அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து பல மைல் தூரத்தில் இருந்தாலும் இவர் மதுரையில் மிக மிக பிரபலமான முனி. ஆம் அவர் தான் பாண்டி முனி.
(நக்கீரன் இணையதளத்திலிருந்து)
ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் :
தனிகோவிலில் வினாயகர், முருகன், மற்றும் நாகர்கள் நடுவே, வட்டக்கல் நட்ட தெய்வமாய், இருந்தவர் உருவம் கண்டு, யோகத்தில் அமர்ந்து காவல் தெய்வமாய் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் தீர்த்த பிரசாதம் தருவது குறிப்பிடத்தக்க்து.
விட்டவாசல் முனீஸ்வரர்
இவர் புதுமண்டபதிற்க்கு கிழக்கே எழுகடல் தெருவில் கிழக்கு காவல் முனியாக இருக்கிறார். மூன்றடி ஆழத்தில் இறங்கிச் சென்றுதான் இவரை வணங்க முடியும்.
வடக்கு வாசல் முனீஸ்வரர்,
இவர் வடக்கு கோபுரத்திற்க்கு அருகில், தனி சன்னிதியில், தன் பரிவார தெய்வங்களுடன் அருள் தருகிறார்.சித்திரை திருவிழா சமயத்தில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு இங்கிருந்தான் சந்தனம் செல்வது குறிப்பிடத்தக்கது. மதுரையை சார்ந்த நான்கு வீட்டு சகோதரர்கள் முறைமாற்றி இக்கோவிலை நிர்வகிக்கின்றானர்.
மேற்க்கு வாசல் முனீஸ்வரர்
மேற்க்கு பகுதியில் திண்டுக்கல் ரொட்டில் அபய வரத மூர்த்தியாக ஜடாமுனீஸ்வரர் வீற்றுள்ளார்.
முனிகளின் மேலதிக தகவல்கள்
http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=491
1 comment:
சிவமுருகன்,
ஜடாமுனி கோவில் தெருவில் இருக்கும் ஜடாமுனீஸ்வரர் கோவிலுக்கு மட்டும் சென்றிருக்கிறேன். மற்ற கோவில்களைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
Post a Comment