Tuesday, April 25, 2006

104: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 23


சித்தர்களுக்கு எல்லம் சித்தர், இந்த எல்லாம் வல்ல சித்தர். இவரே கல்யானைக்கு கரும்பளித்தவர். சித்தராகி அமர்ந்து எல்ல நோய்களையும் தீர்த்து வருகிறார். இவரிடம் வந்த நோயாளி துன்புருவதில்லை.

இவரை பற்றியும், இவருடைய வழிதோன்றியவர்களையும் பற்றி மேலும் அறிய இங்கே. நன்றாக, நேர்த்தியாக, கோர்வையாக செய்யபட்ட ஒரு படைப்பு.

இவருடைய சன்னிதியில் பூக்குடாரம் அமைப்பது மிகவும் பிரசித்தியான வேண்டுதல், மேலும் சில வேண்டுதலாக இவருக்கு சந்தன காப்பு செய்வதும், விதவிதமான அபிஷேக, ஆராதனை செய்வதுமாகும்.



கம்பண்ணர் கண்ட காட்சி: முகமதியர் படையெடுப்பில் அன்னையின் ஆலயம் மிகவும் சேதப்படுத்தப்பட்டது. அதின் சின்னமாக, சாட்சியாக் இன்றும் இருப்பது இச்சான்று.

முகமதியர் படையெடுப்பு நடந்த பொழுது கோவில் சொத்துக்களை காக்க அன்ற சிவாச்சாரியர்கள் தற்போதைய கருவறையின் முன் சுவரை எழுப்பி அதன் முன் ஒரு போலியாக ஒரு லிங்கத்தை வைத்து பூஜிப்பது போல் செய்தனர். சுவாமி சிலைகளை ப்ரதிஷ்டை செய்யும் பொழுது உள்ளே வைர வைடூரைய கற்களை பதித்து ப்ரதிஷ்டை செய்வது வழக்கம் அதை கொள்ளை கொள்ள வந்தவன் ஏமாந்து சென்றான்.(அவன் உடைக்க தோற்று, உடைக்க முடியாமல் விட்டு விட்ட லிங்கமே துர்க்கை அம்மனுக்கு எதிர்பகுதியில் உள்ள மேடையில் வைக்கபட்டுள்ளது.) பின்னர் ஆட்சி மாறி கம்பண்ணர் அப்பகுதியில் வந்து தமது பக்தியால் இறைவன் உள்ளே இருப்பதை கண்டறிந்து அந்த சுவரை இடிக்க, உள்ளே, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றப்பட்ட அகல்விளக்கு எறிந்து கொண்டிருக்க, இறைவன் மீது பூசப்பட்ட சந்தனம் மணம் பரப்பி கொண்டிருக்க, சூடப்பட்ட மாலை வாடாமல் இருப்பதை கண்டு ஆனந்த கண்ணீர் மல்கினார்.

அடுத்த பதிவு நடரஜர்கள், சன்டிகேஸ்வரர், மஹாலக்ஷ்மி, காலபைரவர்.

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

3 comments:

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்,

இந்த எல்லாம் வல்ல சித்தர் பெருமான் சிவபெருமானே. அறுபத்தி நான்கு திருவிளையாடல்களில் ஒன்றான கல்யானைக்குக் கரும்பு கொடுத்த திருவிளையாடலில் வரும் சித்தர் பெருமான் இவரே. இவரை வணங்கினால் ஆன்மிக சாதனைகளின் முன்னேற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மாலிக்காபூரால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் அண்மையில் (ஒரு 20 வருடங்களுக்கு முன்னால்) தான் அந்த மேடையில் வைக்கப்பட்டது. அதற்கு முன் அது எங்கே இருந்ததோ? நான் சிறுவயதில் அந்த உடைந்த சிவலிங்கத்தைப் பார்த்ததில்லை. பின்னர் அது அங்கே இந்த வரலாறு சொல்லும் பலகையுடன் வந்தது. அதே நேரத்தில் தான் கல்யாண சுந்தரரின் சன்னிதியும் திருப்பணி செய்யப்பட்டு உட்பிரகாரத்திலிருந்து வெளிப்பிரகாரத்திற்கு (கல்யாண சுந்தரர் சன்னதிக்கு) செல்லும் வழி திறக்கப் பட்டது.

சிவமுருகன் said...

கல்யானைக்கு கரும்பளிக்கும் படமும் உள்ளது. அதை இங்கே இடுவதை விட சிலநாட்களுக்கு பிறகு நிகவுகளில் இடுகிறேன்.

சிவமுருகன் said...

//நிகவுகளில் இடுகிறேன்//

நிகழ்வுகளில் இடுகிறேன்