுடைய நன்பர்கள் கேட்க அதை விவரிக்க இப்பதிவு.

திக் விஜய நாளன்று இந்த காட்சி மதுரை மாசி விதிகளில் நடக்கும். அம்மன் சந்நிதி - கீழ மாசி வீதி சந்திப்பில் - சூரிய பகவான், கீழ மாசி வீதி - தெற்க்கு மாசி வீதி சந்திப்பில் (மஹால் வடம் போகி தெருவில்) - அக்னி பகவான், தென்திருவாலவாய் சுவாமி கோவில் வாசலில் - எம தருமன், தெற்கு - மேற்கு மாசிவிதி சந்திப்பில் - பித்ரு, மேல மாசிவிதி திண்டுக்கல் ரோடு சந்திப்பில் - வருண பகவான், மேற்கு - வடக்கு மாசி வீதி சந்திப்பில் - வாயு தேவன், வடக்கு கிருஷ்ணன் கோவில் அருகில் - குபேரன் மற்றும் வடக்கு மாசி வீதி - கீழ மாசி வீதி சந்திப்பில் - ஈசானன். பின் கீழமாசி வீதியில் சொக்கநாத பெருமானுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் நேர் எதிர் நடக்கும் திருக்காட்சி கண்கொள்ளா காட்சி.

அதே போன்ற அனைத்து வித கடவுளரும் வரும் ஒரு ஓவியம். அழகாக படமாக்கியுள்ளார் பிரபு என்ற கலைஞர்.



சூரிய பகவான் - மேலிருந்து மூன்றாவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
அக்னி பகவான் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து முதலாவது கட்டம்.
எம தருமன் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
பித்ரு - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து மூன்றாவது கட்டம்.
மழை கடவுளான வருண பகவான் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து கடைசி கட்டம்.
வாயு தேவன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து முதலாவது கட்டம்.
குபேரன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
மற்றும்
ஈசானன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து மூன்றாவது கட்டம்.

என்ற அஷ்ட திக்கு பாலகர்களை மூலிகை ஓவியத்தில் திக்கு விஜயம் செய்யும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.

10 comments:

Test said...

திரு சிவமுருகன் அவர்களே
தங்களின் வலைபூவை தவறாமல் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று ஆனால் இன்று வந்திருக்கும் படத்தை பார்த்து பிரமித்தேன், ஓவ்வரு கட்டத்திலும் அன்னை இன்ன பிற தெய்வங்களையும் வென்று இறுதியில் ஆனந்தகூத்தனிடம் அடி பணிவது அருமையிலும் அருமை. இரண்டு வருடம் முன்பு திருமணமும் தேன்னிலவும் முடிந்து மதுரை கோவிலுக்கு வந்த போது கூர்ந்து கவனிக்க வேண்டியவைகளை இப்பொது தான் காண்கிறேன், தொடரட்டும் உங்கள் சேவை...

நன்றி
லோகன்

குமரன் (Kumaran) said...

திக்விஜயம் என்ற சொல்லுக்கே இன்று தான் பொருள் புரிந்தது சிவமுருகன். நல்ல இடுகை. தொடர்ந்து படித்தும் படங்களைப் பார்த்துக் கொண்டும் வருகிறேன். நன்றிகள்.

சிவமுருகன் said...

வாங்க லோகன்,
//திரு சிவமுருகன் அவர்களே
தங்களின் வலைபூவை தவறாமல் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று//

மிக்க நன்றி.

//ஆனால் இன்று வந்திருக்கும் படத்தை பார்த்து பிரமித்தேன்,ஓவ்வரு கட்டத்திலும் அன்னை இன்ன பிற தெய்வங்களையும் வென்று இறுதியில் ஆனந்தகூத்தனிடம் அடி பணிவது அருமையிலும் அருமை.//

படம் எடுத்தவர் திரு. சுரேஷ் - வரைந்தவர்கள் கேரள ஓவியர்கள்.

