Monday, September 15, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - இந்திர விமானம்

எத்தனையோ படங்களை மனற்கேணி என்ற இவ்வலைப்பூவில் வலையேற்றியுள்ளேன், ஆனால் இது போன்றதொரு காட்சி அதிலும் சரி, வேறெங்கும் சரி காணக்கிடைக்காதது! அருமையாக படமாக்கி இருந்தார் சுரேஷ் என்ற ஒரு கலைஞர். பொற்றாமரை குளத்தின் நடைபாதையில், சமயக்குரவர்கள் நால்வர் படம் வரையப்பட்ட இடத்திலிருந்து கண்டால் இந்த அரிய காட்சி காணலாம். நீங்களும் காண இதோ.தேவேந்திரன் நிர்மானித்த இந்திர விமானம்.

திருச்சிற்றம்பலம்

நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே.
1.94.1
ஞால மேழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே.
1.94.2
ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே.
1.94.3
அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.
1.94.4
ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே.
1.94.5
அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே.
1.94.6
அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.
1.94.7
அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.
1.94.8
அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே.
1.94.9
ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே.
1.94.10
அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே.
1.94.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ள, மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி, தேவியார் - மீனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

நன்றி : சைவம்.ஆர்க்

3 comments:

மதுரையம்பதி said...

ஆஹா, கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் தரிசிக்கும் காட்சி இந்த தங்க கோபுர தரிசனம்.

பொற்றாமரைக் குளக்கரையில் ஒரு இடத்தில் (கிழக்குப்பகுதியில்) நின்று பார்த்தால் அம்மை-அப்பர் இருவரது தங்க கோபுரமும் காண முடியும்.

நன்றி சிவா.

சிவமுருகன் said...

//ஆஹா, கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் தரிசிக்கும் காட்சி இந்த தங்க கோபுர தரிசனம்.

பொற்றாமரைக் குளக்கரையில் ஒரு இடத்தில் (கிழக்குப்பகுதியில்) நின்று பார்த்தால் அம்மை-அப்பர் இருவரது தங்க கோபுரமும் காண முடியும்.
//

மௌலியண்ணா இந்த படம் பார்த்தவுடன், எனக்கும் அதுதான் பட்டது! ஆனால் சுரேஷ் அதை எடுக்கவில்லை போலும், அவரது கணக்கு தொகுப்பில் இல்லை. தற்சமயம் திருப்பணி நடக்கிறது தங்க விமானங்களை காண இயலாது. ஐயா கருமுத்து கண்ணன் அவர்கள் மூலமாக 100 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணி நடக்கிறது.

Anonymous said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி