Thursday, December 07, 2006

இரண்டரை கோடியில் மீனாக்ஷி அம்மன் கோவில் செட்

வழக்கம் போல் மீனாக்ஷி அம்மன் கோவில் பற்றி ஏதேனும் புதிய எனக்கு கிடைக்குமா என்று தேடிய போது கிடைத்த ஒரு அரி(றி)ய தகவல். அர்ஜூன் என்ற தெலுங்கு படத்திற்க்காக ஒரு மீனாக்ஷி அம்மன் கோவில் போல் அமைத்திருந்த படங்களும் தகவல்களும் கிடைத்தது. சினிமா செட்டிங்ஸ் செய்வதில் கைதேர்ந்த "தொட்டா தரணி" மிகவும் அருமையாக செய்திருந்தார். அவருடைய பொற்றாமரை குளத்து படியை பார்த்து ஒரு கணம் ஏமாந்து விட்டேன் பிறகு அதன் மேல் புரத்தில் பார்க்கும் போது தான் கோபுரங்கள் இல்லாத ஒரு படமாக தெரிந்தது. 130 அடி உயரத்தில் ஒரு கோபுரம் கூட செய்திருந்தனர். பார்க்க நன்றாக இருந்தது. நீங்களும் பார்க்க செல்ல வேண்டிய தளம் சுட்டி இதோ: http://www.idlebrain.com/movie/showcase/arjun.html.

இதை தயாரிக்க ரூபாய் 2.5 கோடி செலவானது என்றும், 3 மாதம் கால ஆனது. இந்த கோவில் 3 வருடங்கள் கோவில் தாங்குமாம். தங்க வண்ணம் பூசபட்ட தாமரை போல் இந்த குளத்தில் இருந்தது.

நடிகர்க(கை)ளில் எனக்கு தெரிந்தவர் 'பிரகாஷ் ராஜ்' மட்டும் தான் பிற நடிகர்களை பற்றி தெரியவில்லை. 2004ல் வெளி வர திட்டமிட்ட படமாக தெரிகிறது.நிற்க.

அம்மன் கோவிலின் இப்பதிவில் வராத சில படங்கள் (செட் படங்கள் அல்ல).

ஆயிரங்கால் மண்டபத்தின் நுழைவாயில்

மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் ஒட்டகம்.

கார்த்திகை திருநாளில் ஜொலித்த கோவில்.

கழுகுபார்வையில் வரையப்பட்ட ஒரு ஓவியம்.

காசிவிஸ்வநாதர் சந்நிதி.


மேலும் சில படங்கள்.

9 comments:

G.Ragavan said...

சிவமுருகன் அந்தப் படத்தை தற்செயலா டீவியில பார்க்க நேர்ந்தது. வரிசையா சேனல் மாத்திக்கிட்டிருந்தப்ப தெலுங்குல மீனாட்சியம்மன் கோயிலும் தமிழும் வருதேன்னு பாத்தா இப்பிடி ஒரு கூத்து.

படத்துல சரிதாவும் பிரகாஷ்ராஜும் மதுரக்காரங்க. அதுனால அவங்க தமிழத் தெலுங்கு மாதிரி பேசுவாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் வில்லன்க.

கோயிலுக்கும் செட்டுக்கும் மொதல்ல வித்யாசம் தெரியலை. ஆனா ஏதோ உறுத்த நல்லா கூர்ந்து கவனிச்சப்போ வித்யாசம் தெரிஞ்சது. அதுல ஹீரோவும் வில்லனும் பொற்றாமரைக் குளத்துக்குள்ள மூழ்கிச் சண்டை போடுற மாதிரி அபத்தங்கள்ளாம் உண்டு. அப்படி மூழ்கும் போது பெரிய பொற்றாமரை ஒன்னு தண்ணிக்குள்ள இருக்கும். கோயிலுக்குள்ள கத்தி கபடாவோட ஆளுங்க வந்து வம்பு செய்றதெல்லாம் படத்துல வரும். படம்....அபத்தக்களஞ்சியம். ஆனாலும் மதுரை வர்ரதாலையும் கோயில் வர்ரதாலயும் பாத்தோம். ஆனா படம் தெலுங்குல ஹிட்டாத்தான் இருக்கனும்.

சிவமுருகன் said...

ராகவன்,

நீங்க சொன்ன விஷயமும் அந்த இணைத்தில் வந்த விஷயமும் சேர்த்து வச்சு பார்க்கும் போது இப்படத்தை பார்க்கனும் தோனுது இதே போல சானல் மாற்றும் ஒரு சந்தர்பத்தில் தான் வாய்ப்பு கிடைக்குமோ என்று எண்ணுகிறேன்.


//அதுல ஹீரோவும் வில்லனும் பொற்றாமரைக் குளத்துக்குள்ள மூழ்கிச் சண்டை போடுற மாதிரி அபத்தங்கள்ளாம் உண்டு. அப்படி மூழ்கும் போது பெரிய பொற்றாமரை ஒன்னு தண்ணிக்குள்ள இருக்கும். கோயிலுக்குள்ள கத்தி கபடாவோட ஆளுங்க வந்து வம்பு செய்றதெல்லாம் படத்துல வரும். //

நல்ல வேளை செட் போட்டு செஞ்சாங்க. ஆனா அந்த செட்டுல இருக்குற அம்மனுக்கு கூட தினமும் பூஜை எல்லாம் பன்றாங்களாம் !? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நன்றி.

பிரதீப் said...

நானும் இந்தப் படத்தைப் பாத்தேன். அந்த மீனாட்சி அம்மன் கோயிலைப் பாத்து அப்படியே அசந்து போயிட்டேங்க. படம் என்னமோ அபத்தமாத்தேன் இருந்துச்சு. ஆனா நல்ல விறுவிறுப்பு.

பாட்டுக ரெண்டு மூணு அருமையா இருக்கும்.

சிவமுருகன், இந்த பிளாக்கர் பீட்டாவுக்கு மாறினதுல எல்லாமே போச்சுங்க. தமிழ்மணத்துல திரும்பச் சேக்குறதுக்கு ஏதாச்சும் வழி இருந்தாச் சொல்லுங்க. பிச்சை மாதிரி எல்லாத்துகிட்டயும் கேட்டுக்கிட்டே இருக்கேன். :(

சிவமுருகன் said...

பிரதீப் வருகைக்கு நன்றி.

பீட்டா பிளாகர் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. போன வாரம் பொன்ஸ் இது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தாங்க அத பார்த்த புரியும் என்று எண்ணுகிறேன். கடந்த வார நட்சத்திர பதிவு பகுதியில பாத்தீங்கன தெரியும்.

Sivabalan said...

சிவமுருகன்

கலக்கல்... ஆச்சர்யம்..

பதிவுக்கு நன்றி.

சிவமுருகன் said...

நன்றி சிவபாலன்.

குமரன் (Kumaran) said...

புதிய படங்களுக்கு நன்றி சிவமுருகன். அந்த தோட்டா தரணி போட்ட தெலுகு பட செட் அப்படியே நம்ம அம்மன் கோவிலைப் போலவே இருக்கே. ரொம்ப கூர்மையா கவனிச்சுச் செஞ்சிருக்காங்க. அருமை.

சிவமுருகன் said...

அண்ணா,
இப்படி தான் நானும் முதலில் நினைத்தேன்.

நன்றி.

சிவமுருகன் said...

இப்போ பிளாகர் படம் ஸ்டைலை மாற்றி விட்டது அதனால் படங்கள் வலையேற்றம் சுலபமாக முடிந்து விடுகிறது.