அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்,
கடந்த 26.12.2010 அன்று தர்ம சாஸ்த - புஷ்கலா தேவி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அன்றைய நிகழ்வுகளை சன் டீவி தமது தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளனர். தவறவிட்டவர்களுக்காக.இங்கே !
கீழே வர்ணனை வார்த்தைகளை அளித்தவர் " வலைச்சர ஆசிரியர் சீனாஅய்யா " அவர்கள்!

கடந்த 09.01.2011 ஞாயிறு அன்று சன் தொலைக்காட்சியில் காலை 08:30க்கு தெய்வ தரிசனம் - 128ல் - ஆரியங்காவுதர்ம சாஸ்தா - புஷ்கலா தேவி திருக் கல்யாண உற்சவ நிகழ்சிகள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
செண்டை மேளம் முழங்க வேடம் புனைந்த கலைஞர்கள் நடனத்துடன் துவங்கிய நிகழ்ச்சி - கோவிலையும், பரிவார தேவதைகளையும், உற்சவ மூர்த்திகளையும், மூலவர் தர்மசாஸ்தா மற்றும் புஷ்கலா தேவியையும் அழகாகப் படம் பிடித்து ஒளிபரப்பினர்.
கருப்பா நதி, கருப்பண்ண சாமி, கருப்பாயி, என அழைக்கப்படும் காவல் தெய்வம் முறுக்கிய மீசையுடன் உயர்த்திய வாளுடன் காட்சி அளித்தார். நாக சன்னிதியில் நாகம்மாள் காட்சி அளிக்கிறார்.
பெண் வீட்டார் தாலிக்கொடி ஊர்வலத்தில் தீபம் ஏற்றிய தட்டுகளுடன் மாப்பைள்ளை அழைப்பு நடத்தியது காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீராஞ்சனம், தேங்காயில் நெய் தீபம், மணமகள் ஊஞ்சல் தரிசனம் இவற்றுடன், சௌராஷ்ட்ர மக்கள் - சம்பந்தம் செய்வதற்கு - பெண் வீட்டாராகச் சென்று திருமணத்தை நிசயம் செய்வது, சீர் கொண்டு செல்வது, சப்பர ஊர்வலம், மாலை மாற்றுதல், தாலி பூஜை, மாங்கல்ய தாரணம், என அனைத்து நிகழ்வுகளையும் அழகாகப் படம் பிடித்து தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் காணும் வண்ணம் ஒளி பரப்பியது நன்று.
மணமகள் -புஷ்கலாதேவிக்கு அணிவித்த பல மாங்கல்யச் சரடுகள் - பிரசாதமாக - பொதுமக்களுக்கு வ்ழங்கப் பட்டது. திரு மணம் ஆகாத பெண்கள் வாங்கிக் கொண்டால் 21 தினங்களில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
காலை ஒரு பொழுது மங்களகரமாகச் சென்றது - எங்கும் தனித்துக் காணப்படும் ஐயப்பன் ஆரியங்காவில் மட்டும் தான் தம்பதி சமேதராக புஷ்கலா தேவியாருடன் காட்சி அளித்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்காட்சியினைக் காணப் பரிந்துரைத்த நண்பன் சிவ முருகனுக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய ஆசிகள்.

நன்றி !
6 comments:
நன்றி சிவா!
தம்பதிகளாப் பார்க்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி! :)
நல்லது செய்தீர்கள் சிவமுருகன். நன்றி.
அன்பின் சிவமுருகன்,
தொலைக்காட்சியில் காண, தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. அன்றைய தினமே கண்டு களித்தோம். காணத் தவறியவர்களுக்காக, ஒரு கானொளியும் பகிர்ந்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நன்றி கே ஆர் எஸ்
நன்றி அண்ணா
அன்புள்ள ஐயாவிற்கு,
தங்களின் மின்னஞ்சலுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்கநன்றி
Post a Comment