
1. கணபதி
2. சிவபெருமான்
3. அம்மன்
4. திருமால்
5. முருகன்
இந்த ஐவரும் ஒரே இடத்தில் காட்சி தந்தருள்வது திருபரங்குன்றத்தில். இதேபொன்றதொரு அமைப்பு திருக்கல்யாண சன்னிதியில் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்மண்டபத்தில் அழகிய வண்ணங்களில் நரசிம்மர், சரபேஸ்வரர், அஷ்ட லக்ஷ்மிகளான வீர லக்ஷுமி, விஜய லக்ஷ்மி, தன லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, ஆதி லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, சிலைகளும், சங்கர நாராயணன், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும். காண்போரின் தன்நிலையை மறக்கச்செய்யும்.
அடுத்த பதிவு கம்பத்தடிமண்டபம்.
2 comments:
கல்யாண சுந்தரரை வணங்கினால் திருமணம் ஆகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கை உண்டு.
ஆம் பலரும் என்னிடம் கூறியுள்ளனர்.
Post a Comment