Wednesday, March 08, 2006

17: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 10

அம்மன் சன்னிதிக்குள் நுழையும் பொழுது எல்லா இந்திரியங்ளாலும் அம்மனை நினைத்து, தியானித்து உள்ளே சென்று துவஜஸ்தம்பதின் முன்னால் வடக்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ ஸாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, திருமலை விநாயகரிடமும், நந்திகேஸ்வர்ரிடமும் அனுமதி பெற்று

"நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாயகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆயகியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே."

என்று மனதார பாராயணம் செய்து, சரணடைந்து, கண்ணாடி சேவை கண்டு பேரின்பத்துடன் உள்ளே சென்றால், அழுகுரலுக்கு ஓடிவந்து ஞானசம்பதர்க்கு ஞானப்பால் அளித்தவள், ஞானமள்ளி தர ச்ரீ சக்கரத்தை குண்டலமாக தரித்து நிற்பவள், தமக்கே உரிய சர்வ அலங்காரத்துடன்,

"கலையாத கல்வியும் குறையாத வயதும்ஓர் கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாத சந்தா னமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உத விப்பெரிய தொன்டரொடு கூட்டு கண்டாய்;
அலையாழி அறிதுயுலு மாயனது தங்கையே! ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமி!"

என்ற அபிராமி பட்டரின் வாக்குபடி 16 செல்வங்களை அள்ளிதர காத்திருக்கிறாள் அன்னை மீனாட்சி, இவளே காஞ்சியில் காமாட்சி, காசியில் விசாலாட்சி, தென்கோடியில் கன்னியா குமரி, வடகோடியில் வைஷ்ணவி, மேற்க்கில் மாஹாலட்சுமி, கிழக்கில் காளி, சமயபுரத்தில் மாரி, எல்லயில் பத்ரகாளி, அடங்காதவர்க்கு நீலி இப்படி இவளின் கோலங்கள் பலவகும். ஆனால் அம்மா ஒன்றாகும்.


"அரிது அரிது மானிடராதல் அரிது அதினினும் அரிது

கூண் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது,

கூண் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது,

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்,

வானவழிபாடு வழிபிறந்திடுமே."

என்ற ஞானத்தின் முக்கியத்துவத்தை உரைக்க ஔவை கையாண்ட மொழிகளை பார்க்க முடியும். கடைசி வரியில் வரும் "வான வழிபாடு" என்பதில் அவள் பாதகமலத்தில் அனைத்தும் அடக்கம்.

(சமீபத்தில் அம்மனுக்கு அனுவிக்கப்பட்ட பொற்பாதங்கள்.)

12 comments:

rnatesan said...

நன்று மிக்க நன்று தொடர்க!!
(என் பழைய விமர்சனத்திற்கு பதில் அளிக்காவிட்டாலும் என் மதுரை மீனாட்சியை தரிசிப்பேன் எப்போதும்!!!)

சிவமுருகன் said...

மன்னிக்கவும் நடேசன், உங்களையும், என்னார் அவர்களையும் சேர்த்து பதில் சொல்லியதாக நினைத்து விட்டேன்.

பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி.

தருமி said...

படங்களெல்லாம் உங்கள் கைவண்ணம்தானா?

சிவமுருகன் said...

எல்லாம் அ(சி)வன் சித்தம். 2 வருடமாக நான் சேகரித்த படங்கள்.

குமரன் (Kumaran) said...

அம்மையின் திருவுருவத் தரிசனம் அளித்தமைக்கும் அபிராமி பட்டரின் பாடல்களுக்கும் நன்றி சிவமுருகன்.

சிவமுருகன் said...

நன்றி குமரன் அவர்களே.

rnatesan said...

சும்மா ஜாலிக்காக சொன்னேன்!!நான் கொஞ்சம் தமாஷ் பேர் வழி!!
புகைப்படங்கள் அற்புதம்!!

சிவமுருகன் said...

அன்பு நடேசன்,
ஜாலியாக எடுத்துகொண்டது உங்கள் பெருந்தன்மை.

Gayathri Chandrashekar said...

Sudharagunathanin kuralil "kalaiyaadha kalvi.." paadalai kettirukkinren..Inru adhan muzhu arthaththinai arindhu konden.."Porpaadhangalai kaana kangal kodi dhaan vendum"!

சிவமுருகன் said...

நன்றி காயத்ரி மேடம்.

cheena (சீனா) said...

sivamurukan

படங்கள் அருமை - பாடல்களும் கூட

சிவமுருகன் said...

/sivamurukan

படங்கள் அருமை - பாடல்களும் கூட//

சீனா ஐயா மிக்க நன்றி.