கம்பத்தடி மண்டபதை அடையும் முன் வழியில் நூறு கால் மண்டாபத்தையும், நவகிரக சன்னிதியையும், அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஊர்த்தவ தாண்டவர், பத்ரகாளியையும் காணலாம், இவரனைவரையும் சொக்கநாதரை தரிசித்த பின் விளக்கமாக பார்ப்போம்.

ஈசனை காண உள்ளே செல்லும்முன் இடபாருட வாகனம், ஈசனின் உகந்த வாகனம், ஈசனை காண வந்த மீனாட்சி அம்மையையே நிறுத்திய பிரதமகணம், என்று பலவாக போற்றபடும் நந்தியை சுற்றிவந்து ஈசனை காண அனுமதி பெற வேண்டும். எப்போதும் சிவனையே தியானிக்கும் நந்தியை, எவ்வித சிறிய ஒலியெழுப்பாமல், அவர் தியானத்தை கலைக்காமல் அமைதியாக அனுமதிபெற்று வலம்வரவேண்டும். சிவன் கோவிலில் செய்யகூடாதவை என்று சில நியமங்கள் உள்ளன. அவற்றில் அதிமுக்கியமாக கவனிக்கபடுவது, சிவனுக்கும் நந்திக்கும் இடையில் செல்வதை தவிர்ப்பது. ஏனெனில் ஒருவிதமான வாயு மூலவர்க்கும், வாகனத்துக்கும் போவதாகவும், வருவதாகவும், நம்பப்படுகிறது. அந்த போக்குவரத்தை தடுக்காமலிருக்கவே இவ்வைதீகத்தை கடைபிடிக்கப்படுகிறது.

கம்பத்தடி மண்டபத்தில் திருவிழாசமயத்தில் ஏற்றபடும் கொடி கம்பமும், ஏராளமான சிற்பங்களும் உள்ளான. ஏகபத மூர்த்தி, பிக்ஷாடனார், நடராஜர், பஞ்சமுக பரமசிவன், ரிஷபவாகனம். கஜஹர மூர்த்தி, சங்கரநாராயணன், அர்த்தநாரீஸ்வரர்,காலஹரமூர்த்தி சிலையில் உள்ள மார்கண்டேயனும் சிவலிங்கமும் காண்போரை அதிசயக்க வைக்கும், திருக்கல்யாண கோலமும் இங்கே காணலாம்.
இந்த கொடிகம்பத்தில் பிள்ளை பெறுமான் என்றழைக்கப்பட்ட திருஞானசம்பந்தர் நின்றுள்ளார். கூன்பாண்டியனின் காலத்தில் மதுரையில் அவர் அனல் வாதம், புனல் வாதம் செய்து வென்ற செய்தியின் வெற்றிசின்னமாகவும்,ஞாபகசின்னமாகவும், அவர்தம் உருவை நெடுமாறனாக நிமிர்ந்த அதே கூன்பாண்டியன் நிறுவினார்.









பலரும் தாங்கள் கோரிக்கைகள் நிறைவேறியபின் தமது துர்குணங்களை களைவதாக இங்கே சங்கல்பம் செய்வர்.


நந்தேவரிடம் அனுமதி பெற்றவர்கள் மேலும் இருவரிடம் அனுமதி பெறவேண்டும். அவர்களையும் வாயிலின்இடது பக்கத்திலிருக்கும் விநாயகர் சன்னிதியையும் அடுத்த பதிவில் காண்போம்.
முந்தைய பதிவுஅடுத்த பதிவு
2 comments:
கம்பத்தடி மண்டபத்தில் சிவபெருமானின் 52 திருவுருவங்கள் உண்டு. கம்பத்தடி மண்டபத்தை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் உண்டு என்று சொல்வார்கள்.
52 உருவங்களா?
இப்போது தான் தெரிந்து கொண்டேன்.
நன்றி.
Post a Comment