Thursday, March 16, 2006

19: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 12

என் மனற்கேணியை சரியாக தோண்டவில்லை என்று சுட்டி காட்டிய குமரன் அவர்களுக்கும், சில மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ என் மனற்கேணியில் கிடைத்த ஒருசில பவளங்கள்.

கொலுமண்டபத்தில் நவராத்திரி சமயத்தில் தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மையும் அப்பனும் ‘தருமிக்கு பொற்கிழி அளித்தும்’, ‘நாரைக்கு முக்தி அளித்தும்’, அம்மை ‘சிவபூஜை’ செய்தும், அப்பன் ‘பிட்டுக்கு மண் சுமந்தும்’ , ‘ராஜராஜேஸ்வரி’ அலங்காரத்திலும், ‘மேருவை சென்டால் அடித்தும்’, ‘உக்கிர பண்டியனுக்கு அஸ்திரங்கள் வழங்கியும்’, 'நரியை பரியாக்கியும்', ‘ஊஞ்சல்’ அலங்காரத்திலும், ‘கல்யானைக்கு கரும்பளித்தும்’ ,‘மகிஷாசுர வதம்’ அலங்காரத்திலும், ‘சரஸ்வதி’ அலங்காரத்திலும் அருட்காட்சி கொடுப்பர். பக்தர்களால் உபயமாக வழங்கப்பட்ட கொலுபொம்மைகளும், அம்மை அப்பனின் வாகனங்களும் அணிவகுத்தப்பட்டிருக்கும்.

மண்டபத்தின் முன்னால் உள்ள சிறு தடாகத்தில் விதவிதமான நீர் கோலங்கள் வரையப்படுகிறது.

"அயி கிரிநந்தினி நந்திதமேதினி விஷ்வவினோதினி நந்தனுதே
கிரிவர விந்தய ஷிரொதினிவாஸினி விஷ்னுவிலாஸினி ஜிஷ்ணுனுதே
பகவதி ஹெஷிதிகண்டகுடும்பினி பூரி குடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹெ மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஷைலஸுதே"
என்று அவளை வணங்கி சுற்றி வர. 'கூடல் குமரனை' வணங்கி. வெளியேவர மீண்டும் கொடி மரத்தை அடைந்து வெளியே வருவோம்.
அடுத்த பதிவில் மீனாக்ஷி அம்மன் கோவிலின் பெரிய மூர்த்தி, மூர்த்தியும் பெரிது, கீர்த்தியும் பெரிது, அவருக்கு படைக்கும் படையலும் பெரிது. ஆம் முக்குருணி விநாயகரே (மட்டும்).


முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

2 comments:

குமரன் (Kumaran) said...

அன்னையின் நவராத்திரி கொலு படங்கள் அருமையிலும் அருமை சிவமுருகன்.

என் சிறுவயதில் என் அன்னையார் ஒவ்வொரு சஷ்டிக்கும் 'கூடல் குமரன்' திருமுன்னருக்கு அழைத்துச் செல்லுவார்கள். அங்கு தான் நான் நிறைய திருப்புகழ் பாடல்களைக் கற்றுக் கொண்டேன். அருணகிரிநாதர் பாடிய குமரன் அல்லவா அவர்? அருணகிரிநாதர் மதுரையம்பதியில் பாடிய திருப்புகழ் பாடல்கள் எல்லாம் இவர் திருமுன்பு தான் பாடியதாக வரலாறு. அதனால் தான் அவருடைய திருவுருவச் சிலையும் 'கூடல் குமரனார்' திருசந்நிதிக்கு வலப்புறம் இருக்கிறது.

சிவமுருகன் said...

நன்றி குமரன்,

திருப்புகழை கற்க எண்ணி,எண்ணியே காலம் கடத்தி விட்டேன். இன்றே அதை கற்க ஆரம்ம்பிக்கிறேன்.

//அருணகிரிநாதர் பாடிய குமரன் அல்லவா அவர்? அருணகிரிநாதர் மதுரையம்பதியில் பாடிய திருப்புகழ் பாடல்கள் எல்லாம் இவர் திருமுன்பு தான் பாடியதாக வரலாறு//

(இது எனக்கு புதிய செய்தி)

அருணகிரிநாதர் மதுரையம்பதியில் பாடியதால் தானோ என்னவோ திருப்புகழ் சபை, திருபரங்குன்றத்தில் இல்லாமல் இக்கோவிலில் இருக்கிறது?