ஒரு நற்சொல்லை சொல்லியுள்ளீர்கள் நன்றி.

//இரண்டு வருடம் முன்பு திருமணமும் தேன்னிலவும் முடிந்து மதுரை கோவிலுக்கு வந்த போது கூர்ந்து கவனிக்க வேண்டியவைகளை இப்பொது தான் காண்கிறேன், தொடரட்டும் உங்கள் சேவை...//

அவசியமாக தொடர்கிறேன். நன்றி.

சிவமுருகன் said...

அண்ணா,
//திக்விஜயம் என்ற சொல்லுக்கே இன்று தான் பொருள் புரிந்தது சிவமுருகன்.//

இது கொஞ்சம் ஓவர தெரியல? :-). எனக்கோ கொஞ்சம் தான் தமிழ் தெரியும் உங்களுக்கோ, வேண்டாம் நான் ஒன்றும் சொல்லவில்லை.

//நல்ல இடுகை. தொடர்ந்து படித்தும் படங்களைப் பார்த்துக் கொண்டும் வருகிறேன். நன்றிகள்//

மிக்க நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

அஷ்ட திக்குகளில் இருக்கும் அரசர்களை வென்று வருவதுதான் திக் விஜயம் என்றே நினைத்திருந்தேன் சிவா. உங்களுடைய இந்த இடுகைதான் மாறுபட்ட கோணத்தைக் சிந்திக்க வைத்தது. நன்றி....படங்களுக்கும் :)

சிவமுருகன் said...

//அஷ்ட திக்குகளில் இருக்கும் அரசர்களை வென்று வருவதுதான் திக் விஜயம் என்றே நினைத்திருந்தேன் சிவா. உங்களுடைய இந்த இடுகைதான் மாறுபட்ட கோணத்தைக் சிந்திக்க வைத்தது. நன்றி....படங்களுக்கும் :)//

மௌலி அண்ணா நீங்களும் சொல்லிட்டீங்களா அவ்ளோ தான் அடுத்த பதிவு பதிச்சா மாதிரி தான்! எதாவது ஏடாகூடமா சொல்லிருந்தா சொல்லுங்க, மாத்திருவோம்.

"ஒவ்வொரு திசையிலிருந்த மன்னர்களை வென்றபடி முன்னேறியவர் கடைசியாக இருக்கும் அஷ்ட திக் பாலர்களையும் வெல்கிறாள்", என்று தான் என்னோட பாட்டி எனக்கு சொல்லிவச்சாங்க. (சித்திரை திருவிழா சமயத்துல குடும்பத்தோட தெற்க்கு மாசிவீதியில இருக்குற தென் திருவாலவாய சுவாமி கோவில் வாசல்ல உக்காருவோம், சாமி வர்ர வரை பாட்டியோட உபன்யாசம் தான், பெரியாப்பா பசங்க, நானும் என்னோட அண்ணனும் கேட்க பாட்டி கதையால் சொல்ல நாங்க உம் கொட்டி கேட்டுகிட்டே இருப்போம்.) அந்த இடைபட்ட அரசர்களை விட்டு விட்டனரோன்னு ஒரு ஐயம் இருந்தது-இருக்கிறது-இருக்கும். நீங்கள் சொல்வது அந்த ஐயத்தை மேலும் பலப்படுத்துகிறது.

