Monday, May 01, 2006

111: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 25

அடுத்த படியாக நாம் பைரவரை நோக்கி செல்லும் முன் இரு சன்னிதியை தரிசிக்கயுள்ளோம். பொற்பாண்டியன் என்ற மன்னனின் இந்த சன்னிதியில் இன்றும் அருவமாக இருந்து அம்மை-அப்பனை வணங்கி வருவதாக நம்பப்படுகிறது. அடுத்த சன்னிதியில் உயர்ந்த மேடையில் ஒரு நடராஜர் விக்ரகங்கள் உள்ளன. இவர், சிதம்பர நடராஜரின் பிரதி பிம்பமாக கருதப்படுகிறார். 'பொன்னபல நடராஜர்', சிதம்பர நடராஜர் என்று இவரை போற்றுகின்றனர்.

அருகே அருள்பாலிப்பவர் சனிபகாவானுக்கு ஈஸ்வர பட்டம் வழங்கிய ஸ்வான எனப்படும் நாய் வாகனத்தை கொண்ட பைரவர். வடகிழக்கு என்பது ஈசானிய மூலை. இப்பகுதி காவலர்க்கு உரிய பகுதி. ஆக சொக்கநாதர் சன்னிதி முழூவதும் இவர் காவலுக்கு உட்பட்ட இடமாகும். மதுரையில் பல பைரவர் கோவில்கள் உள்ளன. இவருக்கு இராகுகால விஷேச அபிஷேக, அலங்காரங்கள், சிறப்பாக கருதப்படுகிறது.

ஞாயிற்றுகிழமை மாலை ஆறுமணியளவில் நடக்கும் சந்தன அலங்காரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பைரவருக்கு எதிரில் வன்னிமரம், லிங்கம், கிணறு இம்மூன்றும் உள்ளது, சொக்கநாதர் முன் செய்த சத்தியத்திற்க்கு சாட்சி சொல்ல இம்மூன்றும் தோன்றியதாக வரலாறு.

அதற்க்கு அருகாமையில் மேலும் சில வகையான லிங்கமுள்ளது, அடுத்த பகுதியில் ஈசன் அக்ஷ்ய திருதியையில் சூடிய சந்திரன், தன்னுடைய இஷ்டநட்சத்திர மனைவியர்களான ரோஹினி, கிருத்திகையுடன் அருள்பாலிக்கிறார்.

இவ்வாராக நாம் சுந்தரேஸ்வரர் சன்னிதியை வலம்வந்து விட்டோம்.

அடுத்த பதிவு, கம்பத்தடி மண்டபத்தை சுற்றினால் கைலாயத்தை சுற்றிய பலன் கிட்டும் என்று அண்ணன் குமரன் அவர்கள் கூறினார். நாம் கம்பத்தடி மண்டபத்தை ஒருமுறை சுற்றி வருவோம்.



முந்தைய பதிவு

அடுத்த பதிவு

6 comments:

rnatesan said...

மதுரைக்கு போகும் முன்பே கோயிலை நன்கு பார்க்கும் ஆவலை தூண்டுகிறீர்கள்!!
அங்கே இதையெல்லாம் பார்க்க யாராவது உதவுவார்களா!!உங்க வீடு அங்கத்தானே!!

சிவமுருகன் said...

மதுரைக்கு போகும் பொழுது தெரிவிக்கவும்.

//அங்கே இதையெல்லாம் பார்க்க யாராவது உதவுவார்களா!!//

நான் தற்போது டில்லியில் உள்ளேன். என் நன்பர்களில் யாராவது ஒருவரை உங்களுடன் வரச்சொல்கிறேன்.

//உங்க வீடு அங்கத்தானே!! //
எங்க வீடு கோவிலுக்கு அருகில் தான். என்னுடைய அப்பா அம்மா இருவரும் காயத்ரி பரிவார்- என்ற அமைப்பில் தற்போது மும்முரமாக இருப்பதால் அவர்கள் மதுரை அதிகம் இருப்பதில்லை. ஆனால் தற்போது திருவிழா சமயமாதலால் நீங்கள் அவர்களை சந்திக்கலாம்.

கோவிலை அதிலிருக்கும் ஒவ்வொரு தூணிலிருக்கும், சிறிய பூவிற்க்கும் ஒரு அர்த்தமுள்ளது என்று நினைத்து அனுஅனுவாக ரசித்த அனுபவமுள்ளது. அதை தான் இங்கே பதிக்கிறேன்.

rnatesan said...

நன்றி,
புதியக் கோணத்தில் மதுரையை பார்க்க்ப் போவது மகிழ்ச்சியாய் உள்ளது!!

சிவமுருகன் said...

நடேசன் ஐயா,
அவசியமாக பார்க்கவும்.
நன்றி.
எப்போது செல்கிறீர்கள்?

குமரன் (Kumaran) said...

போன பதிவில் வேக வேகமாய் போய்விட்டீர்களோ என்று எண்ணினேன். நல்ல வேளை. இந்தப் பதிவில் அவர்களை மீண்டும் தரிசிக்க வைத்துவிட்டீர்கள். :-)

சிவமுருகன் said...

நன்றி குமரன் அண்ணா.