மீனாக்ஷி அம்மனை வலம் வந்து, சன்னிதிக்குள் இருக்கும் இரட்டை விநாயகரையும், வள்ளிதேவானையுடன் அருளும் சுப்ரமணியரையும் வணங்கி, சண்டிகேஸ்வரியிடம் நம் வருகையை அமைதியாக தெரிவித்து, தென்புறவாயில் வழியாகவோ, கிழக்கு வாயில் வழியாகவோ கொடிமரத்தை சுற்றி வந்து, உட்பிராகாரத்தின் உள்ளே சென்றால், திருமலை நாயக மன்னனின் வண்ண உருவச்சிலை, தமது பட்டத்து ராணியுடனும், தன் அபிமான மகளுடனும் கரங்கள் கூப்பிய நிலையில் நிற்க்கின்றனர். ஒவ்வொரு இரவும் பள்ளியறை பூஜைக்கு 5 நிமிடத்திற்க்கு முன்பு நடக்கும் தீபாரத்தி இங்கு நடக்கும்பொழுது மன்னன் தன் குடும்பத்துடன் சர்வேஸ்வரனை வணங்குவதாக நம்பப்படுகிறது.
அற்புத ஆலயத்தை மக்களுக்கு அற்பணித்த மன்னனுக்கு நன்றிகூறி, அம்மன் சன்னிதி பிராகாரத்தில் உள்நோக்கி சென்றால் கொலுமண்டபத்தை பார்க்கலாம், நவராத்திரி வேளையில் இப்பகுதியில் பலவிதமான பொம்மைகளையும், பல கோலங்களை தரித்து அம்மன்னும் கொலுவிருப்பதை காண ஓராயுள் போதாது.
(பிட்டுக்கு மண் சுமந்த சொக்கநாதர் கோலத்தில்)
பின்னால் சிவலிங்கமும், குமரகுருபரரின் திருஉருவச்சிலையும், குன்றகுடி குமரனையும் தரிசிக்கலாம்.
அங்கிருந்து சன்னிதி வாசல் நோக்கி வந்து, மீண்டும் கொடிமரத்தை அடைந்து கைகூப்பிவணங்கி வெளியே வந்து வடக்கு(இடதுபுரமாக) நோக்கி சென்றால் கூண் பாண்டியனின் வெப்பு நோய் நீக்கிய மடப்பள்ளி திருநீரை தரித்து, முக்குருணி விநாயகரை நோக்கி சென்றால், சுவாமி சன்னிதியின் வெளிபிராகாரத்தை அடையலாம்.
அடுத்த பதிவில் முக்குருணி விநாயகர், வெளிபிரகாரத்தின் வீற்றிருக்கும் என்னற்ற சிவலிங்கங்களும், ஆதிபராசக்தியும், தமிழ் புலவர்கள் சன்னிதியும், திருகல்யாண மூர்த்தி சன்னிதியும்.
11 comments:
திரு சிவமுருகன்,
கடந்த செவ்வாயன்று திரு. மீனாஷி அம்மனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான தரிசனம். ஐந்து முறை அருகில் சென்று பார்த்தும் மனம் திருப்தியடையவில்லை.உங்களது படங்களும்,விளக்கமும் மிகவும் உதவியாக இருந்தது. நன்றி. அன்பன் தி. ரா. ச
என்ன சிவமுருகன். ரொம்ப வேகமா அம்மனைத் தரிசனம் பண்ணி சீக்கிரம் அம்மன் சந்நிதியை வலம் வந்து விட்டீர்கள். ஏன் திடீரென இந்த அவசரம்? :-)
You may want to take off the word verification as you have put comment moderation.
அன்புள்ள தி.ரா.ச.,
அம்மனை தரிசித்ததை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
விரைவில் என்னையும் சன்னிதிக்கு அழைக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அன்பு குமரன்,
எல்லா மண்டபத்தையும், பின்னால் உள்ள எல்லா சன்னிதியையும் தரிச்ச்தபடி தானே வந்துள்ளோம். விடப்பட்டிருப்பின் தெரியபடுத்தவும்.
// You may want to take off the word verification //
I took off the word verification subject.
சிவமுருகன்.
கோவிலில் நேரே சென்றபோது கூட இப்படி பார்க்கவில்லை!!
இதை படித்து விட்டு கோவிலுக்குச் செல்லவேண்டும்
அன்பு நடேசன்,
கொலுசமயத்தில் நடைபெறும் அலங்காரத்தில் ஒருநாள் இந்த அலங்காரத்தில் இருக்கும். ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரதில் அம்மையும் அப்பனும் காட்சி கொடுப்பர்.
நன்றி என்னார் ஐயா.
நன்றி தமிழ் குழந்தை,
எமது பிற பதிவுகளையும் பார்வை இடவும்.
Post a Comment