Friday, June 09, 2006

164: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 35

ஆயிரங்கால் மண்டபம் பற்றி ஆயிரம் பதிவிட்டாலும் போதாது, அதை வெறும் 3 பதிவில் சுருக்கி இட்டுள்ளேன். கண்ணில் தோண்றிய காட்சிகள் உண்மைக்கு சாண்று என்பார்கள். கற்பனை காட்சிகள் கவிக்கு அழகு என்பர். இதோ மேலும் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.


மண்டபத்தின் நுழைவாயில், ஒரு சிறப்பு புகைபடம்

ஸ்ரீ விநாயகர்

ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு உட்புறகாட்சி. மண்டபத்தில் சூரிய ஒளி வர ஏதுவாக வேயபட்ட கூரை


பாதுகாக்கப்படும் சிற்பங்களின் ஒரு சிறப்பு பார்வை.


ஒரு உற்று பார்வை.

அக்கால சிற்பகலைக்கு சாண்று. நுண்ணிய வேலைபாடுகளை இங்கே காணலாம்.

பிக்ஷாடனார், பூதகனங்களுடன்

மயில்மீதமர்ந்த ஸ்ரீ முருகன்

வெளிநாட்டவர் சிலை

பகல் பொழுதில் சூரியனும் காட்சி தரும் சமயத்தில்
அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அதிசய படங்கள் # 1
அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அதிசய படங்கள் # 2


கலியுகத்தில் மனிதன் எவ்வாறு இருப்பான் என்று திருமலை மன்னர் கேட்ட கேள்விக்கு அவருடைய ஆஸ்தான சிற்பி செதுக்கிய விளக்க சிற்பம்.

சிலையில் ஆடவன் மேல் ஒரு பெண் அமர்ந்திருப்பாள், ஆடவனுக்கு வலது கரமிருக்காது (முதல் படம்) , பெண்ணிற்க்கு இடது கால் இருக்காது (மேல் படம்), மக்கள் தங்களது முக்கிய கடமைகளை செய்ய முடியாத நிலையில் இருப்பர் என்று சொல்லியுள்ளார். மேலும் பெண்ணின் பிடியில் ஆண்ணெனப்பட்டவன் சிக்கியிருப்பான் அவனது குடுமி அப்பெண்ணிடம் இருக்கும் என்று சொல்லியுள்ளார்.

(அவள் மனைவியா, மகளா, சகோதரியா,அன்னையா, அல்லது தோழியா என்று சொல்லவில்லை)

அடுத்த பதிவில் விடுபட்ட அம்மன் கோவிலின் சில உட்புற படங்கள்.

163: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 34

இப்பதிவில் மேலும் சில படங்கள்.

ஒளி ரூபனுக்கு விளக்குகள் தேவையோ?
இத்தூணிலிருந்து பார்த்தால் ஆயிரங்கால் மண்டபத்தின் அனைத்து (இவ்வரிசை தூண்கள் தவிர) தூண்களும் தெரியும் படி அமைந்துள்ளது.
காலை ஒளிமயமான காட்சி.

ரம்யமான பகல் நேர காட்சி.

மயக்கும் மாலை பொழுதில் அழகு மண்டபமா? மூர்த்தியா? என்று விவாதிக்க தூண்டும் காட்சி.

இத்தனை அதிசயங்களை கொண்ட மண்டபம் காண்போரை கவராதா என்ன? இதற்க்கு வெளிநாட்டவர் விதிவிலக்கா?

அடுத்த பதிவில் இம்மண்டபத்தின் சில சிற்பங்கள். (விநாயகர், முருகன், பிக்ஷாடனார் மேலும் வெளிநாட்டவர் ஒருவரின் சிலை உட்பட கலியுகத்தை விளக்கும் ஒரு அறிய சிற்பமும் உள்ளது அதையும் பார்ப்போம்)

Thursday, June 08, 2006

162: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 33

ஆயிரம் கால் மண்டபம்,
நூறுகால் மண்டம்,
ஆயிரம் கால்மண்டபம்,
கம்பத்தடி மண்டபம்,
இப்படி மண்டபங்கள் நிறைந்த, சூழ்ந்த தலம் நமது மீனாட்சி அம்மன் கோவில், ராயர் கோபுரத்தையும் கட்டிமுடிக்கப்பட்டிருந்தால், புதுமண்டபமும், நகரா மண்டமும் கோவிலின் உள்ளே இருந்திருக்கும், தேரை பட்டதால் இக்கோபுரம் கட்டி முடிக்க முடியாமல் போனதாக ஒரு கதையுண்டு.

இப்பதிவில் ஆயிரங்கால் மண்டபத்தை பற்றி பார்க்க உள்ளோம்.



ஆயிரங்கால் மண்டபம் அருங்காட்சியகமாக அறிவிக்கப்பட்டு, பல அறிய சிலைகள், பொருட்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.

இம்மண்டபத்தின் முத்து இசை தூண்.

இம்மண்டப படங்களை பற்றி நான் முன்னரே நிகழ்வுகள் வலைபூவில் மலையும் மாங்காயும் என்ற பதிவில் ச.திருமலை என்பவரை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவருடைய பதிவில் மிக அழகான படங்கள், பலகோணங்களில் இருந்தது, கண்டு வியந்தவன் அப்போதே எண்ணிவிட்டேன் நாம் ஆயிரங்கால் பதிவை பதிக்க போவதில்லை என்னுடைய இப்பதிவிற்கான சில படங்களை மட்டும் பதித்து விட்டு, அவருடைய பதிவிற்க்கு சுட்டி தரவேண்டும் என்று எண்ணியிருந்தேன். அப்படியே செய்தும் விட்டேன். சுட்டி இங்கே.

மேலும் சில படங்கள் அடுத்த பதிவில்.

Monday, June 05, 2006

160: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 32

ஈசனை தியானித்து அவரது அக்னி ரூபமான காலபைரவர் கோலத்தில் கண்டு “ஈஸ்வர” பட்டம் பெற்ற சனீஸ்வரர். நமது பாவ புண்ணியங்களுக்கேற்ப நன்மை தீமைகளை இருக்கும் போதே தந்து நமது பவபுண்ணிய கணக்குகளை சமமாக்குகிறார். இதன் மூலம் ஜீவாத்மாவானது இவ்வுலகில் அலைகழிக்கப்படாமல் பரமாத்மாவான அவ்விறைவினிடம் சேர்க்க முக்கிய காரணமாகிறார். இவர் தனியாக இருக்கும் போது பொங்கு சனி என்று குறிப்பிடப்படுகிறார், அவ்வாறு சுவாமி சன்னிதியில் பொங்கு சனிஸ்வரரை இப்போது வணங்குகிறோம்.





இவருக்கு அடுத்தபடியாக உள்ள தூணில் இருப்பவர், ஒரு ரிஷிபத்தினியின் சிலை, அவருடைய கதை பற்றி எனக்கு தெரியாது, எனக்கு தெரிந்ததெல்லாம் கர்ப காலத்தில் பெண்கள் இவரிடம் தமக்கு சுக பிரசவம் ஆக வேண்டிக்கொள்வர், சுகமாக முடிந்தவுடன் எண்ணை சாற்றியும், பாவாடை சாற்றியும் வழிபடுவர். இதற்க்கு மேல் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்வேன்.

அடுத்த தூணில் இருப்பவர், கோபியர் மன்னன், குழலூதும் கண்ணன். அங்கே அவர் நிற்பது குழலூதிய படி, அழகாக இருக்கும் இச்சிலை அனைவருக்கு எட்டிவிடும் அதனாலோ என்னவோ இச்சிலை சற்றே சிதிலமடைந்து உள்ளது.

அடுத்த பதிவு நிறைந்த மணதுடன் வெளி பிராகரத்திற்க்கு வருகிறோம்.

159: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 31

இப்பதிவில் சிவனின் ஆஸ்தான பிளைகளான சமயகுரவர்கள் நால்வரின் சன்னிதிக்கு செல்கிறோம். இச் சன்னிதி, பத்ர காளிக்கு இடப்பக்கம், அமைதியே உருவான தென்மேற்கு மூலையில் உள்ளது. இந்த சன்னிதியில் அதிகாலை அபிஷேகத்திற்க்கு பிறகு ஞானப்பால் வழங்கப்படுவதும், இரவு பள்ளியறை பூஜையின் போது இங்கிருந்து தான் தேவார பாடல் பாட ஆரம்பிப்பர்.

