Monday, July 13, 2009

பள்ளியறை பூஜை! - தேவ தேவோத்தமா!

அங்கயர்கண்ணி அன்னை மீனாட்சி நாள் தோறும் பல பூஜைகளையும் பல தரபட்ட அலங்காரங்களும் தந்தருள்கிறாள்.

திருவிழா மற்றும் திருப்பரங்குன்றத்திற்க்கு பயணம் எனும் போது மட்டும் ஒரு சில வகை பூஜைகள் நடக்காமல் இருந்து விடுகிறது. ஆனால் வருடத்தில் 365 நாட்களும் இடைவிடாது நடக்கும் ஒரே பூஜை இந்த பள்ளியறை பூஜை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜை.

வருடத்தில் 5 தினங்கள் கோவிலின் நடை சாத்தப்பட்டு இருந்தாலும் சுவாமியும், அம்மனும் திரும்பி இந்த பூஜையில் நிச்சயமாக அருள்பாலிப்பர்.

சிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இரவு வெகுநேரம் நடை திறந்திருந்தாலும் அதிகாலை 3-4 மணியளவில் இப்பூஜைகள் நடக்கும்.

அதே போல் தெப்பதிருவிழா மற்றும் திருபரங்குன்றத்து குமரனுக்கு திருக்கல்யாண உற்சவநாளும் முதல் நாள் இரவே இப்பூஜைகளை கண்டு இரவு முழூவதும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

அத்தகைய பூஜை படங்களை வலையேற்றம் செய்யாமல் இருந்தது ஒரு சிறிய குறையிருந்தது அதை தற்போது தீர்ந்து விட்டது.

முதல் நாள் இரவு சுவாமி தன் சன்னிதியில் இருந்து கிளம்பி வெளியே வருவார்! பிறகு கம்பத்தடி மண்டபத்திற்க்கு முன்னால் இருந்து, சமயக்குறவர்கள் சன்னிதியில் ஓதுவார்கள் தேவார பதிகம் பாடலிசைக்க பயணம் அம்மன் சன்னிதி நோக்கி தொடரும்.

பின் முக்கூருனி விநாயகருக்கு அருகில் தீபஆராதனையும் - அம்மன் சன்னிதி நுழைவாயிலில் பாதபூஜை நடக்கும். சுவாமி பல்லக்கில் இருந்த வாரே அம்மன் சன்னிதிக்குள் செல்வார், பிறகு திருமலை நாயக்கர் சன்னிதிக்கருகில் ஒரு முறை தீபாராதனை காட்டுவர், கடைசியாக பள்ளியறை எதிரில் இருக்கும் வாசல் வழியாக நேரே பள்ளியறைக்குச் செல்வார்.

அவ்வாறு செல்லும் சமயம், ஓதுவார் ஒருவர்

"தேவ தேவோத்தமா

தேவதா சர்வ தோமா

ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகாச் சரிகா!

பார்வதிப் பிரிய நாயகாச்சரிகா

பாண்டியமண்டாலிதிபாச் சரிகா

சோமாநாத பாண்டிய மஹாராஜா பராக்!"


என்று பராக் சொல்ல, பல்லக்கில் இருந்து திருவாச்சி சமேதமாக இருக்கும் சோமசுந்தர கடவுளின் பாதுகை பள்ளியறை நோக்கி செல்லும்!

பின் தீப தூப ஆராதனைகள் ஆரம்பமாகும்

தீபங்களில் 16 வகை உண்டு.
தூபம், மகாதீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப தீபம், புருஷா மிருக தீபம், ஓலதீபம், கமடதி தீபம், கணு தீபம், வியான்ர தீபம், சிம்ம தீபம், துவஜ தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம்

ஆகிய 16 வகை தீபஆராதனைகள் செய்வித்து! அப்பனும் அம்மையும் உளமகிழ்ந்து பொன்னூஞ்சலில் அமர்ந்து அருள்பாலிப்பர்.

தீபஆராதனைகளனைத்தும் முடிந்தவுடன், கூடியிருக்கும் அவரடியவர்கள்

"பொன்னூஞ்சலில் பூரித்து,
பூஷனங்கள் தரித்து!
பொன்னூஞ்சலில் பூரித்து,
பூஷனங்கள் தரித்து!
ஈசனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து

கண்ணூஞ்சல் ஆடுகின்றாள்

காஞ்சனமாலை
மயிலாள்
பொன்னூஞ்சல் ஆடுகின்றாள்...


பூலோக கைலாச,
பூலோக கைலாச

புண்ணியமா ம மதுரா,
புண்ணியமா ம மதுரா

ஆகாச சுந்தரேசா,
ஆகாச சுந்தரேசா

சதானந்தமே கண்மலராய்!