படங்கள் எடுத்தவர் திரு பிரபு. அடியேன் அதை பதித்து விட்டேன்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

//மௌலி அண்ணா நீங்களும் சொல்லிட்டீங்களா அவ்ளோ தான் அடுத்த பதிவு பதிச்சா மாதிரி தான்! எதாவது ஏடாகூடமா சொல்லிருந்தா சொல்லுங்க, மாத்திருவோம்.//

ஏடாகூடமா ஏதும் இல்லீங்க சிவா. எனக்கு சொல்லியது/புரிந்து கொண்டதை நான் சொன்னேன்..அஷ்டே!..:)

நீங்க சொல்லியது அன்னையின் சிறப்பை உயர்த்தும் விதமாகத்தான் இருக்கு, ஆகவே நோ ரென்ஷன்ஸ். :)

ஏது இந்த வாரம், இணையத்தில் பாட்டிகள் வாரம் போல. வல்லியம்மா, கீதாம்மா, இப்போ நீங்கன்னு எல்லாரும் அவரவர் பாட்டிகளை பற்றி பகிர்ந்துகொள்ளும் சிறப்பு வாரம்.. :)

சிவமுருகன் said...

//ஏடாகூடமா ஏதும் இல்லீங்க சிவா. எனக்கு சொல்லியது/புரிந்து கொண்டதை நான் சொன்னேன்..அஷ்டே!..:)//

ஹௌதா?

//நீங்க சொல்லியது அன்னையின் சிறப்பை உயர்த்தும் விதமாகத்தான் இருக்கு, ஆகவே நோ ரென்ஷன்ஸ். :)//

ரேஷன்னா? ஓ டென்ஷன் யு மீன் பத்து மகன்? :)

//ஏது இந்த வாரம், இணையத்தில் பாட்டிகள் வாரம் போல. வல்லியம்மா, கீதாம்மா, இப்போ நீங்கன்னு எல்லாரும் அவரவர் பாட்டிகளை பற்றி பகிர்ந்துகொள்ளும் சிறப்பு வாரம்.. :)//

அப்படியா அப்போ போயி பார்த்துட வேண்டியது தான். :).

அந்த நேரத்துல பாட்டியோட ஞாபகம் வந்தது. அவங்க சொல்லி தான் பல கதையே தெரியும், கோயில்களில் அதுவும் தாங்கும் இடங்களில் மட்டும் காணப்படும் யாளியின் கதை சொல்றதுக்குள்ள சாமி வந்ததால அந்த கதை கேட்க முடியம போச்சு. :-(. சொல்லி கேட்டிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்?

குமரன் (Kumaran) said...

திக்விஜயம்ங்கற சொல்லுக்குப் பொருள் தெரியும் சிவமுருகன். ஆனா மௌலி சொன்ன மாதிரி இது வரைக்கும் திக்விஜயம்ன்னா எல்லாத் திசைகளுக்கும் சென்று எல்லா அரசர்களையும் வெல்றதுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். இந்தப் படங்களைப் பார்த்த பின்னாடி தான் திசைக்காவலர்களை வெல்றது தான் திக்விஜயம் - அட் லீஸ்ட் அம்மனுக்கு - என்று புரிந்தது. :-) சின்ன வயதில் மாசி வீதி மூலைகளில் நடக்கும் 'சண்டை'களைப் பார்த்திருந்தும் இது இதுவரைக்கும் உறைக்கவில்லை. :-)

சிவமுருகன் said...

//திக்விஜயம்ங்கற சொல்லுக்குப் பொருள் தெரியும் சிவமுருகன்.//

அப்பிடியா? :-)

//ஆனா மௌலி சொன்ன மாதிரி இது வரைக்கும் திக்விஜயம்ன்னா எல்லாத் திசைகளுக்கும் சென்று எல்லா அரசர்களையும் வெல்றதுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். இந்தப் படங்களைப் பார்த்த பின்னாடி தான் திசைக்காவலர்களை வெல்றது தான் திக்விஜயம் - அட் லீஸ்ட் அம்மனுக்கு - என்று புரிந்தது. :-)//

கரீக்ட்டு

//சின்ன வயதில் மாசி வீதி மூலைகளில்//

நடு நடுவுல கூட் நடக்குமே?

//நடக்கும் 'சண்டை'களைப் பார்த்திருந்தும் இது இதுவரைக்கும் உறைக்கவில்லை. :-) //

வருகைக்கு நன்றி