Friday, March 31, 2006

46: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 20


சுவாமி சன்னிதியில் லிங்கங்களுக்கு அடுத்து படியாக கலைமகள் சரஸ்வதி அருளுகிறார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையில் விணைவழிபாடு நடக்கிறது. தினமும் அபிஷேக, ஆராதனைகள் சிறாப்பாகவும், விஷேச நாட்களில் சிறப்பு அலங்காரங்களான சந்கன காப்பு, வெள்ளிகவச சத்துபடி என்று பலவிதமான பூஜைகள் அன்னை கலைவாணிக்கு செய்யப்படுகிறது. சகலகலாவல்லி மாலையை பாராயணம் செய்தும். "சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி வித்ய-ஆரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா." என்று இவரை வணங்குவோம்.

ஈசனின் திரிநேத்திரங்களில்(மூன்றுகண்கள்) நெற்றிகண்ணான சரஸ்வதி முதலிலும், ஸ்ரீ துர்க்கை அடுத்தபடியாகவும், ஸ்ரீ லக்ஷிமி கடைசியாகவும் அமையப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக தக்ஷிணாமூர்த்தி, பிரகாராதில் உள்ளார்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவொ மஹெஸ்வர:
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவெ நம:
குரவே ஸர்வ லௌகானாம் ப்ஹிஜெ ப்ஹவ ரொகினாம்
நித்யே ஸர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்தயெ நம:
ஆக்னான திமரான்தஸ்ய ஞானானான் சன ஸலாகய
சக்ஷுர் ஊன்மூலிதம் ஏன தச்மை ஸ்ரீ குரவெ நம:
என்று இவரை வணங்குவோம்.

இவரின் இருபுரமும் இந்திரனின் ஐராவதத்தின் நிழல்யானைகளான வெள்ளை நிற யானைகள் நிற்கிறது. அவையாவும் இந்திரவிமானத்தை தாங்கி நிற்கிறது. அதில் இரண்டு யானைகள் சுவாமி சன்னிதிக்குள்ளும், இரண்டு யானைகள் தக்ஷிணாமூர்த்தியின் இருபுரமும், இரண்டு யானைகள் ஸ்ரீ துர்க்கையின் இருபுரமும், இரண்டு யானைகள் லிங்கோத்பவரின் இருபுரமுமாக எட்டு யானைகள் நிற்கின்றன.

தக்ஷிணாமூர்த்தியின் எதிரில் சப்தமாதர்களும், மேற்க்கு நோக்கிய குருமூர்த்தியும், சப்தமாதர்களுக்கு உபதேசம் செய்தபடியும் காட்சி தந்தருள்கிறார், இவருக்கு எதிரில் விக்நேசரும் அபய முத்திரை காட்டியபடி நிற்கிறார்.

மேற்க்கே உள்ளது சுவாமி மற்றும் பிரியாவிடையும், மீனாட்சியின் உற்சவர்கள்.

இவர்கள் மூலவரின் பிரதி பிம்பமாக உள்ளனர். எப்படி மின்சாரமானது செம்பு கம்பியின் மூலமாக பாய்ந்து இலக்கை அடைகிறதோ, அப்படியே மூலவரின் சக்தியை இவுற்சவர்கள் மக்களுக்கு அளிக்கின்றனர். இவர்களுக்கு செய்யப்படும் அலங்காரம் எத்தனை எத்தனை, இவர்கள் செய்யும் லீலைகள் எத்தனை எத்தனை, அதில் ஒன்று பட்டாபிஷேகம். சித்திரை முதல் ஆவணி வரை அம்மனும் ஆவணி முதல் சித்திரை வரை அய்யனும் ஆட்சி செய்வது மேலும் சிறப்பு.

அடுத்த பதிவில் சுவாமி சன்னிதிச் சுவரில் வரையபட்டிருக்கும் திருவிளையாடல் காட்சிகள்.

முந்தைய பதிவு.

