

இன்று(30-4-2006) அக்ஷ்ய திருதியை,
இந்த நன்நாளில் பல்வேறு தெய்வங்கள், தங்களது செல்வங்களை பெருக்கிக்கொள்ளவும் காத்துக் கொள்ளவு அன்னை லக்ஷிமியை வணங்கியுள்ளனர். நாமும் அவளை வணங்கி அவளருள் பெருவோம்.
நடராஜர் சன்னிதிக்கு அருகில் இருப்பவர், அன்னை மஹாலக்ஷ்மி.
தாமரைபூவில் அமர்ந்தவளே- செந்
தாமரைபூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே (செந்தாமரை)
சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சில்
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே (செந்தாமரை)
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மீ தாயே
அமரர்கள் துதுபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாவே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (செந்தாமரை)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே (செந்தாமரை)
என்று இவளை பாடித்தொழுது சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு செல்வோம்.
அங்கு சண்டிகேஸ்வரரிடம் அமைதியாக நம் வருகையை சொல்லி பின் விடைப்பெற்று மேற்கு நோக்கி வருவோம்.
அடுத்த பதிவு சனீபகவான் வணங்கி ஈஸ்வர பட்டம் பெற்ற 'கால பைரவர்'.
அவருக்கு எதிரில் இருக்கும் வண்ணி சிற்பமும்.
(இப்பதிவு என்னுடைய 108 வது பதிவு, மேலும் அன்னை லக்ஷ்மியின் படம் பதிவிலேற்றப் பட்ட 100வது படம்)