Sunday, April 30, 2006

108: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 24

நடரஜர் சன்னிதி சற்றே உயர்ந்த மேடையில் உள்ளது. உள்ளே நடராஜரின் வித விதமான நடன சபைகளின் உற்சவர்கள் உள்ளனர். கனக சபை, ரத்தின சபை, சித்திர சபை.

__________
இன்று(30-4-2006) அக்ஷ்ய திருதியை,

இந்த நன்நாளில் பல்வேறு தெய்வங்கள், தங்களது செல்வங்களை பெருக்கிக்கொள்ளவும் காத்துக் கொள்ளவு அன்னை லக்ஷிமியை வணங்கியுள்ளனர். நாமும் அவளை வணங்கி அவளருள் பெருவோம்.

நடராஜர் சன்னிதிக்கு அருகில் இருப்பவர், அன்னை மஹாலக்ஷ்மி.

தாமரைபூவில் அமர்ந்தவளே- செந்
தாமரைபூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே (செந்தாமரை)
சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சில்
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே (செந்தாமரை)

அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மீ தாயே
அமரர்கள் துதுபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாவே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (செந்தாமரை)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே (செந்தாமரை)

என்று இவளை பாடித்தொழுது சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு செல்வோம்.
அங்கு சண்டிகேஸ்வரரிடம் அமைதியாக நம் வருகையை சொல்லி பின் விடைப்பெற்று மேற்கு நோக்கி வருவோம்.

அடுத்த பதிவு சனீபகவான் வணங்கி ஈஸ்வர பட்டம் பெற்ற 'கால பைரவர்'.
அவருக்கு எதிரில் இருக்கும் வண்ணி சிற்பமும்.

(இப்பதிவு என்னுடைய 108 வது பதிவு, மேலும் அன்னை லக்ஷ்மியின் படம் பதிவிலேற்றப் பட்ட 100வது படம்)

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

11 comments:

ENNAR said...

எப்படி சிவா பதிவை எண்ண முடிகிறது நான்எழுதியதை என்னால் எண்ண முடியவில்லை 108 பதிவு 100 படம் நன்றாக உள்ளது
http://aanmeekam.blogspot.com/2006/04/blog-post_29.html

Gayathri Chandrashekar said...

mudhal murai thangal padhivirku vandhu pala kadavulgalai dharisiththen...kaalaiyil indha nalla naalil arpudhamaana kaatchigalai kandu,slogangalai padiththadhil magizhchchi

rnatesan said...

fantastic murugan,
heavy work load in factory,
see u again!!

சிவமுருகன் said...

என்னார் சார்,
உங்கள் dash board-ல் இருக்கும் எல்லா பதிவின் மொத்த எண்ணிக்கை தனிதனியாக காட்டும். ஒட்டுமொத்த எண்ணிக்கையை நீங்களே கூட்டி விடமுடியும்.

சிவமுருகன் said...

காயத்ரி மேடம்,
வாங்க, வாங்க முதல் முறை வந்துள்ளீர்கள்.

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி. தொடர்ந்து வருகை தரவும்.

சிவமுருகன் said...

நடேசன் சார்,
நன்றி.
விரைவில் சந்திப்போம்.

துளசி கோபால் said...

108 ரொம்ப நல்ல நம்பர்.

பதிவும் அருமை.

நல்லா இருங்க.

சிவமுருகன் said...

என்னார் சார்,

ஒவ்வொரு படம் ஏற்றப்பட்டவுடன் அதை எல்லாம் ஒரு தனி folder போடுவது வழக்கம் அதில் வைத்த 100வது படம் அன்னை லக்ஷ்மியின் படம்.

சிவமுருகன் said...

அம்மா,
முதல் முறை வந்துள்ளீர்கள்.
ஆசிகளுக்கும், பின்னூட்டத்திற்க்கும் ரொம்ப நன்றி.

குமரன் (Kumaran) said...

என்ன சிவமுருகன், இந்தப் பதிவில் வெகு வேகமாய் சென்று விட்டீர்கள். மகாலக்ஷ்மியின் முன்னால் மட்டும் கொஞ்சம் நிதானமாய் போனீர்கள் போல் இருக்கிறது. ஏன் இந்த வேகம்? :-)

108வது பதிவிற்கும் 100வது படத்திற்கும் வாழ்த்துகள்.

சிவமுருகன் said...

//என்ன சிவமுருகன், இந்தப் பதிவில் வெகு வேகமாய் சென்று விட்டீர்கள். மகாலக்ஷ்மியின் முன்னால் மட்டும் கொஞ்சம் நிதானமாய் போனீர்கள் போல் இருக்கிறது. ஏன் இந்த வேகம்? :-)//

மெதுவாக நிதானமாக தான் செல்கிறேன். பாருங்கள் இன்னும் 300+ படங்களை வலையேற்ற வேண்டும். இப்போது வெறும் 100 படங்களே வலையேற்றமாகியுள்ளது.

//108வது பதிவிற்கும் 100வது படத்திற்கும் வாழ்த்துகள். //
வாழ்த்துக்களுக்கு நன்றி.