அடுத்த பதிவு

Wednesday, March 29, 2006

36: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 19

அறுபத்து மூவரை தரிசிக்கும் முன்,



முக்கியமான இருவரை தரிசிக்க இருக்கிறோம் அவர்களில் ஒருவர், தென்பாரதத்தில் யோககலைக்கு வித்திட்டவர், யோகங்களை ஈசனருளாள் அவரிடமிருந்து கற்று, உலகில் பரப்பியவர். அவரும் மற்றுமொருவரும் நடனமாடும் நடேசரருக்கருகில் நிற்பவர்கள். மற்றொருவரும் பக்தியில் அனைவரையும் மிஞ்சியவர். பூஜைக்கு மலையேறி மலர்பறிக்க தன் காலையே புலியின் காலாக மாற தவம்செய்தவர், வரமும் பெற்றவர்.
ஆம், பதஞ்சலி முனிவரையும், வியாக்ரபாதரையும், தான் தரிசிக்க இருக்கிறோம்.

என்றும் நடராஜரை வணங்கி நிற்க்கும், 'பதஞ்சலி முனிவரும், வியாக்ர பாதரும்' (கோப்பு படம், மீனாக்ஷி அம்மன் கோவில் படமல்ல).

இதோ இனி அறுபத்து மூவரை தரிசிப்போம். அறுபத்துமூவர்களில் முதன்மையானவர்கள் நால்வர். இவர்கள் பாடிய பாடல்களே தேவாரம் என்று வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த நாயன்மார் பிறந்த நக்ஷதிரத்தில் அவரவருக்கு மாலை மரியாதையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகிறது.

01. சுந்தரமுர்த்தி நாயனார்
02. திருநீலகண்ட நாயனார்
03. ஐயர்பஹை நாயனார்
04.இளயன்குடிமார நாயனார்
05.மெய்பொருள் நாயனார்
06.விரல்மிண்ட நாயனார்
07.ஆமரநீதி நாயனார்
08.ஏரிபாத நாயனார்
09.ஏநாதிநாத நாயனார்
10.கண்ணப்ப நாயனார்
11.குன்கிலியகலய நாயனார்
12.மனகன்சர நாயனார்
13.அரிவத்தய நாயனார்
14.அனய நாயனார்
15.மூர்த்தி நாயனார்
16.முருக நாயனார்
17.ருத்ரபசுபதி நாயனார்
18.திருநாளைபொவார் நாயனார்
19.திருகுறிப்புதொன்ட நாயனார்
20.சந்தெஸ்வர நாயனார்
21.திருநாவுக்கரசர் நாயனார்
22.குலச்சிரை நாயனார்
23.பெருமிழலை குரும்ப நாயனார்
24.காரைகல் ஆம்மையர்
25.ஆபூத்தி நாயனார்
26.திருநீலனக்க நாயனார்
27.நமிநந்திஅடிகள்
28.திருஞாணசம்பந்தர்
29.ஏயர்கொன்கலிகம நாயனார்
30.திருமூலநாயனார்
31.தண்டி அடிகள் நாயனார்
32.முர்க நாயனார்
33.சோமசிர நாயனார்
34.சக்கிய நாயனார்
35.சிரப்புலி நாயனார்
36.சிறுதொண்ட நாயனார்
37.செரமன் பெருமாள் நாயனார்
38.கணநாத நாயனார்
39.கூடுருவ நாயனார்
40.புகல் சொல்லா நாயனார்
41.நரசிங்க முனியரையர்
42.அடிபட்ட நாயனார்
43.கலிகம்ப நாயனார்
44.கலிய நாயனார்
45.சத்தி நாயனார்
46.ஐயடிகள் கடவர்கொன் நாயனார்
47.கனம்புல்ல நாயனார்
48.கரி நாயனார்
49.நின்ற சீர் நெடுமர நாயனார்
50.மங்கயர்கரசியர்
51.வயிலர் நாயனார்
52.முனையதுவர் நாயனார்
53.கழர்சிங்க நாயனார்
54.செருதுணை நாயனார்
55.ஈதன்கழி நாயனார்
56.புகழ் துனை நாயனார்
57.கொட்புளி நாயனார்
58.புசலர் நாயனார்
59.நேச நாயனார்
60.கோசெந்கத் சொழ நாயனார்
61.திருநீலகன்ட யாழ்பணர்
62.சதய நாயனார்
63.இசைஞாணியர்


