Monday, June 05, 2006

160: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 32

ஈசனை தியானித்து அவரது அக்னி ரூபமான காலபைரவர் கோலத்தில் கண்டு “ஈஸ்வர” பட்டம் பெற்ற சனீஸ்வரர். நமது பாவ புண்ணியங்களுக்கேற்ப நன்மை தீமைகளை இருக்கும் போதே தந்து நமது பவபுண்ணிய கணக்குகளை சமமாக்குகிறார். இதன் மூலம் ஜீவாத்மாவானது இவ்வுலகில் அலைகழிக்கப்படாமல் பரமாத்மாவான அவ்விறைவினிடம் சேர்க்க முக்கிய காரணமாகிறார். இவர் தனியாக இருக்கும் போது பொங்கு சனி என்று குறிப்பிடப்படுகிறார், அவ்வாறு சுவாமி சன்னிதியில் பொங்கு சனிஸ்வரரை இப்போது வணங்குகிறோம்.





இவருக்கு அடுத்தபடியாக உள்ள தூணில் இருப்பவர், ஒரு ரிஷிபத்தினியின் சிலை, அவருடைய கதை பற்றி எனக்கு தெரியாது, எனக்கு தெரிந்ததெல்லாம் கர்ப காலத்தில் பெண்கள் இவரிடம் தமக்கு சுக பிரசவம் ஆக வேண்டிக்கொள்வர், சுகமாக முடிந்தவுடன் எண்ணை சாற்றியும், பாவாடை சாற்றியும் வழிபடுவர். இதற்க்கு மேல் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்வேன்.

அடுத்த தூணில் இருப்பவர், கோபியர் மன்னன், குழலூதும் கண்ணன். அங்கே அவர் நிற்பது குழலூதிய படி, அழகாக இருக்கும் இச்சிலை அனைவருக்கு எட்டிவிடும் அதனாலோ என்னவோ இச்சிலை சற்றே சிதிலமடைந்து உள்ளது.

அடுத்த பதிவு நிறைந்த மணதுடன் வெளி பிராகரத்திற்க்கு வருகிறோம்.

No comments: