மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் நடக்கும் பூஜையொன்றை முந்தய பதிவில் இட்டேன்!
இன்னும் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.
எல்லாகோவிலிலும் முதலில் சுவாமிக்கு தான் தீபஆராதனை மற்றும் எல்லாவித புஜைகள் செய்வர். ஆனால் மதுரையில் முதலில் அம்மனுக்கு தான் பூஜை செய்வது வழக்கம். இதற்க்கு பல வித காரணங்கள் உள்ளன.
1. மீனாட்சி அம்மன் முதலில் மதுரையை ஆண்ட சமயத்தில் எல்லா வித மரியாதைகளும் அவருக்கே முதலில் செய்யப்பட்டதாகவும் காலப்போக்கில் அதுவே வழி வழியாக வந்ததாகவும் சொல்லப்படுகிறது
2. மனைவியானவள் கணவனுக்கு முன்பாக எழுந்து தயாராகி கணவனுக்கு பணிவிடை செய்து எழுப்பவேண்டும் என்ற நியதியை கடைப்பிடிக்க இவ்வாறு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இப்பொழுது மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறோம்.
இரவு 8:00 மணியளவில் அம்மன் சன்னிதி திரையடப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வெள்ள மலர்களாலும், மற்றும் வென்நிற பட்டு சாற்றியும் அருட்காட்சி தருவாள் அன்னை அங்கயர்கண்ணி.
மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வென்பட்டால் அம்மன் அலங்கரித்து தரும் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.
அவ்வாறு காட்சி தரும் அன்னையை தரிசித்தால் கையில் கிளியேந்திய கலைவாணி இவளே தான் என்றும் சிலர் சத்தியம் செய்து விடுவர், இவரே தான் அந்த வேதமாதாவோ என்றும் தோன்றக்கூடும்!
பிறகு இரவு 9.15 மணியளவில் நடக்கும் பள்ளியறை பூஜையின் போது சுவாமி பல்லக்கில், அம்மன் சன்னிதிக்கு எதிரில் வந்து நிற்பார். அவருக்கு பாதபூஜை நடக்கும். அவரது பாதபூஜையை கண்ணார கண்ட பக்தர்கள் அம்மன் சன்னிதிக்குள் ஓடுவர். முதல் நாள் எனென்று தெரியாமல் நானும் ஓடினேன். அது தான் இரவு கடைசி நேர பூஜை என்றும், பிறகு அடுத்த நாள் தான் அம்மனை தரிசிக்க இயலும் என்பது பிறகு தான் தெரிந்தது.அம்மனுக்கு செய்யும் இந்த தீபாரதனையில் மேலும் ஒரு விசேஷம் என்ன வென்றால் அம்மனுக்கு சூட்டபட்டிருக்கும் மூக்குதியானது எத்தனை தூரமாக நாம் நின்று கண்டாலும், மிகத் தெளிவாக தெரியும். காரணம் உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை, ஆகவே தான் இந்த மூக்குத்தி மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர் அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனை தரிசிக்கலாம். பலர் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிக்க முடியவில்லை என்று சொல்வர், சிரமம் பார்க்காமல் இந்த பூஜைக்கு சென்றால் நிச்சயம் அம்மனை தரிசிக்க இயலும்.
ஒரே நாளில் தானே இச்சா, கிரியா மற்றும் ஞானசக்தியாக அருள்பாலிக்கும் அன்னையை தரிசித்து வருவோம்.
From Meenakshi Temple |
From Meenakshi Temple |
From Meenakshi Temple |
இந்த பாதபூஜை அம்மன் தானே செய்வதாக ஐதீகம்.
யூட்யுப் கொஞ்சம் அசைபடங்களை தருகிறது. 50க்கும் மேற்பட்ட பள்ளியறை அசைபடங்களை அதில் காணமுடிந்தது, அதில் சற்று துல்லியமான அசைபடங்களை தரிசிக்கவும், நீங்கள் நேரிடையாக சென்று வந்த மனநிலையை தரும் என்று நம்புகிறேன்.
14 comments:
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் அப்படின்னு உமக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்...நேற்று இதைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள் இன்று, பதிவாகிவிட்டது. மிக்க நன்றி.
நீங்க சொல்லியிருக்கும் அந்த மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது. (மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)
இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார். அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.
அன்னையின் சக்தி ஒவ்வொரு நாளும் 5 விதமாகச் சொல்லுவர். காலையில் மஹா ஷோடசி (திருவனந்தல்), பின்னர் ப்ராத சந்தியில் பாலை, பின்னர் உச்சிகாலத்தில் கெளரி, மாலையில் மாதங்கீ, இரவில் பஞ்சதசாக்ஷரி என்பதாக சாக்த ரூபங்களைக் கொள்வதாகச் சொல்வது வழக்கம். இதனால்தான் லலிதா பரமேஸ்வரி/பராசக்தியின் சகல கலைகளையும் கொண்டவளாக மீனாக்ஷியைச் சொல்வது வழக்கம்.