இவர்கள் அனைவரின் சாதனைகள் ஒன்றைகொன்று மிஞ்சும் அளவுக்குள்ளது. ஈசன் நினைத்திருந்தால் இவர்களனைவரின் சாதனைகளையும், சோதனைகளையும் தாமொருவரே நிகழ்த்தியிருந்திருக்கலாம். ஆனால் இவர்கள் மூலம் இறைவன் சொல்லாமல் சொல்வது "நீ யாராக இருந்தாலும், யவராக இருந்தாலும், எச்சமூக, சமுதாயத்தவராக இருந்தாலும், எப்பாலாக (ஆண்,பெண்) இருந்தாலும் எம்மையடைவதில் (சங்கரனை) எந்த பேதமும் இல்லை, அனைவருக்கும் யாம் சமம்" என்பதேயாகும், ஏனெனில், இவர்களனைவரும் பல பகுதிகளில் பிறந்தவர்கள், பல பிண்ணனியிலிருந்து வந்தவர்கள்.

இவர்களை தொடர்ந்து அருள்பவர்கள் ஐந்துவிதமான லிங்கங்கள் அப்பு லிங்கம், ஜுரலிங்கம், லவன(உப்பு) லிங்கம், ஸஹஸ்ர (ஆயிரம்) லிங்கம், தேயு லிங்கம் என்பவனாம். சிவராத்திரி சமயத்தில் இங்கு நடக்கும் சிறப்பு ஆராதனையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வரும் பதிவுகளில் வேதமாதா சரஸ்வதியும், தென்முகக்கடவுள் தக்ஷினாமூர்த்தியும், சப்தமாதர்கள், குருமூர்த்தியும், இரட்டை கணபதியும், உற்சவரும்.

முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

Saturday, March 25, 2006

30: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 18

உள்ளே ஒளிகடவுளான, சூரிய நாராயணன், தன்துணைகளான உஷாதேவி மற்றும் சாயதேவியுடன் நிற்கிறார்.


ஜயதி ஜயதி சூர்யஹ
ஸப்த லோகைக தீபஹ
கிரந ஸபித பாபம்
ஸர்வ துக்கஸய நாசம்

என்று இவர்களை வணங்கி உள்ளே சொக்கநாதரை நோக்கிச் செல்வோம்.

ஐந்தெழுத்தை உச்சரித்தும் லிங்காஷ்டகம் சொல்லியும் சன்னிதிக்குள்ளே செல்வோம்.

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித ஷொபித லிங்கம்
ஜன்ம ஜதுக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ முனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணகார லிங்கம்
ராவண தர்ப வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகன்தி ஸுலெபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

கனக மஹாமனி பூஷீத லிங்கம்
பனிபதி வேஷ்டித சொபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ வினாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லெபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசொபித லிங்கம்
ஸன்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தெவகணார்சித ஸெவித லிங்கம்
பாவையர் பக்திபிரெவ ச லிங்கம்
தினகர கோடி பிரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வெஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யஹ படெத் சிவ சந்நிதௌ
சிவலொகம் ஆவாப்னொதி
சிவேன ஸஹ மோததே

என்று சுந்தரேஸ்வரரை வணங்கி

(மூலவரும், ஆருத்ரா தரிசனிதின் போது உலாவரும் உற்சவரரும்)
(பாரம்பரிய தோற்றம்)


