Monday, October 12, 2009

அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் உலா!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பற்றி ஒரு இணையதளம் உருவாகி உள்ளது!

இத்தளத்தில் இருக்கும் படங்கள் சாதரணமாக உலக அதிசயங்கள், சினிமா ஒளிப்பதிவுகளில் மட்டுமே நாம் பாத்திருக்கக்ககூடும், அதே போன்ற படங்கள் எம் அன்னையின் ஆலயத்தையும் பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது.

25க்கும் மேற்ப்பட்ட முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

இதில் முக்கியமாக நான் பார்த்து மெய்சிலிர்த்த இடம் கம்பத்தடி மண்டபம். இம்மண்டபத்தை இதைவிட அழகாக முற்றிலும் அணு-அணுவாக வேறெங்கும் தரிசிக்க முடியாது.

நீங்களும் கண்டு ஆனந்திக்க இங்கே சொடுக்கவும் அல்லது இங்கே.

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சூப்பரோ சூப்பர்!
எனக்குப் பிடிச்சது பொற்றாமரைக் குளம் தான் சிவா! படிக்கட்டில் கிட்டக்க போயி உட்கார்ந்து கொள்ளறாப் போலவே இருக்கு! இன்னமும் படிகளில் இருந்து குதிச்சி, தண்ணிக்குள்ளாற கால் நனைக்கறாப் போலவும் இருக்கு! ஜாலி! :)

சிவமுருகன் said...

100+ படங்கள் இந்த மாபெரும் படைப்பை உண்டாக்கியுள்ளது என்ற தேவரகசியம் தெரிந்தவுடன் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை!

ஒவ்வொரு இடத்தையும் தேடி தேடி போய் பார்த்து அதே ஜாலியை அடைந்தே KRS.

S.Muruganandam said...

அடியேனும் சென்று முப்பரிமாணத்தில் அம்மன் கோவிலை தரிசித்தேன்.

நன்றி சிவமுருகன்

*இயற்கை ராஜி* said...

தங்களின் வலைப்பூவைப் பற்றிய விவரத்தை httப்://blogintamil.blogspot.com இங்கே தந்துள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள். நன்றி

cheena (சீனா) said...

அன்பின் சிவமுருகன்

அருமையான படங்கள் - முப்பரிமான - சுழலும் படங்கள் - அய்யோ - நமது மீனாட்சி அம்மன் கோவிலா இது என வியக்கும் வண்ணம் வன்னம் தமிழ்நாடு சுற்றுலாத்துறையினர் செய்திருக்கும் மாயா ஜாலம் மனதைக் கவருகிறது.

நல்வாழ்த்துகள் சிவமுருகன்

இன்னும் அதிக நேரம் செலவழித்து அனைத்துப் படங்களையும் பொறுமையாகப் பார்க்க வேண்டும்.

View360 said...

வணக்கம் நண்பர்களே!
உங்களின் வலைதளங்களில் பகிர்வுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி, http://view360.in/ நாங்கள் மேலும் தஞ்சை, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, கங்கைகொண்ட சோழபுரம், போன்ற பல கோயில்களையும்,
ஊட்டி, கொடைக்கானல், டாப் ஸ்லிப், வால் பாறை, குற்றாலம், ஹோகேநேகள் போன்ற சுற்றுலாதளங்களையும் உருவாக்கி இருகின்றோம். தமிழகத்தின் மேலும் பல இடங்களையும் மதுரையை போன்றே மெய்நிகர்(virtual tour) தளமாக எங்கள் வலைத்தளத்தில் காண அன்புடன் அழைக்கின்றோம். நன்றி!