Sunday, April 30, 2006

108: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 24

நடரஜர் சன்னிதி சற்றே உயர்ந்த மேடையில் உள்ளது. உள்ளே நடராஜரின் வித விதமான நடன சபைகளின் உற்சவர்கள் உள்ளனர். கனக சபை, ரத்தின சபை, சித்திர சபை.

__________
இன்று(30-4-2006) அக்ஷ்ய திருதியை,

இந்த நன்நாளில் பல்வேறு தெய்வங்கள், தங்களது செல்வங்களை பெருக்கிக்கொள்ளவும் காத்துக் கொள்ளவு அன்னை லக்ஷிமியை வணங்கியுள்ளனர். நாமும் அவளை வணங்கி அவளருள் பெருவோம்.

நடராஜர் சன்னிதிக்கு அருகில் இருப்பவர், அன்னை மஹாலக்ஷ்மி.

தாமரைபூவில் அமர்ந்தவளே- செந்
தாமரைபூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே (செந்தாமரை)
சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சில்
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே (செந்தாமரை)

அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மீ தாயே
அமரர்கள் துதுபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாவே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (செந்தாமரை)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே (செந்தாமரை)

என்று இவளை பாடித்தொழுது சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு செல்வோம்.
அங்கு சண்டிகேஸ்வரரிடம் அமைதியாக நம் வருகையை சொல்லி பின் விடைப்பெற்று மேற்கு நோக்கி வருவோம்.

அடுத்த பதிவு சனீபகவான் வணங்கி ஈஸ்வர பட்டம் பெற்ற 'கால பைரவர்'.
அவருக்கு எதிரில் இருக்கும் வண்ணி சிற்பமும்.

(இப்பதிவு என்னுடைய 108 வது பதிவு, மேலும் அன்னை லக்ஷ்மியின் படம் பதிவிலேற்றப் பட்ட 100வது படம்)

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Tuesday, April 25, 2006

104: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 23


சித்தர்களுக்கு எல்லம் சித்தர், இந்த எல்லாம் வல்ல சித்தர். இவரே கல்யானைக்கு கரும்பளித்தவர். சித்தராகி அமர்ந்து எல்ல நோய்களையும் தீர்த்து வருகிறார். இவரிடம் வந்த நோயாளி துன்புருவதில்லை.

இவரை பற்றியும், இவருடைய வழிதோன்றியவர்களையும் பற்றி மேலும் அறிய இங்கே. நன்றாக, நேர்த்தியாக, கோர்வையாக செய்யபட்ட ஒரு படைப்பு.

இவருடைய சன்னிதியில் பூக்குடாரம் அமைப்பது மிகவும் பிரசித்தியான வேண்டுதல், மேலும் சில வேண்டுதலாக இவருக்கு சந்தன காப்பு செய்வதும், விதவிதமான அபிஷேக, ஆராதனை செய்வதுமாகும்.கம்பண்ணர் கண்ட காட்சி: முகமதியர் படையெடுப்பில் அன்னையின் ஆலயம் மிகவும் சேதப்படுத்தப்பட்டது. அதின் சின்னமாக, சாட்சியாக் இன்றும் இருப்பது இச்சான்று.

முகமதியர் படையெடுப்பு நடந்த பொழுது கோவில் சொத்துக்களை காக்க அன்ற சிவாச்சாரியர்கள் தற்போதைய கருவறையின் முன் சுவரை எழுப்பி அதன் முன் ஒரு போலியாக ஒரு லிங்கத்தை வைத்து பூஜிப்பது போல் செய்தனர். சுவாமி சிலைகளை ப்ரதிஷ்டை செய்யும் பொழுது உள்ளே வைர வைடூரைய கற்களை பதித்து ப்ரதிஷ்டை செய்வது வழக்கம் அதை கொள்ளை கொள்ள வந்தவன் ஏமாந்து சென்றான்.(அவன் உடைக்க தோற்று, உடைக்க முடியாமல் விட்டு விட்ட லிங்கமே துர்க்கை அம்மனுக்கு எதிர்பகுதியில் உள்ள மேடையில் வைக்கபட்டுள்ளது.) பின்னர் ஆட்சி மாறி கம்பண்ணர் அப்பகுதியில் வந்து தமது பக்தியால் இறைவன் உள்ளே இருப்பதை கண்டறிந்து அந்த சுவரை இடிக்க, உள்ளே, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றப்பட்ட அகல்விளக்கு எறிந்து கொண்டிருக்க, இறைவன் மீது பூசப்பட்ட சந்தனம் மணம் பரப்பி கொண்டிருக்க, சூடப்பட்ட மாலை வாடாமல் இருப்பதை கண்டு ஆனந்த கண்ணீர் மல்கினார்.

அடுத்த பதிவு நடரஜர்கள், சன்டிகேஸ்வரர், மஹாலக்ஷ்மி, காலபைரவர்.

