மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகர் பின்னர் வெய்யிலிலேயே பல மண்டபகப்படிகளுக்கு விஜயம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உச்சி வெயிலின் போது தீர்த்தவாரி மண்டபகப்படிக்கு வந்த அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்
ராமநாதபுரம், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை விழாவையொட்டிசுவாமி கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையாற்றில் இறங்கினார்.
விருதுநகர், சாத்தூர் வைப்பாற்றில் கள்ளழகர், பச்சை பட்டு உடுத்தி இறங்கினார்
சித்திரைவிழாயொட்டி குதிரை வாகனத்தில் வந்த அழகர் அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
குறிப்பு : தலைப்பு மட்டும் தான் என் எழுத்தில் படங்கள் செய்திகள் தினமலரிலிருந்து!
முந்தைய பதிவில் திக் விஜய காட்சியை மூலிகை ஓவியத்தில் காட்டியிருந்தேன். யார் யாரென தெரியவில்லை என்று என்னுடைய நன்பர்கள் கேட்க அதை விவரிக்க இப்பதிவு இட்டிருந்தேன், தற்போது புதிதாக ஒரு மடிகணினி வாங்கி அதில் ஒரு நல்ல இடுகை செய்ய ஒரு நல்ல சுட்டி தேடியவேளையில் இன்றுகாலை இப்படம் கண்ணில் பட்டது உடனே பதித்து விட்டேன். தேச மங்கையர்கரிசி அவர்கள், தம் பாணியில் மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருகல்யாணத்தை விவரிக்கும் அசைபடம் இப்பதிவில்.
மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாடாக, திசையாக செல்வதை அவர் சொல்லி கேட்க வேண்டும்! கேளுங்களேன்!
திக் விஜய நாளன்று இந்த காட்சி மதுரை மாசி விதிகளில் நடக்கும். அம்மன் சந்நிதி - கீழ மாசி வீதி சந்திப்பில் - சூரிய பகவான், கீழ மாசி வீதி - தெற்க்கு மாசி வீதி சந்திப்பில் (மஹால் வடம் போகி தெருவில்) - அக்னி பகவான், தென்திருவாலவாய் சுவாமி கோவில் வாசலில் - எம தருமன், தெற்கு - மேற்கு மாசிவிதி சந்திப்பில் - பித்ரு, மேல மாசிவிதி திண்டுக்கல் ரோடு சந்திப்பில் - வருண பகவான், மேற்கு - வடக்கு மாசி வீதி சந்திப்பில் - வாயு தேவன், வடக்கு கிருஷ்ணன் கோவில் அருகில் - குபேரன் மற்றும் வடக்கு மாசி வீதி - கீழ மாசி வீதி சந்திப்பில் - ஈசானன். பின் கீழமாசி வீதியில் சொக்கநாத பெருமானுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் நேர் எதிர் நடக்கும் திருக்காட்சி கண்கொள்ளா காட்சி.
அதே போன்ற அனைத்து வித கடவுளரும் வரும் ஒரு ஓவியம். அழகாக படமாக்கியுள்ளார் பிரபு என்ற கலைஞர்.
சூரிய பகவான் - மேலிருந்து மூன்றாவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம். அக்னி பகவான் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து முதலாவது கட்டம். எம தருமன் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம். பித்ரு - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து மூன்றாவது கட்டம். மழை கடவுளான வருண பகவான் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து கடைசி கட்டம். வாயு தேவன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து முதலாவது கட்டம். குபேரன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம். மற்றும் ஈசானன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து மூன்றாவது கட்டம்.
என்ற அஷ்ட திக்கு பாலகர்களை மூலிகை ஓவியத்தில் திக்கு விஜயம் செய்யும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.
அன்புள்ள அனைவருக்கும் வணக்கம், கடந்த 26.12.2010 அன்று தர்ம சாஸ்த - புஷ்கலா தேவி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அன்றைய நிகழ்வுகளை சன் டீவி தமது தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளனர். தவறவிட்டவர்களுக்காக.இங்கே ! கீழே வர்ணனை வார்த்தைகளை அளித்தவர் " வலைச்சர ஆசிரியர் சீனாஅய்யா " அவர்கள்!
கடந்த 09.01.2011 ஞாயிறு அன்று சன் தொலைக்காட்சியில் காலை 08:30க்கு தெய்வ தரிசனம் - 128ல் - ஆரியங்காவுதர்ம சாஸ்தா - புஷ்கலா தேவி திருக் கல்யாண உற்சவ நிகழ்சிகள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. செண்டை மேளம் முழங்க வேடம் புனைந்த கலைஞர்கள் நடனத்துடன் துவங்கிய நிகழ்ச்சி - கோவிலையும், பரிவார தேவதைகளையும், உற்சவ மூர்த்திகளையும், மூலவர் தர்மசாஸ்தா மற்றும் புஷ்கலா தேவியையும் அழகாகப் படம் பிடித்து ஒளிபரப்பினர். கருப்பா நதி, கருப்பண்ண சாமி, கருப்பாயி, என அழைக்கப்படும் காவல் தெய்வம் முறுக்கிய மீசையுடன் உயர்த்திய வாளுடன் காட்சி அளித்தார். நாக சன்னிதியில் நாகம்மாள் காட்சி அளிக்கிறார். பெண் வீட்டார் தாலிக்கொடி ஊர்வலத்தில் தீபம் ஏற்றிய தட்டுகளுடன் மாப்பைள்ளை அழைப்பு நடத்தியது காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீராஞ்சனம், தேங்காயில் நெய் தீபம், மணமகள் ஊஞ்சல் தரிசனம் இவற்றுடன், சௌராஷ்ட்ர மக்கள் - சம்பந்தம் செய்வதற்கு - பெண் வீட்டாராகச் சென்று திருமணத்தை நிசயம் செய்வது, சீர் கொண்டு செல்வது, சப்பர ஊர்வலம், மாலை மாற்றுதல், தாலி பூஜை, மாங்கல்ய தாரணம், என அனைத்து நிகழ்வுகளையும் அழகாகப் படம் பிடித்து தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் காணும் வண்ணம் ஒளி பரப்பியது நன்று. மணமகள் -புஷ்கலாதேவிக்கு அணிவித்த பல மாங்கல்யச் சரடுகள் - பிரசாதமாக - பொதுமக்களுக்கு வ்ழங்கப் பட்டது. திரு மணம் ஆகாத பெண்கள் வாங்கிக் கொண்டால் 21 தினங்களில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. காலை ஒரு பொழுது மங்களகரமாகச் சென்றது - எங்கும் தனித்துக் காணப்படும் ஐயப்பன் ஆரியங்காவில் மட்டும் தான் தம்பதி சமேதராக புஷ்கலா தேவியாருடன் காட்சி அளித்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்காட்சியினைக் காணப் பரிந்துரைத்த நண்பன் சிவ முருகனுக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய ஆசிகள்.