Monday, June 05, 2006

159: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 31

இப்பதிவில் சிவனின் ஆஸ்தான பிளைகளான சமயகுரவர்கள் நால்வரின் சன்னிதிக்கு செல்கிறோம். இச் சன்னிதி, பத்ர காளிக்கு இடப்பக்கம், அமைதியே உருவான தென்மேற்கு மூலையில் உள்ளது. இந்த சன்னிதியில் அதிகாலை அபிஷேகத்திற்க்கு பிறகு ஞானப்பால் வழங்கப்படுவதும், இரவு பள்ளியறை பூஜையின் போது இங்கிருந்து தான் தேவார பாடல் பாட ஆரம்பிப்பர்.

இவர்களை வணங்கி வலப்பகம் திரும்புகையில் உள்ளது பிரசாத ஸ்டால்


அடுத்த பதிவில் உட்ப்ரகார படங்கள்

முந்தைய பதிவு ____________________________________ அடுத்த பதிவு

4 comments:

குமரன் (Kumaran) said...

ம்... நால்வர் சன்னிதிக்கு நான் போனதே இல்லை சிவமுருகன். அதனால் நீங்கள் அந்தச் சன்னிதி பற்றி சொன்னதும் ஒரு நொடி திகைத்தேன். பின்னர் தான் நினைவிற்கு வந்தது அந்த சன்னிதி பெரும்பாலும் மூடியே இருக்கும் என்று.

சிவமுருகன் said...

//ம்... நால்வர் சன்னிதிக்கு நான் போனதே இல்லை சிவமுருகன்...பின்னர் தான் நினைவிற்கு வந்தது அந்த சன்னிதி பெரும்பாலும் மூடியே இருக்கும் என்று.//

இச்சன்னிதியிலிருந்து தான் தேவாரப்பாடல் ஆரம்பிப்பதால் தினமும் கண்டதுண்டு. அச்சமயத்தில் தான் இப்படி ஒரு சன்னிதி இருப்பதே எனக்கு தெரிய வந்தது. பெருபாலும் ஒரு தண்ணீர் ஸ்டான்ட் வைத்திருப்பார்கள் எனவே யாரும் செல்வதில்லை, மேலும், திருவிழா நாட்களில் வாகனங்களை இங்கே தான் நிறுத்துவதுவர் எனவே எப்போதும் இச்சன்னிதியின் வழி அடைத்திருக்கும் (block ஆகியிருக்கும்).

ஏஜண்ட் NJ said...

விரைவில் உங்கள் ஞான்ஸ் மதுரையில்!
:-)

சிவமுருகன் said...

வாங்க ஞான்ஸ்,
எப்ப வரப்போறீங்க, ஆனா நான் தற்போது மதுரையில் இல்லை. வசிப்பது தில்லியில்.