வெள்ளியம்பல நடராஜர் சன்னிதி முழுவதும் வெள்ளியால்வேயப்பட்ட பின்

"வெள்ளியம்பல நடராஜருக்கு சந்தன அலங்காரமிட்டு ஆரத்தி"
மேலும் சன்னிதிக்குள்ளிருக்கும் அறுபத்துமூன்று நாயன்மார்களையும் (உற்சவர்களை), நால்வரையும் தரிசித்தபடி. அஷ்ட திக்கு பாலகர்களின் பக்கம் வருகிறோம்.
அஷ்ட திக்குகளுக்கு அதிபதிகளாக
வடக்குத் திசைக்குக் குபேரனும்,
கிழக்குத் திசைக்கு இந்திரனும்,
தெற்குத் திசைக்கு எமனும்,
மேற்குத் திசைக்கு வருணனும்,
வடமேற்குத் திசைக்கு வாயுவும்,
வடகிழக்குத் திசைக்கு ஈசனியமும்,
தென்கிழக்குத் திசைக்கு அக்னியும்,
தென்மேற்குத் திசைக்கு பித்ரு(கன்னி) என்று வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வீட்டில் ஏதாவது வாஸ்து குறை இருப்பின் அந்த குறிப்பிட்ட தெய்வங்களை வணங்கி குறைகளை களைவது வழக்கம். சுந்தரேஸ்வரர் சன்னிதிக்கு வந்தவர்கள் வீட்டில் எந்த குறையும் இல்லாமல் இருப்பதற்க்கு இவர்களது அருளும் ஒரு காரணம். இவர்கள் அனைவரும் நால்வர் சன்னிதிக்கு அடுத்து படியாக நிற்கிறார்கள்.

மீனாட்சி அம்மையின் திக்கு விஜயத்தின் பொழுது நடக்கும் சன்டையில் இவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று முன்னேறுவதை காணத் தவமியற்றியிருக்க வேண்டும்.

அடுத்த பதிவு அறுபத்துமூன்று நாயன்மார்களையும் (மூலவர்கள்), சிவன் சன்னிதிக்குள்ளிருக்கும் லிங்கங்களையும், சரஸ்வதி, தக்ஷினா மூர்த்தி, மற்றும் உற்சவர்கள்.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

Thursday, March 23, 2006

28: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 17


சிவசங்கரனுக்கு மக்கள் பல கணபதி(கணங்களின் அதிபதி), கார்த்திகேயன் (தேவசேனாபதி), தர்மஸாஸ்தா ஐப்பன், அக்னிவீரபத்திரர், அகோர வீரபத்திரர், (தீமைகளை அழிக்கும் தொழிலின் அதிபதிகள்), துவாரபாலகர்கள், முருகனுடன் பிறந்த வீரபாகு முதலிய சேனை, கலியுகமுழுவதும் இராம நாம ஜெபம் செய்ய வரம்பெற்ற, வனரவீரன் சிரஞ்சீவி அனுமன் என்று படியல் நீள்கிறது.

இவர்களனைவரையும் மீனாக்ஷி அம்மன் கோவிலின் தரிசிக்கலாம். தந்தை காணவருபவர்கள், அவர்தம் மக்களை செல்லமாக கன்னத்தில் முத்தமிடுவதில்லையா? அதேபோல் கூட்டுகுடும்பத்தை ஒரு பல்கலை கழகம் என்று சொல்வது போல் இவர்களனைவரும் ஒருங்கே ஓரிடத்தில் இருக்கிறார்கள், அருள்கிறார்கள்.


ஈசனை காண இரு துவாரபாலகர்களிடமும் அனுமதி பெறவேண்டும். சுவாமி சன்னிதியில் இருக்கும் மற்றொருவர் நர்த்தன கணபதி சங்கரனின் கால்மாறி ஆடியகோலம் கண்டு இவரும் ஆட ஆரம்பித்திருக்க வேண்டும்.


இவரை வணங்கி இவரருகில் இருக்கும் மற்றொரு விக்நேசரை வணங்கி உள்ளே சன்னிதிக்குள் செல்வோம்.

