Tuesday, July 18, 2006

அருள்மிகு ஏடகநாத சுவாமி திருக்கோயில்

தல வரலாறு :

சம்பந்தர் பூசிய திருநீரால் கூன்பாண்டியனது வெப்ப நோய் தணிந்தது. இதனால் ஆத்திரமுற்ற சமணர்கள் சம்பந்தரோடு அனல்(நெருப்பு) வாதம் புனல்(நீர்) வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்டபோது அது சாம்பல் ஆனது. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதப் பெற்ற சிவபதத்தை தீயில் இட்டனர். அது தீயில் வேகாமல் பச்சையாய் விளங்கிற்று. பின்பு புனல் வாதம் செய்தனர். புனல் வாதத்தின்போது சமணர்கள் அத்திநாத்தி என்று எழுதப்பட்ட ஏட்டை வைகையில் இட்டனர். அது ஆற்றில் அடித்து சென்றது. ஆனால் ஞானசம்பந்தர் "வாழ்க அந்தணர்" என்ற ஏட்டை வைகையில் இட்டபோது அது ஆற்றின் போக்கை எதிர்த்து சென்று கரை ஏறியது. அந்த ஏடு ஏறிய இடம் தான் திருவேடகம். மன்னனின் கூனும் நிமிர்ந்தது. கூன்பாண்டியன் நிமிர்ந்ததால் நெடுமாறன் எனப் பெயர் பெற்றான்.


ஏடகநாதர்

இங்குள்ள ஏடகநாதரை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். சித்த பிரம்மை நீங்கும் . மனஅமைதி,கல்யாண பாக்கியம் , குழந்தை பாக்கியம் ஆகியவை சுவாமியை வேண்டினால் கிடைக்கிறது.

தோஷங்கள் நீங்க

வனதுர்க்கை : செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், நாக தோஷம், பார தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு அருகில் ஓடும் வைகை ஆற்றின் கரையோரம் இத்தி மரத்தடியில் உள்ள 16 கைகளை உடைய வனதுர்க்கையம்மனை வழிபட்டு பரிகாரம் செய்து விட்டு, பின்பு சுவாமியிடம் வந்து மனதார பிரார்த்தித்து அர்ச்சனை செய்தால் மேற்கண்ட தோஷங்கள் நீங்குகின்றன.

பில்லிசூன்யங்கள் விலக

கால பைரவர் : இக்கோயிலில் உள்ள கால பைரவரை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் பால் தயிர் பன்னீர் ஜவ்வாது ஆகியவற்றால் அபிசேகம் செய்தால் பில்லி சூன்யங்கள் விலகுகின்றன. தடைபட்ட காரியங்கள் நல்ல தீர்வு காண்கின்றன.


திருமண காரியம் நடக்க

சுவாமி அம்பாள் இருவருக்கும் அர்ச்சனை செய்து அம்பாளுக்கு அணிவித்திருந்த பூமாலையை பெற்று கழுத்தில் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து பின்பு அப்பூமாலையை வீட்டிற்கு எடுத்து சென்று 45 நாட்கள் வைத்து வழிபாடு செய்தால் கண்டிப்பாக திருமணம் நடக்கிறது.

புத்திரப்பேறு கிடைக்க

கிருத்திகை தினத்தில் இத்தலத்து சண்முகப் பெருமானை வழிபட்டால் புத்திரப்பேறு கிடைக்கும்.

தலபெருமைகள் :
ஞானசம்பந்தர் சமணர்க்கு எதிராக சைவத்தின்மேன்மையை நிலைநாட்ட வைகையில் இட்ட ஏடு எதிர்த்து நின்ற தலம்.காசிக்கு சமமான தலம்.சித்தபிரம்மை நீங்க அவசியம் வந்து வணங்க வேண்டிய தலம்.பாடல் பெற்ற பாண்டி நாட்டுத் தலம்.

