Friday, April 07, 2006

59: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 21

மதுரையை காக்கவும், வேதங்களை காக்கவும், ஈசன் செய்த விளையாட்டுக்கள் பலப்பல அதில் 64 திருவிளையாடல்களை திருவிளையாடல் புராணம் சொல்கிறது. (மதுரை வீரன் படத்தில் 14 திருவிளையாடல்களை தம் நாடியத்தில் வெளிப்படுத்துவார் நாட்டிய பேரொளி)

எங்கள் முக்கண்ணன் செய்த விளையாடல்கள் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை வண்ண சிற்ப்பதில் பார்க்க நீங்கள் சொக்கநாதர் சன்னிதியை தான் அடைய வேண்டும். ஈசனின் விளையாட்டுக்களை பார்க்க நின்று நிதானமாக ஒவ்வொரு சிற்ப சித்திரமாக பார்க்கும் பொழுது ஒவ்வொரு சிற்பங்களும் கண்ணைகவரும். தருமிக்கு பொற்குவையளித்தது, ரசவதம் செய்தது, மாணிக்கம்-விறகு-வளையல் விற்றது, பன்றிகளுக்கு பால்கொடுத்தது, மதுரைக்கு எல்லைகாட்டியது, புத்திர காமேஷ்டி யாகத்திலிருந்து மீனாட்சியம்மன் பிறந்தது, குண்டோதரனின் பசி-தாகம் தீர்க்க வைகையை கொண்டுவந்தது, பிட்டுக்கு மன்சுமந்தது, பிரம்படி பட்டது, நரியை பரியாக்கியது, எழுகடல் கொண்டுவந்தது, புலவர்கள் சபையில் வாதாடியது, என்று ஈசனின் விளையாட்டுக்கள் இன்றும் தொடர்கிறது.

காட்சிக்கு ஒருசில இதோ








முந்தைய பதிவு



முந்தைய பதிவு

அடுத்த பதிவு

5 comments:

rnatesan said...

படங்கள் அனைத்துமே தத்ரூபமாக நேரில் பார்ப்பது போல் உள்ளது,சிவமுருகன் சிறந்த ஆன்மீக வளர்க்கும் முயற்சி!!

rnatesan said...

படங்கள் அனைத்துமே தத்ரூபமாக நேரில் பார்ப்பது போல் உள்ளது,சிவமுருகன் சிறந்த ஆன்மீக வளர்க்கும் முயற்சி!!

சிவமுருகன் said...

நன்றி நடேசன் சார்.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்,

சிறுவயதில் தனியாக அம்மன் கோவிலுக்குச் சென்று இந்த சிற்பங்களை எல்லாம் ஒவ்வொன்றாகக் கழுத்து வலிக்க வலிக்கப் பார்த்தது நினைவிற்கு வருகிறது. ஒரு முறை அப்படி கோவிலுக்குச் சென்று இந்த சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது வெகு நேரம் ஆகிவிட்டதால் என்னைக் காணவில்லை என்று எண்ணி அம்மாவும் மாமாவும் கோவிலுக்குப் பதட்டத்துடன் தேடி வந்துவிட்டனர். நல்லவேளை என்னை சண்டீசர் பக்கத்தில் பழனியாண்டவர் சிற்பத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிடித்து விட்டனர். நல்ல திட்டு கிடைத்தது. போலீசுக்குப் போவதாக இருந்தார்களாம். :-)

சிவமுருகன் said...

நன்றி குமரன் அண்ணா.