Friday, March 17, 2006

25: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 14



முக்குறுணிப் பிள்ளையாரை வணங்கி. கிழக்கு திசையில் (இடது பக்கம்) சென்றால் சொக்கநாதரின் பிரகாரத்தை அடையலாம். இந்த வெளிபிரகாரத்தில் தென்கிழக்கு மூலையிலிருந்து வடமேற்க்கு மூலை வரை சிவலிங்க சன்னிதிகள் உண்டு. வித விதமான 11 லிங்கங்கள், உள்ளன. பரமசிவன், சோமநாதர், சொக்கலிங்கம், மற்றும் சில வடஇந்திய பாணியிலும் சிவலிங்கங்கள் உள்ளன.



நந்திகேஸ்வரருடன் உள்ள இரண்டு சிவலிங்க சன்னிதியும், பராசக்தியின் சன்னிதியும் காணலாம். இந்த பிரகாரத்தை பலர் தியானம் செய்யவதுண்டு, தற்போது 100 கால் மண்டபத்தை தியான மண்டமாக மாற்றி சில வசதிகள் செய்யபட்டிருப்பினும் இவ்விடங்களின் தியானிப்பவர் எண்ணிக்கை குறையவில்லை மாறாக 100 கால்மண்டபத்திலும் தியானிப்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பராசக்தி சன்னிதியிலிருந்து மேற்க்காக திரும்பி சென்றால் முதலில் இருக்கும் தமிழ் புலவர்கள் சன்னிதி நம் சிந்தனையை தூண்டும். உள்ளே செல்ல இயலாவிட்டாலும், வெளியிலிருந்தே அனைவரையும் தரிசிக்க முடியும். திருவள்ளுவர், இளங்கோவடிகள், தாயுமானவர், செந்நாபுலவர் என்று மேலும் பல புலவர்களை காணலாம்.

அடுத்த பதிவு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண சன்னிதி.

முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

3 comments:

குமரன் (Kumaran) said...

தமிழ்புலவர் சன்னிதியில் பாண்டியனின் சந்தேகம் தீர்த்து நக்கீரனுடன் விவாதித்த இறையனாரின் திருவுருவமும் இருக்கிறதே, பார்த்திருக்கிறீர்களா?

சிவமுருகன் said...

இறையனாரின் திருவுருவம் தரிசித்துள்ளேன். உள்ளே செல்ல அனுமதி இல்லாததாலும் உள்ளே எட்டிபார்ப்பதும் தவறு என்பதாலும் ஒவ்வொரு முறையும் பார்பதில்லை, சிறுவயதில் பார்துள்ளேன்.

சிவமுருகன் said...

Dear Dr.Jaybee,
Thank you for your visit and comment on the blog.

Thank you very much for taking care and your guidance, also spending your valuable time in the blog. Always do visit to blog.