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Saturday, April 22, 2006

97: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 22

காசிவிஸ்வநாதருக்கு அடுத்தபடியாக வடக்கு நோக்கி நின்றருள்வது அன்னை விஷ்ணு ஸ்ரீ துர்க்கை.

அவள் எல்லா திக்கிலிருக்கும் மக்களை காக்க மஹிஷாசுரனை மரித்தவள், இவள் முன்னால் அனுதினமும் காலை அடியவர்கள் தம் குழுமத்துடன் மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம் சொல்லி பாடுவதுவும், அவர்களை கேட்பதற்க்கும் பல ஜென்மங்களில் புண்ணியங்கள் பல செய்திருக்க வேண்டும். சங்கு சக்கரம் தாங்கி, அபய ஹஸ்த்தத்துடன் நிற்க்கும் அவளை நாமும் 'மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம்' சொல்லி வணங்குவோம்.அயி கிரிநந்தினி நந்திதமெதினி விஷ்வவினொதினி நந்தனுதே
கிரிவர் விந்த்ய் ஸிரொதினிவாசினி விஷ்ணுவிலாசினி ஜிஷ்ணுனுதே
பகவதி ஹெஸிதிகண்டகுடும்பினி பூரி குடும்பினி பூரி க்.ர்தே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 1

சுரவரவர்ஷிணி துர்தரதர்ஷிணி துர்முகமர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவனபொஷிணி ஸணகரதொஷிணி கில்பிஷமொஷிணி கொஷரதே
தனுஜ நிரொஷிணி திதிசுத ரொஷிணி துர்மத ஸொஷிணி சின்துசுதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 2

அயி ஜகதம்ப மத்ம்ப கத்ம்ப வனப்ரிய வாசினி ஹாசரதே
ஸிகரி ஸிரொமணி துணக ஹிமாலய ஸ்ர்ணக நிஜாலய மத்யகதே
மது மதுரெ மது கைடப கந்ஜினி கைடப பந்ஜினி ராசரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 3

அயி ஸதகண்ட விகண்டித் ருண்ட விதுண்டித் ஸுண்ட கஜாதிபதே
ரிபு கஜ் கண்ட விதாரண் சண்ட பராக்ரம் ஸுண்ட ம்ர்காதிபதே
நிஜ புஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட படாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 4

அயி ரண துர்மத ஸத்ரு வதொதித துர்தர நிர்ஜர ஸக்திப்ர்தே
சதுர விசார துரீண மஹாஸிவ தூதக்ர்த ப்ரமதாதிபதே
துரித் துரீஹ் துராஸய் துர்மதி தானவதூத க்ர்தான்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 5

அயி ஸரணாகத வைரி வதூவர வீர வராபய தாயகரெ
த்ரிபுவன மச்தக ஸூல விரொதி ஸிரொதி க்ர்தாமல ஸூலகரெ
துமிதுமி தாமர துன்துபினாத மஹொ முகரீக்.ர்த திக்மகரெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 6

அயி நிஜ் ஹுணக்ர்தி மாத்ர நிராக்ர்த் தூம்ர விலொசன தூம்ர ஸதே
சமர விஸொஷித ஸொணித பீஜ சமுத்பவ ஸொணித பீஜ லதே
ஸிவ ஸிவ ஸும்ப நிஸும்ப மஹாஹவ தர்பித பூத பிஸாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 7

தனுரனு சணக ரணக்ஷணசணக பரிச்புர தணக நடத்கடகே
கனக பிஸணக ப்ர்ஷத்க நிஷணக ரசத்பட ஸ்ர்ணக ஹதாவடுகே
க்ர்த சதுரணக பலக்ஷிதி ரணக கடத்பஹுரணக ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 8

ஜய ஜய ஜப்ய ஜயெஜய ஸப்த பரச்துதி தத்பர விஸ்வனுதே
பண பண பிந்ஜிமி பிணக்ர்த நூபுர சிந்ஜித மொஹித பூதபதே
நடித நடார்த நடீனட் நாயக நாடித நாட்ய சுகானரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 9

அயி சுமநஹ சுமநஹ சுமநஹ சுமநஹ சுமனொஹர் கான்தியுதே
ஸ்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீகர் வக்த்ரவ்.ர்தே
சுனயன் விப்ரமர் ப்ரமர் ப்ரமர் ப்ரமர் ப்ரமராதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 10

சஹித மஹாஹவ மல்லம தல்லிக மல்லித ரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லிக மல்லிக பில்லிக பில்லிக வர்க வ்ர்தே
சிதக்ர்த புல்லிசமுல்ல சிதாருண தல்லஜ பல்லவ சல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 11

அவிரல கண்ட கலன்மத மெதுர மத்த மதணகஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூத கலானிதி ரூப பயொனிதி ராஜசுதே
அயி சுத தீஜன லாலசமானச மொஹன மன்மத ராஜசுதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 12

கமல தலாமல கொமல கான்தி கலாகலிதாமல பாலலதே
சகல விலாச கலானிலயக்ரம கெலி சலத்கல ஹ்ம்ச குலெ
அலிகுல சணகுல குவலய மண்டல மௌலிமிலத்பகுலாலி குலெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 13

கர முரலீ ரவ வீஜித கூஜித லஜ்ஜித கொகில ம்ந்ஜுமதே
மிலித புலின்த மனொஹர் குந்ஜித ர்ந்ஜிதஸைல நிகுந்ஜகதே
நிஜகுண பூத மஹாஸபரீகண சத்குண ச்ம்ப்ர்த கெலிதலெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 14

கடிதட பீத துகூல விசித்ர மயூகதிரச்க்ர்த சந்த்ர ருசெ
ப்ரணத சுராசுர மௌலிமணிச்புர த்ம்ஸுல சந்நக சந்த்ர ருசெ
ஜித கனகாசல மௌலிபதொர்ஜித நிர்பர குந்ஜர கும்பகுசெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 15

விஜித சஹச்ரகரைக சஹச்ரகரைக சஹச்ரகரைகனுதே
க்ர்த சுரதாரக சணகரதாரக சணகரதாரக சூனுசுதே
சுரத சமாதி சமானசமாதி சமாதிசமாதி சுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 16

பதகமலம கருணானிலயே வரிவச்யதி யொஅனுதினன ச ஸிவெ
அயி கமலெ கமலானிலயே கமலானிலயஹ ச கத்ம ந பவெத்
தவ பதமெவ பர்ம்பதமித்யனுஸீலயதொ மம கிம ந ஸிவெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 17

கனகலசத்கல ஸிந்து ஜலைரனு சிந்சினுதே
குண ரணகபுவ்ம் பஜதி ச கிம் ந ஸசீகுச கும்ப தடீ பரிர்ம்ப சுகானுபவம
தவ சரணம் ஸரணம் கரவாணி நதாமரவாணி நிவாசி ஸிவம்
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 18

தவ விமலேன்துகுலம வதநேந்துமலம் சகலம் நநு கூலயதே
கிமு புருஹூத் புரீன்துமுகீ சுமுகீபிரசௌ விமுகீக்ரியதே
மம து மத்ம் ஸிவனாமதனெ பவதீ க்ர்பயா கிமுத் க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 19

அயி மயி தீனதயாலுதயா க்ர்பயைவ த்வயா பவிதவ்யமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ர்பயாசி யதாசி ததா.அனுமிதாசிரதே
யதுசிதமத்ர் பவத்யுரரி குருதாதுருதாபமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 20

இதி ஸ்ரீமஹிஷாசுரமர்தினிஸ்தொத்ரம் ஸம்பூர்ணம்

அன்னைக்கு முன்னால் இருப்பது ஸ்தல விருக்ஷமான கதம்ப மரம்.

அடுத்த பதிவு, சித்தர் சன்னிதியும் அப்பர் கண்ட காட்சியும்.முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Friday, April 07, 2006

59: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 21

மதுரையை காக்கவும், வேதங்களை காக்கவும், ஈசன் செய்த விளையாட்டுக்கள் பலப்பல அதில் 64 திருவிளையாடல்களை திருவிளையாடல் புராணம் சொல்கிறது. (மதுரை வீரன் படத்தில் 14 திருவிளையாடல்களை தம் நாடியத்தில் வெளிப்படுத்துவார் நாட்டிய பேரொளி)

எங்கள் முக்கண்ணன் செய்த விளையாடல்கள் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை வண்ண சிற்ப்பதில் பார்க்க நீங்கள் சொக்கநாதர் சன்னிதியை தான் அடைய வேண்டும். ஈசனின் விளையாட்டுக்களை பார்க்க நின்று நிதானமாக ஒவ்வொரு சிற்ப சித்திரமாக பார்க்கும் பொழுது ஒவ்வொரு சிற்பங்களும் கண்ணைகவரும். தருமிக்கு பொற்குவையளித்தது, ரசவதம் செய்தது, மாணிக்கம்-விறகு-வளையல் விற்றது, பன்றிகளுக்கு பால்கொடுத்தது, மதுரைக்கு எல்லைகாட்டியது, புத்திர காமேஷ்டி யாகத்திலிருந்து மீனாட்சியம்மன் பிறந்தது, குண்டோதரனின் பசி-தாகம் தீர்க்க வைகையை கொண்டுவந்தது, பிட்டுக்கு மன்சுமந்தது, பிரம்படி பட்டது, நரியை பரியாக்கியது, எழுகடல் கொண்டுவந்தது, புலவர்கள் சபையில் வாதாடியது, என்று ஈசனின் விளையாட்டுக்கள் இன்றும் தொடர்கிறது.

காட்சிக்கு ஒருசில இதோ
முந்தைய பதிவுமுந்தைய பதிவு

அடுத்த பதிவு