இப்பதிவில் சிவசங்கரனின் அவதாரமான அனுமனை தரிசிக்கிறோம். செந்துரத்தை தன் உடல் முழூவதும் பூசி, ராம காதைகளை கேட்டு கொண்டிருக்கும் அந்த ராம பக்தன் இதோ, தேவ சிற்பி விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்டு, ஓரே இரவில் கிடைக்கபெற்ற அனுமனுனின் சிலை, பார்க்கவும் கண்கோடி வேண்டுமே, இதை பதிக்க என் முன்னோர் என்ன தவம் செய்தனரோ.
ஆஞ்சனேயர்

வெற்றிலை மாலை சாற்றியும், எள் விளக்கேற்றியும் வணங்குகின்றனர்.

ஆண்களும்...

பெண்களும்...

குடும்பமாகவும்...

குழுக்களாகவும்...

இவரை வேண்டுவது சிறப்பு. இவரை
ஆஞ்சனேயர் துதி செய்து வலம் வருவோம். இவருக்கு எதிரில் சொக்கநாதரின் பிட்டுக்கு மண்சுமந்த லீலை உள்ளது.

மேலும் சில படங்கள்

இப்பதிவு
செல்வன் அவர்களின் கவனத்தை பெரும் என்று நம்புகிறேன்.
6 comments:
சிவமுருகன். இந்த அனுமன் சிலை வளர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் கேட்டதுண்டா?
குமரன் அண்ணா, அது வளர்ந்து வருவது ஒரு அறிவியல் பூர்வமான செய்தி. செந்தூரம் அணியும் அனைத்து தெய்வ சிலைகளும், மேலும் தேவ சிற்பியால் வடிக்கப்பட்ட சிலைகளும் வளர்ந்து கொண்டிருக்கும், அதில் இந்த அனுமாரின் சிலை விதிவிலக்கா என்ன?
நானும் கேள்வி பட்டுள்ளேன் அதனால் இச்சிலைக்கு செய்யப்பட்ட வெள்ளி கவசம் ஆறு மாதம் கழித்து அணிவிக்க முடியாமல் போனது என்று நீங்கள் கேள்வி பட்டதுண்டா?
இன்று சனிகிழமைதான் ஹனுமன் தரிசனம் கண்டேன்!!மிக்க நன்றி!!
தங்களை நம்பிக்கை குழுமத்தில் காண்கையில் மிக்க மகிழ்ச்சி!!!
ஆனால் குழுமத்தில் சேர்ந்துவிட்டால் நம் வலைபதிவை கவனிக்க நேரமில்லாமல் போய்விடும்!!
அன்புள்ள நடேசன் அவர்களே,
//இன்று சனிகிழமைதான் ஹனுமன் தரிசனம் கண்டேன்!!மிக்க நன்றி!!//
எல்லாம் அவன் செயல்.
//தங்களை நம்பிக்கை குழுமத்தில் காண்கையில் மிக்க மகிழ்ச்சி!!!//
இராமர் அவர்களுக்கு தான் அந்த பெருமை.
//ஆனால் குழுமத்தில் சேர்ந்துவிட்டால் நம் வலைபதிவை கவனிக்க நேரமில்லாமல் போய்விடும்!! //
அப்படி ஒன்றுமில்லை, உதாரணமாக செல்வன் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள் எல்லா விஷயங்களிலும் பதித்து வருகிறார்.
miga arumaiyaaana padangal sivamurugan avargale!!!
நன்றி பிரியா.
Post a Comment