Monday, October 12, 2009

அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் உலா!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பற்றி ஒரு இணையதளம் உருவாகி உள்ளது!

இத்தளத்தில் இருக்கும் படங்கள் சாதரணமாக உலக அதிசயங்கள், சினிமா ஒளிப்பதிவுகளில் மட்டுமே நாம் பாத்திருக்கக்ககூடும், அதே போன்ற படங்கள் எம் அன்னையின் ஆலயத்தையும் பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது.

25க்கும் மேற்ப்பட்ட முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

இதில் முக்கியமாக நான் பார்த்து மெய்சிலிர்த்த இடம் கம்பத்தடி மண்டபம். இம்மண்டபத்தை இதைவிட அழகாக முற்றிலும் அணு-அணுவாக வேறெங்கும் தரிசிக்க முடியாது.

நீங்களும் கண்டு ஆனந்திக்க இங்கே சொடுக்கவும் அல்லது இங்கே.

Wednesday, July 15, 2009

பள்ளியறை பூஜை! - அசைபடம்மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் நடக்கும் பூஜையொன்றை முந்தய பதிவில் இட்டேன்!


இன்னும் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.

எல்லாகோவிலிலும் முதலில் சுவாமிக்கு தான் தீபஆராதனை மற்றும் எல்லாவித புஜைகள் செய்வர். ஆனால் மதுரையில் முதலில் அம்மனுக்கு தான் பூஜை செய்வது வழக்கம். இதற்க்கு பல வித காரணங்கள் உள்ளன.1. மீனாட்சி அம்மன் முதலில் மதுரையை ஆண்ட சமயத்தில் எல்லா வித மரியாதைகளும் அவருக்கே முதலில் செய்யப்பட்டதாகவும் காலப்போக்கில் அதுவே வழி வழியாக வந்ததாகவும் சொல்லப்படுகிறது

2. மனைவியானவள் கணவனுக்கு முன்பாக எழுந்து தயாராகி கணவனுக்கு பணிவிடை செய்து எழுப்பவேண்டும் என்ற நியதியை கடைப்பிடிக்க இவ்வாறு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இப்பொழுது மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறோம்.

இரவு 8:00 மணியளவில் அம்மன் சன்னிதி திரையடப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வெள்ள மலர்களாலும், மற்றும் வென்நிற பட்டு சாற்றியும் அருட்காட்சி தருவாள் அன்னை அங்கயர்கண்ணி.

மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வென்பட்டால் அம்மன் அலங்கரித்து தரும் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.

அவ்வாறு காட்சி தரும் அன்னையை தரிசித்தால் கையில் கிளியேந்திய கலைவாணி இவளே தான் என்றும் சிலர் சத்தியம் செய்து விடுவர், இவரே தான் அந்த வேதமாதாவோ என்றும் தோன்றக்கூடும்!

பிறகு இரவு 9.15 மணியளவில் நடக்கும் பள்ளியறை பூஜையின் போது சுவாமி பல்லக்கில், அம்மன் சன்னிதிக்கு எதிரில் வந்து நிற்பார். அவருக்கு பாதபூஜை நடக்கும். அவரது பாதபூஜையை கண்ணார கண்ட பக்தர்கள் அம்மன் சன்னிதிக்குள் ஓடுவர். முதல் நாள் எனென்று தெரியாமல் நானும் ஓடினேன். அது தான் இரவு கடைசி நேர பூஜை என்றும், பிறகு அடுத்த நாள் தான் அம்மனை தரிசிக்க இயலும் என்பது பிறகு தான் தெரிந்தது.அம்மனுக்கு செய்யும் இந்த தீபாரதனையில் மேலும் ஒரு விசேஷம் என்ன வென்றால் அம்மனுக்கு சூட்டபட்டிருக்கும் மூக்குதியானது எத்தனை தூரமாக நாம் நின்று கண்டாலும், மிகத் தெளிவாக தெரியும். காரணம் உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை, ஆகவே தான் இந்த மூக்குத்தி மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர் அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனை தரிசிக்கலாம். பலர் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிக்க முடியவில்லை என்று சொல்வர், சிரமம் பார்க்காமல் இந்த பூஜைக்கு சென்றால் நிச்சயம் அம்மனை தரிசிக்க இயலும்.

ஒரே நாளில் தானே இச்சா, கிரியா மற்றும் ஞானசக்தியாக அருள்பாலிக்கும் அன்னையை தரிசித்து வருவோம்.

From Meenakshi Temple
இச்சா-சக்தி(காலை பொழுதில் - 11.00 மணியளவில்).

From Meenakshi Temple
கிரியா-சக்தி (மாலை பொழுதில் மாலை 4-4.30 மணியளவில்).

From Meenakshi Temple
ஞான-சக்தியாக (இரவு பொழுதில் - 8.00 மணியளவில்).
இந்த பாதபூஜை அம்மன் தானே செய்வதாக ஐதீகம்.

யூட்யுப் கொஞ்சம் அசைபடங்களை தருகிறது. 50க்கும் மேற்பட்ட பள்ளியறை அசைபடங்களை அதில் காணமுடிந்தது, அதில் சற்று துல்லியமான அசைபடங்களை தரிசிக்கவும், நீங்கள் நேரிடையாக சென்று வந்த மனநிலையை தரும் என்று நம்புகிறேன்.
Monday, July 13, 2009

பள்ளியறை பூஜை! - தேவ தேவோத்தமா!

அங்கயர்கண்ணி அன்னை மீனாட்சி நாள் தோறும் பல பூஜைகளையும் பல தரபட்ட அலங்காரங்களும் தந்தருள்கிறாள்.

திருவிழா மற்றும் திருப்பரங்குன்றத்திற்க்கு பயணம் எனும் போது மட்டும் ஒரு சில வகை பூஜைகள் நடக்காமல் இருந்து விடுகிறது. ஆனால் வருடத்தில் 365 நாட்களும் இடைவிடாது நடக்கும் ஒரே பூஜை இந்த பள்ளியறை பூஜை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜை.

வருடத்தில் 5 தினங்கள் கோவிலின் நடை சாத்தப்பட்டு இருந்தாலும் சுவாமியும், அம்மனும் திரும்பி இந்த பூஜையில் நிச்சயமாக அருள்பாலிப்பர்.

சிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இரவு வெகுநேரம் நடை திறந்திருந்தாலும் அதிகாலை 3-4 மணியளவில் இப்பூஜைகள் நடக்கும்.

அதே போல் தெப்பதிருவிழா மற்றும் திருபரங்குன்றத்து குமரனுக்கு திருக்கல்யாண உற்சவநாளும் முதல் நாள் இரவே இப்பூஜைகளை கண்டு இரவு முழூவதும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

அத்தகைய பூஜை படங்களை வலையேற்றம் செய்யாமல் இருந்தது ஒரு சிறிய குறையிருந்தது அதை தற்போது தீர்ந்து விட்டது.

முதல் நாள் இரவு சுவாமி தன் சன்னிதியில் இருந்து கிளம்பி வெளியே வருவார்! பிறகு கம்பத்தடி மண்டபத்திற்க்கு முன்னால் இருந்து, சமயக்குறவர்கள் சன்னிதியில் ஓதுவார்கள் தேவார பதிகம் பாடலிசைக்க பயணம் அம்மன் சன்னிதி நோக்கி தொடரும்.

பின் முக்கூருனி விநாயகருக்கு அருகில் தீபஆராதனையும் - அம்மன் சன்னிதி நுழைவாயிலில் பாதபூஜை நடக்கும். சுவாமி பல்லக்கில் இருந்த வாரே அம்மன் சன்னிதிக்குள் செல்வார், பிறகு திருமலை நாயக்கர் சன்னிதிக்கருகில் ஒரு முறை தீபாராதனை காட்டுவர், கடைசியாக பள்ளியறை எதிரில் இருக்கும் வாசல் வழியாக நேரே பள்ளியறைக்குச் செல்வார்.

அவ்வாறு செல்லும் சமயம், ஓதுவார் ஒருவர்

"தேவ தேவோத்தமா

தேவதா சர்வ தோமா

ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகாச் சரிகா!

பார்வதிப் பிரிய நாயகாச்சரிகா

பாண்டியமண்டாலிதிபாச் சரிகா

சோமாநாத பாண்டிய மஹாராஜா பராக்!"


என்று பராக் சொல்ல, பல்லக்கில் இருந்து திருவாச்சி சமேதமாக இருக்கும் சோமசுந்தர கடவுளின் பாதுகை பள்ளியறை நோக்கி செல்லும்!

பின் தீப தூப ஆராதனைகள் ஆரம்பமாகும்

தீபங்களில் 16 வகை உண்டு.
தூபம், மகாதீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப தீபம், புருஷா மிருக தீபம், ஓலதீபம், கமடதி தீபம், கணு தீபம், வியான்ர தீபம், சிம்ம தீபம், துவஜ தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம்

ஆகிய 16 வகை தீபஆராதனைகள் செய்வித்து! அப்பனும் அம்மையும் உளமகிழ்ந்து பொன்னூஞ்சலில் அமர்ந்து அருள்பாலிப்பர்.

தீபஆராதனைகளனைத்தும் முடிந்தவுடன், கூடியிருக்கும் அவரடியவர்கள்

"பொன்னூஞ்சலில் பூரித்து,
பூஷனங்கள் தரித்து!
பொன்னூஞ்சலில் பூரித்து,
பூஷனங்கள் தரித்து!
ஈசனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து

கண்ணூஞ்சல் ஆடுகின்றாள்

காஞ்சனமாலை
மயிலாள்
பொன்னூஞ்சல் ஆடுகின்றாள்...


பூலோக கைலாச,
பூலோக கைலாச

புண்ணியமா ம மதுரா,
புண்ணியமா ம மதுரா

ஆகாச சுந்தரேசா,
ஆகாச சுந்தரேசா

சதானந்தமே கண்மலராய்!இந்திரயங்கள் பூஜிக்க,
சங்கரியும் பூரித்து
மங்களத்தாம்பூலம் ஆற்றினாள் - தேவி
தங்க கதவை மெல்ல சாற்றினாள்!"


என்று பாடலிசைக்க, விசிறி ஆட்டம் கண்டு, பின் ஊஞ்சல் ஆடி அப்பனும் அம்மையும் அருள்பாலித்து நடையை சாற்றுவர்!எப்போதும் போல் படங்கள் இணைய தொக்குப்பே...

பாடல்கள் நேரடியாக நானே கேட்டு, பாடியவை.

கொசுறு : ஒவ்வொரு முறையும் என் காது பட யாரேனும் ஒருவர் "இன்று தான் இந்த காட்சியை கண்ணார காண முடிந்தது" என்று கூறிவிடுவர்'மூலிகை ஓவியத்தில் திருக்கல்யாண காட்சி