அடுத்த பதிவு, ஈசனின் சன்னிதியில் உள்ளே, மாலுக்கும், பிரம்மனுக்கும் கிட்டாத, ஆதி அந்தமில்லாத சிவனும், மதுரையில் கால்மாறி ஆடிய வெள்ளியம்பலநாதர்.

முந்தைய பதிவு.
அடுத்த பதிவு

Wednesday, March 22, 2006

27: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 16

கம்பத்தடி மண்டபதை அடையும் முன் வழியில் நூறு கால் மண்டாபத்தையும், நவகிரக சன்னிதியையும், அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஊர்த்தவ தாண்டவர், பத்ரகாளியையும் காணலாம், இவரனைவரையும் சொக்கநாதரை தரிசித்த பின் விளக்கமாக பார்ப்போம்.


ஈசனை காண உள்ளே செல்லும்முன் இடபாருட வாகனம், ஈசனின் உகந்த வாகனம், ஈசனை காண வந்த மீனாட்சி அம்மையையே நிறுத்திய பிரதமகணம், என்று பலவாக போற்றபடும் நந்தியை சுற்றிவந்து ஈசனை காண அனுமதி பெற வேண்டும். எப்போதும் சிவனையே தியானிக்கும் நந்தியை, எவ்வித சிறிய ஒலியெழுப்பாமல், அவர் தியானத்தை கலைக்காமல் அமைதியாக அனுமதிபெற்று வலம்வரவேண்டும். சிவன் கோவிலில் செய்யகூடாதவை என்று சில நியமங்கள் உள்ளன. அவற்றில் அதிமுக்கியமாக கவனிக்கபடுவது, சிவனுக்கும் நந்திக்கும் இடையில் செல்வதை தவிர்ப்பது. ஏனெனில் ஒருவிதமான வாயு மூலவர்க்கும், வாகனத்துக்கும் போவதாகவும், வருவதாகவும், நம்பப்படுகிறது. அந்த போக்குவரத்தை தடுக்காமலிருக்கவே இவ்வைதீகத்தை கடைபிடிக்கப்படுகிறது.


கம்பத்தடி மண்டபத்தில் திருவிழாசமயத்தில் ஏற்றபடும் கொடி கம்பமும், ஏராளமான சிற்பங்களும் உள்ளான. ஏகபத மூர்த்தி, பிக்ஷாடனார், நடராஜர், பஞ்சமுக பரமசிவன், ரிஷபவாகனம். கஜஹர மூர்த்தி, சங்கரநாராயணன், அர்த்தநாரீஸ்வரர்,காலஹரமூர்த்தி சிலையில் உள்ள மார்கண்டேயனும் சிவலிங்கமும் காண்போரை அதிசயக்க வைக்கும், திருக்கல்யாண கோலமும் இங்கே காணலாம்.

இந்த கொடிகம்பத்தில் பிள்ளை பெறுமான் என்றழைக்கப்பட்ட திருஞானசம்பந்தர் நின்றுள்ளார். கூன்பாண்டியனின் காலத்தில் மதுரையில் அவர் அனல் வாதம், புனல் வாதம் செய்து வென்ற செய்தியின் வெற்றிசின்னமாகவும்,ஞாபகசின்னமாகவும், அவர்தம் உருவை நெடுமாறனாக நிமிர்ந்த அதே கூன்பாண்டியன் நிறுவினார்.














பலரும் தாங்கள் கோரிக்கைகள் நிறைவேறியபின் தமது துர்குணங்களை களைவதாக இங்கே சங்கல்பம் செய்வர்.

நந்தேவரிடம் அனுமதி பெற்றவர்கள் மேலும் இருவரிடம் அனுமதி பெறவேண்டும். அவர்களையும் வாயிலின்இடது பக்கத்திலிருக்கும் விநாயகர் சன்னிதியையும் அடுத்த பதிவில் காண்போம்.