இவர்களை வணங்கி வலப்பகம் திரும்புகையில் உள்ளது பிரசாத ஸ்டால்


அடுத்த பதிவில் உட்ப்ரகார படங்கள்

முந்தைய பதிவு ____________________________________ அடுத்த பதிவு

Thursday, June 01, 2006

155: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 30

இப்பதிவில் சிவசங்கரனின் அவதாரமான அனுமனை தரிசிக்கிறோம். செந்துரத்தை தன் உடல் முழூவதும் பூசி, ராம காதைகளை கேட்டு கொண்டிருக்கும் அந்த ராம பக்தன் இதோ, தேவ சிற்பி விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்டு, ஓரே இரவில் கிடைக்கபெற்ற அனுமனுனின் சிலை, பார்க்கவும் கண்கோடி வேண்டுமே, இதை பதிக்க என் முன்னோர் என்ன தவம் செய்தனரோ.
ஆஞ்சனேயர்

வெற்றிலை மாலை சாற்றியும், எள் விளக்கேற்றியும் வணங்குகின்றனர்.

ஆண்களும்...
பெண்களும்...
குடும்பமாகவும்... குழுக்களாகவும்... இவரை வேண்டுவது சிறப்பு. இவரை ஆஞ்சனேயர் துதி செய்து வலம் வருவோம். இவருக்கு எதிரில் சொக்கநாதரின் பிட்டுக்கு மண்சுமந்த லீலை உள்ளது.
மேலும் சில படங்கள்
இப்பதிவு செல்வன் அவர்களின் கவனத்தை பெரும் என்று நம்புகிறேன்.

Wednesday, May 31, 2006

154: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 29


வீரபத்திரகளை வலம் வந்து கம்பத்தடி மண்டப்பத்தின் தெற்க்கு பகுதியில் வீரபத்திரர்களை போலவே உக்கிரமாக ஊர்த்தவதாண்டவரும், பத்ரகாளியும் அகோர தாண்டவமாடி நிற்கிறார்கள், இவர்களின் உக்கிரம் தனிய, வெண்ணை சாற்றி வழிபடுகின்றனர்.



மேலும் வெள்ளிதோறும் பெண்கள் பலர் இங்கே எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

அடுத்த பதிவில் தேவ சிற்பி விஸ்வகர்மா செதுக்கிய ருத்ர அவதார அனுமான்.

Monday, May 29, 2006

152: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 28

நூறுகால் மண்டாபம் தற்சமயம் தியான மண்டபமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் அமைதியை நாடி தியானம் செய்வதை இங்கே பார்க்கலாம்.

அங்கே நடராஜர் அன்னை சிவகாமியுடன் ஆனந்த தாண்டவமாடி அருள்கிறார். நூறு கால் மண்டபத்திற்க்கும், ஆயிரங்கால் மண்டபத்திற்க்கும், உள்ள ஒற்றுமைகள் பல, அதில் ஒன்று நூறுகால் மண்டபத்தில் நடு தூண்வரிசையில் நின்றுபார்த்தால் அந்த வரிசை தூண் தவிர எல்லா தூண்களும் தெரியும் அதே போல் ஆயிரங்கால் மண்டபத்திலும் நடு தூண்வரிசையில் நின்றுபார்த்தால் அங்கிருக்கும் 994 தூண்களில், அந்த வரிசை தூண் தவிர மற்ற எல்லா 906 தூண்களும் தெரியும், அங்கும் இங்கும் நடராஜர் அன்னை சிவகாமியுடன் அருள்கிறார்.

சில வேற்றுமைகள் ஆயிரங்கால் மண்டபத்திலிருக்கும் நடராஜரின் பின்னனியில் திரைசீலை சிகப்பாகவும் மையமாகவும், நூறுகால் மண்டபத்தில் நடராஜரின் சன்னிதி சற்றே உயர்ந்த மேடையிலிருக்கும்.

நூறுகால் மண்டப படம் கிடைக்கவில்லை ஆகவே ஆயிரங்கால் மண்டபத்திலிருக்கும் நடராஜரின் ஒரு விதமான கோனத்தில்.


