மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்து நாம் செல்வது சுவாமி சன்னிதியில் வலதுபக்கமுள்ள முருகனின் மூன்று சன்னிதிகள்.
அதில் முதலில் தண்டாயுதபாணியாக முருகன் அருள்பாலிக்கிறார். தினமும் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டபின் 6.00 மணி முதல் - 8.15 மணி வரை ஒவ்வொரு சன்னிதிக்கு சென்று ஸ்லோகங்களை சொல்லியும், பக்தி பாடல்களை பாடியும், வணங்கும் குழுவினர் இங்கே குழுமுவர். அரோகாரா, ஜெய் போன்ற கோஷங்களை எழுப்பி உலக நன்மைக்காக கூட்டு வழிபாடும், அமைதி வழிபாடும் செய்வர்.
அடுத்தடுத சன்னிதியில் திருத்தனி முருகனும், தனிகாசல முருகனும் மயில் மேல் அமர்ந்து அருபாலிக்கின்றனர், அடுத்த மூன்று சன்னிதியில் மூன்று லிங்கங்கள் உள்ளன.
கடைசி சன்னிதியின் எதிர் சன்னிதியில் நவகிரகங்கள் தத்தமக்குறிய திசைகளில் நின்று அருள் செய்கின்றனர்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன், சனி, இராகு, கேது என்ற ஒன்பது கோள்கள் நவகிரகங்கள் எனப்படுகிறன.
நவகிரகங்கள் நாம் செய்த பூர்வ புண்ணியங்களை ஏற்ப நன்மையும், தண்டனைகளையும் வழங்குகின்றனர். நம்மை மோக்ஷத்திற்க்கு அழைத்து செல்வது இரண்டு செயல்கள். புண்ணியம் செய்வது ஒன்று. பகவான் நாமாவை சொல்வது இரண்டு. இவிரண்டையும் தவிர மோக்ஷம் பெற, நற்கதி பெற எவ்வழியுமில்லை. பகவான் நாமாவை சொல்வதே ஒரு புண்ணியம், அது தவிர புண்ணியம் என்ன உள்ளது அவனை போற்றி பாடுவது, அவனடியார்களை பேணுவது, ஊக்குவிப்பது போன்ற செயல்கள். பொம்மலாட்ட பொம்மைகள் போல் கோள் முதல் ஆள் வரை பகவானின் சொல்படி தான் ஆடுகின்றன.
இந்நவகிரகங்களை ஆதித்யாய, ஸோமாய, மங்களாய, புதாஸ்ய, குரு, சுக்ர, சனிப்யஸ்ய, இராகவே, கேதவே, நமோநமஹ என்று ஸ்லோகங்களை சொல்லியும் பிறகு கோளாறு பதிகம் சொல்லியும் வலம் வருவர்.
மேலும் எள்தீபமேற்றியும், நெய் தீபமேற்றியும் வழிபடுவர்.
அடுத்த பதிவு நூறுகால் மண்டபம், அக்னிவீரபத்திரர், அகோர வீரபத்திரர்.
முந்தைய பதிவு
அடுத்த பதிவு