பாண்டி நாட்டு சிவதலங்கள் 14 ல் இத்தலம் 5 வது தலம்.

இங்கு ஞானசம்பந்தர் இங்கு குழந்தை வடிவத்தில் காட்சி தருகிறார்.

மிக முக்கியமான ஏடு ஏறிய புராண சம்பவம் நிகழ்ந்த தலம் இது.

வில்வ ஆரண்யம் என வழங்கபடும் சிவதலம்.

ஏடகப் பெருமானை அன்போடு மனதில் தியானித்து ஒரு நாள் தங்கி பூஜை முதலிய வழிபாடுகள் செய்தால் ஆயுள் முழுதும் காசியில் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும்.

பிரம்ம்ன, பராசர்,வியாசர் , திருமால்,கருடன்,ஆதிசேடன் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர் வழிபட்ட தலம்.

வைகை நதி இத்தலத்தில் தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கும் கங்கைக்கும் நிகரான சிறப்புடையது.

நேர்த்தி கடன்
பால், எண்ணெய், இளநீர்,சந்தனம்,பன்னீர்,நல்லெண்ணெய் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்யலாம்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

பொது தகவல்கள்
தங்கும் வசதி


கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

முக்கிய திருவிழாக்கள்
ஏடேறிய திருவிழா ஆவணி மாதம் முழு பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வர்.

நவராத்திரி திருவிழா.புரட்டாசி மாதம் 10 நாள் திருவிழா

சங்காபிசேகத் திருவிழா கார்த்திகை மாதம் திங்கள் கிழமை அன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும்.

ஆவணி மூல திருவிழா ஆவணி மாதம்

வைகாசி விசாகம் அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுப்பர்.


இத்தலம் குறித்த பதிகங்கள்
திருஞானசம்பந்தர் தேவாரம்
அருணகிரி நாதர் திருப்புகழ்
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம்


பொது தகவல்கள்

குடும்பத்தோடு வரும் பக்தர்கள் மதுரை மாநகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்

மதுரை - திருவேடகம் 20 கி.மீ.

மதுரையிலிருந்து சோழவந்தான் செல்லும் வழியில் திருவேடகம் இருப்பதால் அடிக்கடி நகர பேருந்து வசதி மதுரை பேருந்து நிலையத்திலிருந்து இருக்கின்றது

அருகில் உள்ள ரயில் நிலையம் சோழவந்தான், மதுரை

அருகில் உள்ள விமான நிலையம் மதுரை

கோயிலின் சிறப்பம்சம்

புனல் வாதத்தின் போது ஞானசம்பந்தரது வாழ்க அந்தணர் என துவங்கும் திருபாசுர ஏடு வைகை வெள்ளத்தில் எதிர் நீந்தி வந்து இங்கு கரை சேர்ந்ததால் திரு + ஏடு + அகம் = திரு ஏடகம் திருவேடகம் என பெயர் பெற்ற தலம்.

3 comments:

K.V.Pathy said...

manarkENi to be maNarkENI.
manam, mind. maNal, sand.
Pathy.

சிவமுருகன் said...

அன்புள்ள K.V.பதி அவர்களுக்கு,

இது எழுத்து பிழை அல்ல. உதாரணமாக நீங்கள் இதை இரு வடிவத்தில் பிரித்து பார்த்தால், மனம்+கேனி - உள்ளம் என்ற கேனி, டெக்னிக்கலாக பார்த்தால், இந்த பெயரில் கூகுளாரிடம் கேட்டால், திருக்குறள் அல்லாத இப்பதிவுகளை மட்டும் தான் காட்டும் என்பதை மனதில் கொண்டு இப்படி பெயர் வைத்தேன், மூன்று நாட்க்கள் யோசித்து வைத்த பெயர்.

நன்றி.

Priya said...

sivaurugak avargale..
nalla nalla thagavalgalai thareenga..
romba sandhoshamaa iruku..