தற்போது நாம் நிற்பது மீனாக்ஷி நாயக்கர் மண்டபம். இங்கிருந்து தென் பகுதிக்கு சென்றால், வன்னி மரத்தடி விநாயகரும், சாட்சி லிங்கமும், வன்னிமரமும், வன்னி, நெல்லி, அரசு, வேம்பு, மந்தாரை, அத்தி, நாகலிங்க என பல விதமான மரத்தடியில் வீற்றிருக்கும் கணேச மூர்த்திகளை தரிசிக்கலாம். எதிரில் யானையும், ஒட்டகம் கட்டுமிடமும், ஆடி வீதியில் கோ மடமும் இந்த தென் பகுதியில் தான் உள்ளது.
தெற்கு பகுதியை சில பதிவுக்கு பிறகு சொல்கிறேன்,
வடபகுதியில் சுவாமி சன்னிதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது திருக்கல்யாணமண்டபம். சில ஆண்டுகளுக்கு முன் வரை இங்கு தான் திருக்கல்யாணம் நடைபெற்றுவந்தது, அதை பார்க்க வி.ஐ.பி. க்கள் பாஸ் மூலம் மட்டுமே அனுமதிக்கபட்டனர், தற்போது இந்நிலை மாறி அனைவரும் காணும் வண்ணம், ஆடிவீதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கே திருமணம் நடந்து வருகிறது. தற்போது திருமணம் முடிந்த பிறகு அனைவரும் இங்கே எழுந்தருளி பக்தர்களை பேரின்பக்கடலில் ஆழ்த்துகின்றனர். இதில் விஷேசம் யாதெனில் திருப்பரங்குன்றத்து முருகனும், பவளக்கனிவாய் பெருமாளும் திருமணத்திற்க்கு வருகை தருவதும், பெருமாள் அண்ணன் ஸ்தானத்திலிருந்து தாரைவார்த்து தர, திருமாங்கல்ய தாரனத்துடன் திருமணம் நடை பெருகிறது.
இம்மண்டபதின் மேடையின் வலது ஓரத்தில் உள்ள குண்டோதரனுக்கு திருகல்யாண நாளன்று முதல் படையல் செய்யபட்டு பின்னரே மற்ற தெய்வங்களுக்கு நெய்வேத்தியம் படைக்க படுகிறது.
திரும்பும் வழியில் 'எத்துன்பம் வந்தாலும் களைய இதோ நானிருக்கிறேன்' என்று சொல்லியபடி வியக்கிர பதத்துடனும், மனித உடலுடனும், சிங்கமுகத்துடனும் நிற்க்கும் சரபேஸ்வரை கண்ட மாத்திரத்தில் நம் துன்பங்கள் விலகும் விந்தையை அனுபவிக்கலாம். 'சங்கர சங்கர' நாமம் சொல்லி அவரை வலம் வந்து மீனாட்சி சந்நதி நோக்கி வரும் சமயத்தில், மீனாக்ஷி நாயக்கர் மண்டபதில் உத்திரதில் இருக்கும் ராசி மண்டலம் காண்போரின் கருத்தை கொள்ளை கொள்ள செய்யும்.
அடுத்து பதிவில் வருவது முதலிமண்டபம்.
முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு
2 comments:
//குன்டொதரனுக்கு//
இதைக் "குண்டோதரனுக்கு" எனத் திருத்தலாமா?
//திருபரகுன்றத்து//
திருப்பரங்குன்றத்து
//பவளகனிவாய்//
பவளக்கனிவாய்
//சந்நதி //
சன்னிதி அல்லது ச்ந்நிதி
நன்றி ஞானம் ஐயா,
எல்லாம் குறைகளையும் திருத்திவிட்டேன். மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Post a Comment