இந்திரயங்கள் பூஜிக்க,
சங்கரியும் பூரித்து
மங்களத்தாம்பூலம் ஆற்றினாள் - தேவி
தங்க கதவை மெல்ல சாற்றினாள்!"


என்று பாடலிசைக்க, விசிறி ஆட்டம் கண்டு, பின் ஊஞ்சல் ஆடி அப்பனும் அம்மையும் அருள்பாலித்து நடையை சாற்றுவர்!















































எப்போதும் போல் படங்கள் இணைய தொக்குப்பே...

பாடல்கள் நேரடியாக நானே கேட்டு, பாடியவை.

கொசுறு : ஒவ்வொரு முறையும் என் காது பட யாரேனும் ஒருவர் "இன்று தான் இந்த காட்சியை கண்ணார காண முடிந்தது" என்று கூறிவிடுவர்'



மூலிகை ஓவியத்தில் திருக்கல்யாண காட்சி


































11 comments:

Raghav said...

அருமையான தொகுப்பு சிவமுருகன்.. இதுவரை தரிசித்ததில்லை.. என்று வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அப்பாடா, சிவா ஊர்ல தான் இருக்கான் டோய்! பதிவெல்லாம் போடுறான்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருவிழா மற்றும் திருப்பரங்குன்றத்திற்க்கு பயணம் எனும் போது மட்டும் ஒரு சில வகை பூஜைகள் நடக்காமல் இருந்து விடுகிறது.

ஆனால் வருடத்தில் 365 நாட்களும் இடைவிடாது நடக்கும் ஒரே பூஜை இந்த பள்ளியறை பூஜை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜை//

அதிகம் அறியப்படாத தகவல். சொன்னமைக்கு நன்றி சிவா!

தெப்பத்துக்கு வண்டியூர் போயிருக்கும் போது நடை சார்த்தப்படும்-ன்னு மட்டும் தெரியும்!

அப்படி வேற்றூர் எழுந்தருளும் போது, பள்ளியறைப் பூசை, உற்சவ மூர்த்திகள் இல்லாத பட்சத்தில் எப்படி நடக்கும்?-ன்னு அறியச் சொல்லுங்களேன்! இல்லை, தில்லையில் அம்பலவாணர் திருவடி நிலைகள் மட்டுமே பள்ளியறை எழுந்தருள்வது போல் இங்குமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பதிவை அவசரம் அவசரமாத் தட்டச்சினீங்களா? நிறைய இடங்களில் பள்ளிய"ரை"-ன்னு இருக்கே! புளியோத"ரை" ஞாபகமா? :))

தேவ தேவோத்தமா
தேவதா சர்வத் தோமா
ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயக எச்சரிகா!
பார்வதிப் பிரிய நாயக எச்சரிகா
பாண்டிய மண்டாலிதப எச்சரிகா

எச்சரிகை என்பது பராக் என்பதன் இன்னொரு வடிவம்!
அரசன் வருவதைக் குறிப்பிடுவது!
எச்சரிக ரா ராம, ஹே ராமச்சந்திரா என்ற தியாகராஜர் பாடலும் இதே வகை தான்!

சிவமுருகன் said...

இராகவ்,

//அருமையான தொகுப்பு சிவமுருகன்.. இதுவரை தரிசித்ததில்லை.. என்று வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை..//

விரைவில் உங்களுக்க இந்த வாய்ப்பு கிட்ட அன்னையை வேண்டுகிறேன்.

சிவமுருகன் said...

கே.ஆர்.எஸ். அண்ணாச்சி,

//அப்பாடா, சிவா ஊர்ல தான் இருக்கான் டோய்! பதிவெல்லாம் போடுறான்! :))//

இப்பதிவு பல நாட்களாக தட்டி வைத்த பதிவு. ஏனோ பதிக்க மூன்று மாதம் ஆகிவிட்டது. எல்லாம் அவள்(ன்) சித்தம்.

//தெப்பத்துக்கு வண்டியூர் போயிருக்கும் போது நடை சார்த்தப்படும்-ன்னு மட்டும் தெரியும்!

அப்படி வேற்றூர் எழுந்தருளும் போது, பள்ளியறைப் பூசை, உற்சவ மூர்த்திகள் இல்லாத பட்சத்தில் எப்படி நடக்கும்?-ன்னு அறியச் சொல்லுங்களேன்!//

நள்ளிரவு 1-2 மணிக்கு இது நடைபெறும் அப்போதே திருப்பளியெழுச்சியும் நடந்தேறும்.

//பதிவை அவசரம் அவசரமாத் தட்டச்சினீங்களா?//

கண்டுபிடுச்சிட்டீங்களே! பெங்களூருவில எப்ப பவர்-கட் ஆகும்ன்னு தெரியல அதான கொஞ்சம் அவசர கதியில் செய்தேன்.

//நிறைய இடங்களில் பள்ளிய"ரை"-ன்னு இருக்கே! புளியோத"ரை" ஞாபகமா? :))//

நல்ல உ'றை'க்கிற மாதிரி சொன்னீங்க... மாற்றி விடுகிறேன்.

//தேவ தேவோத்தமா
தேவதா சர்வத் தோமா
ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயக எச்சரிகா!
பார்வதிப் பிரிய நாயக எச்சரிகா
பாண்டிய மண்டாலிதப எச்சரிகா

எச்சரிகை என்பது பராக் என்பதன் இன்னொரு வடிவம்!
அரசன் வருவதைக் குறிப்பிடுவது!
எச்சரிக ரா ராம, ஹே ராமச்சந்திரா என்ற தியாகராஜர் பாடலும் இதே வகை தான்!//

தகவலுக்கு நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

பல காலம் கழித்து இன்று நல்ல தரிசனத்தை செய்து வைத்தீர்கள் சிவமுருகன்... சிவ-சக்தி ஐக்ய காலத்தில் பூஜை ஆகவே....என்றும் சிறப்பானது இது.

மூக்குத்தி தீபாராதனையையும் சொல்லியிருக்கலாமோ?...அதன் பிறகு தானே அன்னை தனது (கர்ப) க்ருஹத்திலிருந்து பள்ளியறைக்கு எழுந்தருளுவதாக மரபு.

'மீனாக்ஷி மேமுதம்' என்னும் முத்துஸ்வாமி தீக்ஷதர் பாடலும் தினமும் பாடப்படும்.....முன்பு அந்தப் பாடல் பாடியவர் என் தந்தையின் நண்பர்/குடும்ப நண்பர்...இவர் ஒரு சிறந்த கவிஞர், அழகிய பல பாடல்களை அன்னையீன் மீது எழுதி, எங்கள் வீட்டில் பாடி பின்பு கோவிலிலும் பாடுவார். அவர் ஊரில் இல்லாத நேரங்களில் அவரது சகோதரி, மனைவி என்று அக்குடும்பத்திலிருந்து ஒருவர் கலந்து கொண்டு பாடுவர்.

சிவமுருகன் said...

மௌலி அண்ணா,

//பல காலம் கழித்து இன்று நல்ல தரிசனத்தை செய்து வைத்தீர்கள் சிவமுருகன்... சிவ-சக்தி ஐக்ய காலத்தில் பூஜை ஆகவே....என்றும் சிறப்பானது இது.//

சரியாக குறிப்பிட்டீர்கள்

//மூக்குத்தி தீபாராதனையையும் சொல்லியிருக்கலாமோ?...அதன் பிறகு தானே அன்னை தனது (கர்ப) க்ருஹத்திலிருந்து பள்ளியறைக்கு எழுந்தருளுவதாக மரபு.//

youtube உபயத்தில் இன்னொரு அசைபட பதிவு இருக்கிறது அதில் அவசியம் சொல்கிறேன்.


//'மீனாக்ஷி மேமுதம்' என்னும் முத்துஸ்வாமி தீக்ஷதர் பாடலும் தினமும் பாடப்படும்.....முன்பு அந்தப் பாடல் பாடியவர் என் தந்தையின் நண்பர்/குடும்ப நண்பர்...இவர் ஒரு சிறந்த கவிஞர், அழகிய பல பாடல்களை அன்னையீன் மீது எழுதி, எங்கள் வீட்டில் பாடி பின்பு கோவிலிலும் பாடுவார். அவர் ஊரில் இல்லாத நேரங்களில் அவரது சகோதரி, மனைவி என்று அக்குடும்பத்திலிருந்து ஒருவர் கலந்து கொண்டு பாடுவர்.//

மிக சிறப்பு, தகவலுக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

தேவ தேவோத்தமா
தேவதா சர்வ தோமா
ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகாச் சரிகா!
பார்வதிப் பிரிய நாயகாச்சரிகா
பாண்டியமண்டாலிதிபாச் சரிகா
சோமாநாத பாண்டிய மஹாராஜா பராக்!"

ஆஹா! படிக்கும்போதே கண்களில் நீர் பெருகி மெய் சிலிர்க்கிறதே பார்க்கும்போது எப்படி இருக்கும். நன்றி சிவ. அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிட்ட வேண்டும்

Anonymous said...

மூலிகை படத்தின் விபரம் சிறிது தேவை.//சித்ரம்.

குமரன் (Kumaran) said...

பள்ளியறை பூசையை ஒரே ஒரு முறை தான் சிறுவயதில் பார்த்த நினைவு சிவமுருகன். அதற்கப்புறம் இந்தப் பூசை நடக்கும் நேரத்தில் அம்மன் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.

நான் சொல்ல வந்த எச்சரிகாவை இரவிசங்கர் சொல்லிவிட்டார். :-)