மீனாக்ஷி அம்மன் சன்னதியில் நுழைவுவாயிலில் கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி, இயங்க்னருபினி, ஷ்யமளா, மஹேஸ்வரி, மனொமோஹினி என்ற 8 பெண் தெய்வங்கள் நின்ற நிலையில் அருள் பாலித்துவருகின்றனர். இவை திருமலை மன்னனின் மனைவி ருத்ரபதி அம்மாவால் நிர்மானிக்கப்பட்டது. இம் மண்டபத்தில் தேங்காய், பழம், கற்பூரம் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் நிறைய இருக்கின்றன.
இம்மண்டபதின் வாயிலில் மையமாக நின்று அம்மன் சந்நதியை நோக்கினால், உள்ளே நடக்கும் கற்பூர ஜோதியை தரிசிக்கலாம்.
பின்னால் நகரா மண்டபம், வலது பக்கம் மகாத்மா காந்தி பூங்கா, இடதுபுரம் பக்தர்க்ளின் காலனிகளின் பாதுகாக்குமிடம்.
மண்டபத்தில் இடது மூலையில் விநாயகரும், வலது மூலையில் ஆறுமுக கடவுளான முருகனும், ஓரேகல்லில் வடிக்கப் பட்டுள்ளனர். 14மீ நீளமும், 5.5மீ அகலமும் கொண்ட இம் மண்டபம் 1960-63 -ல் கட்டப்பட்டது.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு
8 comments:
படங்கள் நன்றாக இருக்கின்றன.
யோசனையும் நல்ல யோசனைதான்.
தொடர்ந்து இடுகைகள் இடுங்கள்.
தலைப்புகள் எல்லாவற்றிலும் 'கொயில்' என்று எழுதி இருக்கிறீர்கள்.
'கோயில்'
-மதி
அருமையான படங்கள் சிவமுருகன். தகவல்களும் அருமை. நம்ம ஊர் கோவிலைப் பற்றி நான் அறியாத பல தகவல்களை அறிகிறேன் உங்கள் பதிவுகளைப் படித்துவிட்டு.
தெளிவான புகைப்படங்கள். நிறையப் புதுத் தகவல்கள்.
தொடருங்கள்.
தவருகளை திருத்திவிட்டேன் மதி ஐயா.
சுட்டிகாட்டியமைக்கு நன்றி.
அருமை
அன்பு குமரன்,
ஒரு சில பதிவுகளின் (பதிக்கும், பதித்த) சில விஷயங்களுக்கு எந்தவித அடிப்படை தகவல்கள் இல்லை, என் பாட்டி, அத்தைமார்கள், மாமாமார்கள் சொல்லியும், சில புத்தகங்களை படித்தும் தெரிந்து கொண்டதை சொல்கிறேன்.
அன்புள்ள ஞானம் ஐயா,
என்னிடத்தில் உள்ள புகைபடங்களை சேகரிக்கும் பழக்கம் எந்தையிடமிருந்து வந்தது. அவள் கருணை, அவன் சித்தம்.
நன்றி star
Post a Comment