முந்தைய பதிவு
அடுத்த பதிவு

Tuesday, March 21, 2006

26: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 15

ஆதி சங்கரர் சொன்ன ஹிந்து சனாதன தர்மத்தில் ஐந்து தெய்வங்கள் உள்ளனர்,

1. கணபதி
2. சிவபெருமான்
3. அம்மன்
4. திருமால்
5. முருகன்

இந்த ஐவரும் ஒரே இடத்தில் காட்சி தந்தருள்வது திருபரங்குன்றத்தில். இதேபொன்றதொரு அமைப்பு திருக்கல்யாண சன்னிதியில் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சன்னிதியில் விநாயகர், முருகன் விக்கிரகங்கள் உள்ளன. உள்ளே சன்னிதிக்குள் திருக்கல்யாண கோலத்தில் திருமால் தன் தங்கையை தாரைவார்த்துதர, மீனாட்சியம்மை மணமகளுக்குரிய நானத்துடன் நிற்க, சுந்தரேஸ்வரோ புன்னகையுடன் நிற்க்கின்றார். இவ்வமைப்பை காணும் பொழுது, இந்த ஐந்து தெய்வங்களும் ஒரே இடத்தில் காட்சி தந்தருள்வது போல் அமைந்துள்ளது.

முன்மண்டபத்தில் அழகிய வண்ணங்களில் நரசிம்மர், சரபேஸ்வரர், அஷ்ட லக்ஷ்மிகளான வீர லக்ஷுமி, விஜய லக்ஷ்மி, தன லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, ஆதி லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, சிலைகளும், சங்கர நாராயணன், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும். காண்போரின் தன்நிலையை மறக்கச்செய்யும்.

அடுத்த பதிவு கம்பத்தடிமண்டபம்.

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Friday, March 17, 2006

25: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 14



முக்குறுணிப் பிள்ளையாரை வணங்கி. கிழக்கு திசையில் (இடது பக்கம்) சென்றால் சொக்கநாதரின் பிரகாரத்தை அடையலாம். இந்த வெளிபிரகாரத்தில் தென்கிழக்கு மூலையிலிருந்து வடமேற்க்கு மூலை வரை சிவலிங்க சன்னிதிகள் உண்டு. வித விதமான 11 லிங்கங்கள், உள்ளன. பரமசிவன், சோமநாதர், சொக்கலிங்கம், மற்றும் சில வடஇந்திய பாணியிலும் சிவலிங்கங்கள் உள்ளன.



நந்திகேஸ்வரருடன் உள்ள இரண்டு சிவலிங்க சன்னிதியும், பராசக்தியின் சன்னிதியும் காணலாம். இந்த பிரகாரத்தை பலர் தியானம் செய்யவதுண்டு, தற்போது 100 கால் மண்டபத்தை தியான மண்டமாக மாற்றி சில வசதிகள் செய்யபட்டிருப்பினும் இவ்விடங்களின் தியானிப்பவர் எண்ணிக்கை குறையவில்லை மாறாக 100 கால்மண்டபத்திலும் தியானிப்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பராசக்தி சன்னிதியிலிருந்து மேற்க்காக திரும்பி சென்றால் முதலில் இருக்கும் தமிழ் புலவர்கள் சன்னிதி நம் சிந்தனையை தூண்டும். உள்ளே செல்ல இயலாவிட்டாலும், வெளியிலிருந்தே அனைவரையும் தரிசிக்க முடியும். திருவள்ளுவர், இளங்கோவடிகள், தாயுமானவர், செந்நாபுலவர் என்று மேலும் பல புலவர்களை காணலாம்.

அடுத்த பதிவு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண சன்னிதி.

முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

Thursday, March 16, 2006

20: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 13

முழுமுதல் கடவுளை,
மோதகபிரியனை,
மூர்ஷிக வாகனனை,
முஷ்டியால் நெற்றியில் தாக்கி.


மூன்றுகுறனியால் மோதகம் படைத்து,
மஞ்சளால் பிடித்தோ, - களி
மண்ணால் பிடித்தோ
முழுமனதுடன் வணங்கினால்.

