Tuesday, April 19, 2011

அழகர் எத்தனை அழகரடி!


மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகர் பின்னர் வெய்யிலிலேயே பல மண்டபகப்படிகளுக்கு விஜயம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உச்சி வெயிலின் போது தீர்த்தவாரி மண்டபகப்படிக்கு வந்த அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்


ராமநாதபுரம், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை விழாவையொட்டிசுவாமி கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையாற்றில் இறங்கினார்.


விருதுநகர், சாத்தூர் வைப்பாற்றில் கள்ளழகர், பச்சை பட்டு உடுத்தி இறங்கினார்

சித்திரைவிழாயொட்டி குதிரை வாகனத்தில் வந்த அழகர் அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

குறிப்பு : தலைப்பு மட்டும் தான் என் எழுத்தில் படங்கள் செய்திகள் தினமலரிலிருந்து!

1 comment:

குமரன் (Kumaran) said...

வைகையாத்துல இறங்குனா மட்டும் தான் தண்ணி பீச்சியடிப்பாங்க போல. மத்த ரெண்டு அழகர்களும் பாவம் வெயில்ல வேகுறாங்க! :-(