மதுரை மீனாட்சி கோவில் திருக்கல்யாணம்: இன்டர்நெட்டில் ஒளிபரப்ப ஏற்பாடு
மதுரையில் முக்கய நிகழ்ச்சிகளில் சித்தரை திருவிழாவும் ஒன்று சித்தரை திருவிழா வருகின்ற (09.04.08) முதல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் ஆற்றில் இறங்கல் என திருவிழாக்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி இச்சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணத்தினை உலகம் முழுவதும் பார்க்க இன்டர்நெட் மூலம் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மீனாட்சி.ஓர்ஜி என்ற இணையதளம் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாக தலைவர் டி. கண்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா நாளைஏப்.,9 காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன் கூறியதாவது : ஏப்.,16ல் பட்டாபிஷேகமும், ஏப்.,17ல் திக்குவிஜயமும் நடக்கிறது. ஏப்.,18ல் காலை 9.30 மணி முதல் 9.54 மணிக்குள் திருக்கல்யாணமும், மறுநாள் காலை 6 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ண்திருக்கல்யாணத்தின்போது 50 ஆயிரம் பேருக்கு விருந்து நடக்கிறது.4 கோபுர வீதிகளிலும் மொய் பணம் செலுத்தலாம். திருக்கல்யாணத்தை காண மேற்கு ஆடி வீதியில் பார்வையாளர்களுக்கு கூடுதல் இடமும், வெளிநாட்டவருக்கு தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலுதவி உட்பட பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் கெடுபிடிகள் குறித்து கமிஷனரிடம் பேசப்படும். ரூ.10 கோடியில் கும்பாபிஷேக பணிகள் நடக்கிறது. இதில் ரூ.3 கோடி அம்மன் தங்க கோபுரத்திற்கு செலவிடப்படும். திருவாதவூர் கோயிலில் சுவாமி பீடத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 18 கிலோ எடையில் வெள்ளிக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி கோயிலில் ஸ்தல விருட்சமான கடம்ப மரக்கன்றுகள் நட்டது போல், சார்பு கோயில்களில் ஸ்தல விருட்சம் கண்டறிந்து அந்த வகை மரக்கன்றுகள் நடப்படும். இவ்வாறு கூறினார். பேட்டியின்போது அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
http://dinamalar.com/2008apr08/final.asp#4