காட்சி தருவான்
காசினியை
கனபொழுதில் வலம்வந்தவன்
கணங்களின் அதிபதி

கந்தனக்கு மூத்தோன்,
கலிதோஷம் நீக்கோன்,
காண்பவர்க்கு,
கணபதி,
இதோ முக்குறனி விநாயகர்.

(பரம்பரிய தோற்றம்)

விநாயகர் சதுர்த்தி அன்று முக்குறனி விநாயகர்க்கு வெள்ளிகவசம் சாற்றி, 18 படி அரிசி மாவினால் செய்யப்பட்ட கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யும் காட்சி.

திருவாச்சியில் என்றும் தம் குடும்பத்துடன் வணங்கிய நிலையில் நிற்க்கும் மன்னர் திருமலை நாயக்கர், அதற்க்கும் மேலே 'எந்த பிரகார தெய்வங்களுக்கும் இல்லாத சிறப்பான' முக்குறனி விநாயகர் கோபுரத்தை நிர்மானித்த செட்டியாரும் தம் மனைவியுடன் வணங்கியபடி நிற்கிறனர்.

அடுத்த பதிவு, வெளிபிரகாரத்திலுள்ள சிவலிங்கங்களும், திருக்கல்யாண மூர்த்தி சன்னிதி.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

19: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 12

என் மனற்கேணியை சரியாக தோண்டவில்லை என்று சுட்டி காட்டிய குமரன் அவர்களுக்கும், சில மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ என் மனற்கேணியில் கிடைத்த ஒருசில பவளங்கள்.

கொலுமண்டபத்தில் நவராத்திரி சமயத்தில் தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மையும் அப்பனும் ‘தருமிக்கு பொற்கிழி அளித்தும்’, ‘நாரைக்கு முக்தி அளித்தும்’, அம்மை ‘சிவபூஜை’ செய்தும், அப்பன் ‘பிட்டுக்கு மண் சுமந்தும்’ , ‘ராஜராஜேஸ்வரி’ அலங்காரத்திலும், ‘மேருவை சென்டால் அடித்தும்’, ‘உக்கிர பண்டியனுக்கு அஸ்திரங்கள் வழங்கியும்’, 'நரியை பரியாக்கியும்', ‘ஊஞ்சல்’ அலங்காரத்திலும், ‘கல்யானைக்கு கரும்பளித்தும்’ ,‘மகிஷாசுர வதம்’ அலங்காரத்திலும், ‘சரஸ்வதி’ அலங்காரத்திலும் அருட்காட்சி கொடுப்பர். பக்தர்களால் உபயமாக வழங்கப்பட்ட கொலுபொம்மைகளும், அம்மை அப்பனின் வாகனங்களும் அணிவகுத்தப்பட்டிருக்கும்.

மண்டபத்தின் முன்னால் உள்ள சிறு தடாகத்தில் விதவிதமான நீர் கோலங்கள் வரையப்படுகிறது.

"அயி கிரிநந்தினி நந்திதமேதினி விஷ்வவினோதினி நந்தனுதே
கிரிவர விந்தய ஷிரொதினிவாஸினி விஷ்னுவிலாஸினி ஜிஷ்ணுனுதே
பகவதி ஹெஷிதிகண்டகுடும்பினி பூரி குடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹெ மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஷைலஸுதே"
என்று அவளை வணங்கி சுற்றி வர. 'கூடல் குமரனை' வணங்கி. வெளியேவர மீண்டும் கொடி மரத்தை அடைந்து வெளியே வருவோம்.
அடுத்த பதிவில் மீனாக்ஷி அம்மன் கோவிலின் பெரிய மூர்த்தி, மூர்த்தியும் பெரிது, கீர்த்தியும் பெரிது, அவருக்கு படைக்கும் படையலும் பெரிது. ஆம் முக்குருணி விநாயகரே (மட்டும்).


முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு