Saturday, May 20, 2006

142: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 27

மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்து நாம் செல்வது சுவாமி சன்னிதியில் வலதுபக்கமுள்ள முருகனின் மூன்று சன்னிதிகள்.


அதில் முதலில் தண்டாயுதபாணியாக முருகன் அருள்பாலிக்கிறார். தினமும் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டபின் 6.00 மணி முதல் - 8.15 மணி வரை ஒவ்வொரு சன்னிதிக்கு சென்று ஸ்லோகங்களை சொல்லியும், பக்தி பாடல்களை பாடியும், வணங்கும் குழுவினர் இங்கே குழுமுவர். அரோகாரா, ஜெய் போன்ற கோஷங்களை எழுப்பி உலக நன்மைக்காக கூட்டு வழிபாடும், அமைதி வழிபாடும் செய்வர்.


அடுத்தடுத சன்னிதியில் திருத்தனி முருகனும், தனிகாசல முருகனும் மயில் மேல் அமர்ந்து அருபாலிக்கின்றனர், அடுத்த மூன்று சன்னிதியில் மூன்று லிங்கங்கள் உள்ளன.

கடைசி சன்னிதியின் எதிர் சன்னிதியில் நவகிரகங்கள் தத்தமக்குறிய திசைகளில் நின்று அருள் செய்கின்றனர்.


சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன், சனி, இராகு, கேது என்ற ஒன்பது கோள்கள் நவகிரகங்கள் எனப்படுகிறன.


நவகிரகங்கள் நாம் செய்த பூர்வ புண்ணியங்களை ஏற்ப நன்மையும், தண்டனைகளையும் வழங்குகின்றனர். நம்மை மோக்ஷத்திற்க்கு அழைத்து செல்வது இரண்டு செயல்கள். புண்ணியம் செய்வது ஒன்று. பகவான் நாமாவை சொல்வது இரண்டு. இவிரண்டையும் தவிர மோக்ஷம் பெற, நற்கதி பெற எவ்வழியுமில்லை. பகவான் நாமாவை சொல்வதே ஒரு புண்ணியம், அது தவிர புண்ணியம் என்ன உள்ளது அவனை போற்றி பாடுவது, அவனடியார்களை பேணுவது, ஊக்குவிப்பது போன்ற செயல்கள். பொம்மலாட்ட பொம்மைகள் போல் கோள் முதல் ஆள் வரை பகவானின் சொல்படி தான் ஆடுகின்றன.

இந்நவகிரகங்களை ஆதித்யாய, ஸோமாய, மங்களாய, புதாஸ்ய, குரு, சுக்ர, சனிப்யஸ்ய, இராகவே, கேதவே, நமோநமஹ என்று ஸ்லோகங்களை சொல்லியும் பிறகு கோளாறு பதிகம் சொல்லியும் வலம் வருவர். மேலும் எள்தீபமேற்றியும், நெய் தீபமேற்றியும் வழிபடுவர்.

அடுத்த பதிவு நூறுகால் மண்டபம், அக்னிவீரபத்திரர், அகோர வீரபத்திரர்.

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

17 comments:

சிவமுருகன் said...

நன்றி என்னார் ஐயா

வஜ்ரா said...

செந்தில்,

ஃப்ளிக்கர் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படங்களை நேராக Blogger லேயே ஏற்றியும் விடலாம்.

சிறப்பான தொடர் பதிவு. அடுத்த பதிவில் உங்கள் முந்தய பதிவிற்கான Link கொடுத்துவிடுங்கள்...ஒவ்வொன்றாக தேடிப் பிடித்துப் பார்க்கவேண்டீருக்கிறது.

மீனாக்ஷி அம்மன் கோயில் பார்த்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாகிவிட்டது, உங்கள் பதிவு என்னை மதுரைக்கே கொண்டு சென்றுவிட்டது.

நன்றி,

வஜ்ரா ஷங்கர்.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். திருத்தணியும் தணிகாசலமும் ஒன்றே தானே? தணிகாசலம் என்றால் தணிகை மலை என்று பொருள் தரும் சொல். நான் கவனித்ததில்லை. தண்டாயுதபாணி அருகில் இருக்கும் இரு முருகன் சன்னிதியிலும் திருத்தணி முருகன் தான் இருக்கிறாரா?

பொறுத்து என்று சொல்லவந்து பொருத்து என்று சொல்லியிருக்கிறீர்கள். பொறுத்து என்பதை விட ஏற்ப என்ற சொல் அந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். பொறுத்து என்றால் பொறுமை என்ற ஒரு பொருளும் வருவதால். :-)

சிவமுருகன் said...

வஜ்ரா ஷங்கர்,

//ஃப்ளிக்கர் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.//

இனி ஃபிளிக்கர்ரை பயன்படுத்துகிறேன்.

எல்லா பதிவிற்க்கும் விரைவிலேயே Link தருகிறேன்.

//மீனாக்ஷி அம்மன் கோயில் பார்த்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாகிவிட்டது,//

நீங்களாவது இஸ்ரேலில் இருப்பதால் இந்த நிலை, சிலர் சென்னையிலிருந்தே பார்க்க, போக முடியாத நிலையிலுள்ளனர்.

//உங்கள் பதிவு என்னை மதுரைக்கே கொண்டு சென்றுவிட்டது.//

பலரும் இதை சொல்லியுள்ளனர். எல்லாம் அம்மையினருள்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

குமரன் அண்ணா,
// திருத்தணியும் தணிகாசலமும் ஒன்றே தானே? தணிகாசலம் என்றால் தணிகை மலை என்று பொருள் தரும் சொல். நான் கவனித்ததில்லை. தண்டாயுதபாணி அருகில் இருக்கும் இரு முருகன் சன்னிதியிலும் திருத்தணி முருகன் தான் இருக்கிறாரா? //

முதல் சன்னிதியில் தண்டபாணி, அடுத்த சன்னிதியில் விபூதி அலங்காரம் செய்யப்பட்ட முருகன் மட்டும் தனியாக தனிகாசல மூர்த்தியாக மயில் மேல் அமர்ந்துள்ளார். மூன்றாவது சன்னிதியிலும் முருகன் தெற்க்கு நோக்கிய மயில் மேல் அமர்ந்துள்ளார், (இந்த விளையாட்டுக்கு நான் வரல, நீங்களே கொஞ்சம் சொல்லுங்க)

//பொறுத்து என்று சொல்லவந்து பொருத்து என்று சொல்லியிருக்கிறீர்கள். பொறுத்து என்பதை விட ஏற்ப என்ற சொல் அந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். பொறுத்து என்றால் பொறுமை என்ற ஒரு பொருளும் வருவதால். :-)//

ஏற்ப என்றே மாற்றிவிட்டேன்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

CalabazaBlog said...

NICE BLOG !!!!

சிவமுருகன் said...

நன்றி கலாப்லாக்.

NambikkaiRAMA said...

அன்பின் சிவமுருகன்! ஆன்மீகத்தை உங்கள் வலைப்பூவில் அள்ளித் தெளித்து இருக்கிறீர்கள். வாழ்க நும் தொண்டு

சிவமுருகன் said...

மிக்க நன்றி இராமார் அவர்களே.

//உங்கள் வலைப்பூவில் அள்ளித் தெளித்து இருக்கிறீர்கள். //

வலைபூவில் அல்ல வலைபூக்களில்.

Geetha Sambasivam said...

சிவ முருகன்,
முதலில் ஏன் அம்மா, ஏன் அம்மா, ஏன் அம்மா என்று இருக்க வேண்டும். சார் இல்லை. எழுதுவது அம்மாதான்.
இப்போது உங்கள் கேள்விக்கு விடை. நீங்கள் எல்லாம் எழுதுவத்ற்குப் பின்னூட்டம் இடும் அளவு எனக்குத் தகுதி இல்லை. படித்துத் தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வேன். முதல் முதல் என் வீட்டிற்கு வந்து பின்னுட்டம் இட்டதற்கு நன்றி.

சிவமுருகன் said...

கீதாம்மா,
கூகிள் ஆண்டவரிடம் என் பெயரை தேடி கொண்டிருந்த போது உங்களின் இந்த பதிவு கிடைத்தது.

அதில் "திரு.குமரன், திரு.ராகவன், திரு.சிவமுருகன், பரஞ்சோதி, திரு.ஞானவெட்டியான் அவர்கள் இவர்கள் பதிவைப் பார்த்தாலே பின்னூட்டம் இடப் பயமாக ...." என்று கிடைத்ததும் தூக்கி வாரிப்போட்டது, அதான் உணர்ச்சி வசப்பட்டு 'சார்' என்று விளித்து விட்டேன் மன்னிக்கனும்.

Geetha Sambasivam said...

சிவமுருகன்,
திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை. உங்கள் வரவையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன்.

Geetha Sambasivam said...

சிவமுருகன்,
பயம் என்று நான் சொன்னது இந்த இடத்தில் உங்கள் எல்லாருடைய ஆன்மீக அறிவையும் தமிழ் அறிவையும் பார்த்துத் தான். அவர்கள் எங்கே, நாம் எங்கே என்ற ஒரு சுய பச்சாதாபத்தில் தான். திரு குமரன் அவர்கள் மிகச்சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் என்று நம்புகிறேன். தங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

சிவமுருகன் said...

கீதாம்மா,

//பயம் என்று நான் சொன்னது இந்த இடத்தில் உங்கள் எல்லாருடைய ஆன்மீக அறிவையும்//

சரி ஏற்றுக்கொள்கிறேன் (அதுவும் மீனாட்சி அம்மன், கூடலழகர் மட்டும்) இதில் என்னக்கு கொஞ்சம் உடன்பாடு. ஆனால்,
//தமிழ் அறிவையும் பார்த்துத் தான்.//

இது கொஞ்சம் ஆட்டம் காணும் நீங்களே அவ்வப்போது பார்த்திருப்பீர்களே!

//அவர்கள் எங்கே, நாம் எங்கே என்ற ஒரு சுய பச்சாதாபத்தில் தான்.//

அப்படி நினைக்கவே வேண்டாம். செல்வன் சாரை போல் நானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளுங்கள் ஒருவேளை அந்த கல்பத்தரு ததாஸ்து என்று சொல்லிவிட்டால்!

//தங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.//
பெரியவங்க நீங்க இப்படி சொல்ல கூடாது.

சிவமுருகன் said...

//திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை. உங்கள் வரவையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன். //

தங்களின் பெருந்தன்மை.

Maayaa said...

Sivamurugan
Nice photos .

I have blogrolled you. Thanks

சிவமுருகன் said...

வருக ப்ரியா அவர்களே!

தங்களுடைய பதிவுகளை முன்னமே பார்த்து பின்னூட்டமிட்டுருந்ததை பார்த்திருக்கீறீர்கள். நன்றி.