//சொன்ன வண்ணம் செய்த பெருமாள் அப்படின்னு உமக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்...நேற்று இதைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள் இன்று, பதிவாகிவிட்டது. மிக்க நன்றி.//
ஏதோ ஒரு முறை செய்துவிட்டேன் என்றே தோன்றுகிறது. இது வரை இப்படி ஆனதில்லை, சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் அவ்வப்போதே நிறைவேற்ற முடிகிறது என்றுமல்ல! ஆகவே பட்டமெல்லாம் ஹி...ஹி...
அண்ணா,
//நீங்க சொல்லியிருக்கும் அந்த மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது. (மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)//
இது புதிய செய்தி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
//இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார். அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.//
சரியாக சொன்னீர்கள்! முதலில் அம்மனுக்கு தான் பூஜை பிறகு தான் சுவாமிக்கு பாதபூஜை! விபூதி தந்து கொண்டே வெளியே வருவார்! ஏனே தவறி விட்டது!
//அன்னையின் சக்தி ஒவ்வொரு நாளும் 5 விதமாகச் சொல்லுவர். காலையில் மஹா ஷோடசி (திருவனந்தல்), பின்னர் ப்ராத சந்தியில் பாலை, பின்னர் உச்சிகாலத்தில் கெளரி, மாலையில் மாதங்கீ, இரவில் பஞ்சதசாக்ஷரி என்பதாக சாக்த ரூபங்களைக் கொள்வதாகச் சொல்வது வழக்கம். இதனால்தான் லலிதா பரமேஸ்வரி/பராசக்தியின் சகல கலைகளையும் கொண்டவளாக மீனாக்ஷியைச் சொல்வது வழக்கம்.//
மிக பொருத்தமான விஷ்யங்களை சொல்லியுள்ளீர்கள் நன்றி
நன்றாக செய்துள்ளீர்கள் சிவ எனக்குதான் படிக்க நேர அவகாசம் இல்லை பிரகொருநாள் படித்து எழுதுகிறேன்.
நன்றி சிவா
மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் பள்ளியறை பூஜையை அளித்த சிவமுருகன் அவர்களே வாழ்த்துக்கள். அன்னையின் காலடியிலே இருந்து அனைத்தும் பார்த்திருக்கின்றீர்கள் அதை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள்.
மதுரை கும்பாபிஷேகம் ஒரு காட்சி காட்டினீர்கள், அடியேனின் குல தெயவத்தின் கும்பாபிஷேகம் காண செல்லுங்கள் ஆனந்த கும்பாபிஷேகம்
//நன்றாக செய்துள்ளீர்கள் சிவ எனக்குதான் படிக்க நேர அவகாசம் இல்லை பிரகொருநாள் படித்து எழுதுகிறேன்.
நன்றி சிவா//
நன்றி என்னார் ஐயா! அவசியம் படித்து தங்கள் கருத்துக்களை அளிக்கவும்!
//மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் பள்ளியறை பூஜையை அளித்த சிவமுருகன் அவர்களே வாழ்த்துக்கள். அன்னையின் காலடியிலே இருந்து அனைத்தும் பார்த்திருக்கின்றீர்கள் அதை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள்.//
அன்னைக்கே இது அற்பணம்.
//மதுரை கும்பாபிஷேகம் ஒரு காட்சி காட்டினீர்கள், அடியேனின் குல தெயவத்தின் கும்பாபிஷேகம் காண செல்லுங்கள் ஆனந்த கும்பாபிஷேகம்//
இதோ வந்துட்டேன்!...
சிவமுருகன் ஐயா, கவிநயா அவர்கள் அன்பு கூர்ந்து அடியேனின் வலைப்பூவிற்க்கு சுவையான வலைப்பூ என்னும் விருது கொடுத்து கௌரவித்தாத். அடியேன் அதை தங்களுக்கு அளிக்கின்றேன். மேலும் விவரம் அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! ! பதிவில் சென்று காணுங்கள்.
Hi Sivamurugan,
Just came across your blog... Its excellent. I am amazed. Its an awesome blog. Its a treasure pot of Madurai Meenakshi Amman temple. Loved it completely.
Do visit my blog sometime.
My Travelogue
அடியார்களுக்கும் , தமிழர்களுக்கு உதவும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள், உங்கள் வலைத்தளம் மூலம் நிறைய தெரிந்துகொண்டேன்.
நன்றி
தர்மா
தேவாரம் & திருமுறை பாடல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய :
www.devarathirumurai.blogspot.com
தங்களின் பதிவுகள் கண்டு மகிழ்கின்றோம்.
Post a Comment