Tuesday, May 02, 2006

114: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 26

கம்பத்தடி மண்டபம்

கடந்த முறை கம்பத்தடி மண்டபம் பற்றிய பதிவில் அண்ணன் குமரன் அவர்கள் கம்பத்தடி மண்டபத்தில் சிவபெருமானின் 52 திருவுருவங்கள் இருப்பதாகவும், கம்பத்தடி மண்டபத்தை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் உண்டு என்றும் பின்னூட்டமிட்டிருந்தார். உடனே அதை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் வலையில் சுற்றி வந்த போது, இறைவன் சிவன் 64 ரூபங்களில் வழிபடபடுவதாகவும், அதில் லிங்க ரூபமே அதிக அளவில் கோவில் கொண்டுள்ளதாகவும் தெரிந்து கொண்டேன். 64ல் 52 உருவங்கள் நம் எல்லோருக்கும் ஒரே இடத்தில் காட்சி தருவது மதுரையில் தானிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.








மேலும் படங்கள் முந்தைய பதிவில்

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

8 comments:

ENNAR said...

கொடி மரம் நல்லாவேயிருக்கு

சிவமுருகன் said...

என்னார் சார்,
இது காலை காட்சி, மாலையில் திருவாச்சியில் உள்ள விளக்குகளை ஏற்றி இருப்பதை காண கண் கோடி வேண்டும்.

rnatesan said...

கொடி மரமும் வெய்யிலும் உண்மையிலேயே பார்ப்பது போல் உள்ளது!!

சிவமுருகன் said...

நடேசன் சார்,
இவையாவும் என் கோப்பின் புதிய படங்கள்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

இன்னும் மின்சாரம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

G.Ragavan said...

புகைப்படங்கள் மிக அழகாக வந்திருக்கின்றன சிவமுருகன். நேரா கோயிலுக்குள்ள நொழஞ்ச மாதிரி இருக்கு. அடடா! இதெல்லாம் ஃபோட்டோ எடுக்க விட்டாங்களா?

சிவமுருகன் said...

அன்புள்ள இராகாவன்,

இப்படங்கள் அனைத்தும் இணைய தொகுப்பே. இதில் என்னுடையது எதுவும் இல்லை. இரண்டாவது படத்தை பார்த்தால் தெரிந்து விடும்.

சிவமுருகன் said...

நன்றி சிவம்.

இராஜராஜேஸ்வரி said...

64ல் 52 உருவங்கள் நம் எல்லோருக்கும் ஒரே இடத்தில் காட்சி தருவது மதுரையில் தானிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

அருமையான பகிர்வுக்கும் உயிர்த்துடிப்புள்ள படங்களுக்கும் வாழ்த்துகல்.. பாராட்டுக்கள்..