தெற்க்கு கோபுரகாட்சி திருவாச்சியில் உள்ள துவாரபாலகர்
மூலிகை ஓவியங்கள்
கிளிமண்டபத்தில் உள்ள கோவிலின் மாதிரி
அம்மனின் பிறந்த நட்சித்திரமான மாசி மகத்தில் விளக்கு பூஜை நடந்த போது
இத்துடன், என் கோப்பில் இருக்கும் மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் நிறைவடைகிறது.
அம்மா அங்கயற்கன்னி, சொக்கருடன் அருளும் மீன்கொடியளே மீனாக்ஷி!, இப்படங்களை தரிசித்தவர்கள் எங்கிருந்தாலும் முதல் பீடமாம் இந்த மனோன்மணி பீடத்தில்(மதுரையில்), உன்னை தரிசித்த புண்ணியம் வழங்கி, அந்த அபிராமி பட்டருக்கும், ஏனை அடியோருக்கும் தந்த பெருவழ்வை தந்தருளவும், உன்னை வணங்கும் அடியவர்கள் எந்த பிறவிபிணிகளும் அன்டாத வண்ணம் காத்தருளும் உன் திருவடியை வணங்குகிறேன்.
அவளருளால் 250 க்கும் மேற்ப்பட்ட படங்களை இங்கே பத்திதுள்ளேன்.
இப்பதிவுகளுக்கு காரணமான அத்தனைபேருக்கும், கோடான கோடி நன்றிகளுடன்
சிவமுருகன்.
அடுத்த பதிவு மடப்புரம் காளி.
12 comments:
சிவமுருகன் சார்,
மிக அழகான படங்கள். மனதை கவர்ந்தன.
மிக அருமையாக வழங்கியுள்ளீர்கள்.
தங்களின் இந்த சேவைக்கு நன்றி.
நான் இதுவரை மதுரையை பார்த்ததில்லை. (ஒரே ஒருமுறை போயிருக்கிறேன். வேலை விசயமாக மேலூருக்கு. அன்று தங்கினது மதுரையில். சுற்றிப்பார்க்க முடியவில்லை....)
என் போன்றவர்களுக்கு இது மிகவும் பிரமிப்பை கொடுக்கிறது. மிக அழகான கலைப்பொக்கிழம். இதே வேறு நாட்டில் இருந்தால், இன்னும் பரமளிக்கப்பண்ணியிருப்பார்கள். ஹூம்!!
மேலும், வேறு ஏதாவது தொடருங்கள்.
நன்றி
ஜயராமன் சார்,
அடுத்த பதிவு மதுரையின் எல்லை தெய்வமான மடப்புரம்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
Hi Sivamurugan, I am not able to view the pictures. Just shown as small square boxes only. Please help.
அனானி அவர்களே கொஞ்சம் உங்களது இணைய சேவையை சரி செய்து பாருங்கள்
மிக நல்ல சேவை சிவமுருகன். விரைவில் இந்தப் படங்களை எல்லாம் கொண்டு மென்பொருளும் உங்களால் தயாரித்து வழக்கப்படும் என்று நினைக்கிறேன். அதற்கு உங்களுக்குத் தேவையான எல்லாமும் கிடைக்க அம்மையை வேண்டுகிறேன்.
மீண்டும் மீண்டும் அற்புத படங்களை அள்ளிப் பருக தரும் உங்களை வாழ்த்துகிறேன்.நன்றி.
இன்றுதான் எல்லாப் படங்களையும் பார்க்க முடிந்தது. மதுரைக்கு நேரில் சென்றால்கூட இத்தனை இடங்களை பார்த்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. கோபுர படங்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள். நல்ல சேவை செய்த உங்களை மதுரை மீனாட்சி எல்லா நலமும் பெற்று அவளருளில் என்றும் திளைக்க அருள் புரிவாள்.
நல்ல படங்கள்
இவை நீங்கள் எடுத்தவையா? சேகரித்தவையா?
மணியன் சார்,
//கோபுர படங்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள். நல்ல சேவை செய்த உங்களை மதுரை மீனாட்சி எல்லா நலமும் பெற்று அவளருளில் என்றும் திளைக்க அருள் புரிவாள்.
//
நன்றி.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
நிலா,
//நல்ல படங்கள்//
நன்றி.
//இவை நீங்கள் எடுத்தவையா? சேகரித்தவையா? //
சேகரித்தவை.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
நடேசன் நன்றி.
குமரன் அண்ணா,
//மிக நல்ல சேவை சிவமுருகன்.//
நன்றி
//விரைவில் இந்தப் படங்களை எல்லாம் கொண்டு மென்பொருளும் உங்களால் தயாரித்து வழக்கப்படும் என்று நினைக்கிறேன்.அதற்கு உங்களுக்குத் தேவையான எல்லாமும் கிடைக்க அம்மையை வேண்டுகிறேன்.//
மென்பொருள் என்பது உங்களுக்கே தெரியும் மிகவும் கவனிக்கபட்டு செய்ய வேண்டிய ஒன்று. தேரிழுப்பது போன்ற செயல். ஒரு ஆள் செய்ய முடியாது. என்னுடன் இப்போது சேர்ந்திருப்பது என்னுடைய கல்லூரி நன்பர் தோழர் ஜெயகுமார். பார்ப்போம் எத்தனை தூரம் செல்கிறோம் என்று. முயற்சி என்ற ஒரு சக்கரமும், தெய்வ அருள் என்ற மற்றொரு சக்கரமும் சுற்றினால் தான் வெற்றி என்னும் தேர் இலக்கு என்னும் நிலையை அடையும் என்பதில் உறுதியாக இருப்பவன் நான்.
Post a Comment