ஈசனையோ இஷ்ட தெய்வத்தையோ சற்றுநேரம் தியானம் செய்து வெளியேவர, நம் துர்குணங்களை சம்ஹாரம் செய்ய ருத்ரஅவதாரங்களான அகினி வீரபத்ரரும், அகோர வீரபரரும் நிற்கின்றனர். வியாழகிழமைகளில் இரு விரபத்ரகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதும், தினமும் அவரை சாந்தி செய்ய பலரும் வெண்ணையுருண்டை சாற்றுவதும் சிறப்பு.


வெண்ணைய் உருண்டை சாத்துபடி செய்து வணங்கும் பக்தர்கள்

சிறப்பு அலங்காரத்தில் அகோர வீரபத்திரர்

இவர்களுடைய பாதத்தில் ஒருவித அதிர்வை உணரலாம்.

அடுத்த பதிவு ஊர்த்தவ தாண்டவரும், பத்ரகாளியும்.

Saturday, May 20, 2006

142: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 27

மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்து நாம் செல்வது சுவாமி சன்னிதியில் வலதுபக்கமுள்ள முருகனின் மூன்று சன்னிதிகள்.


அதில் முதலில் தண்டாயுதபாணியாக முருகன் அருள்பாலிக்கிறார். தினமும் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டபின் 6.00 மணி முதல் - 8.15 மணி வரை ஒவ்வொரு சன்னிதிக்கு சென்று ஸ்லோகங்களை சொல்லியும், பக்தி பாடல்களை பாடியும், வணங்கும் குழுவினர் இங்கே குழுமுவர். அரோகாரா, ஜெய் போன்ற கோஷங்களை எழுப்பி உலக நன்மைக்காக கூட்டு வழிபாடும், அமைதி வழிபாடும் செய்வர்.


அடுத்தடுத சன்னிதியில் திருத்தனி முருகனும், தனிகாசல முருகனும் மயில் மேல் அமர்ந்து அருபாலிக்கின்றனர், அடுத்த மூன்று சன்னிதியில் மூன்று லிங்கங்கள் உள்ளன.

கடைசி சன்னிதியின் எதிர் சன்னிதியில் நவகிரகங்கள் தத்தமக்குறிய திசைகளில் நின்று அருள் செய்கின்றனர்.


சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன், சனி, இராகு, கேது என்ற ஒன்பது கோள்கள் நவகிரகங்கள் எனப்படுகிறன.


நவகிரகங்கள் நாம் செய்த பூர்வ புண்ணியங்களை ஏற்ப நன்மையும், தண்டனைகளையும் வழங்குகின்றனர். நம்மை மோக்ஷத்திற்க்கு அழைத்து செல்வது இரண்டு செயல்கள். புண்ணியம் செய்வது ஒன்று. பகவான் நாமாவை சொல்வது இரண்டு. இவிரண்டையும் தவிர மோக்ஷம் பெற, நற்கதி பெற எவ்வழியுமில்லை. பகவான் நாமாவை சொல்வதே ஒரு புண்ணியம், அது தவிர புண்ணியம் என்ன உள்ளது அவனை போற்றி பாடுவது, அவனடியார்களை பேணுவது, ஊக்குவிப்பது போன்ற செயல்கள். பொம்மலாட்ட பொம்மைகள் போல் கோள் முதல் ஆள் வரை பகவானின் சொல்படி தான் ஆடுகின்றன.

இந்நவகிரகங்களை ஆதித்யாய, ஸோமாய, மங்களாய, புதாஸ்ய, குரு, சுக்ர, சனிப்யஸ்ய, இராகவே, கேதவே, நமோநமஹ என்று ஸ்லோகங்களை சொல்லியும் பிறகு கோளாறு பதிகம் சொல்லியும் வலம் வருவர். மேலும் எள்தீபமேற்றியும், நெய் தீபமேற்றியும் வழிபடுவர்.

அடுத்த பதிவு நூறுகால் மண்டபம், அக்னிவீரபத்திரர், அகோர வீரபத்திரர்.

முந்தைய பதிவு

அடுத்த பதிவு