Friday, September 12, 2008

ஆவணி மூல திருவிழா - கடைசி நாள்

விறகு வாங்கலியோ வெறகு.


மாணிக்கம் விற்றவர், வளையல் விற்றவர், இதோ விறகும் விற்க வந்து விட்டார்.

களைப்பு தெரியாமல் இருக்க யாழை மீட்டியும், நம் களைப்பை போக்கவும் வந்து அருள்பாலித்த காட்சி.

ஆவணி மாதம் 26ஆம் நாள்(11/09/2008) நடந்த விறகு விற்ற லீலை இத்துடன் ஆவணி மூல திருவிழா நிறைவடைகிறது.


பாத்தா பசுமரம் படுக்கவெச்சா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா

அன்புள்ள அனைவருக்கும்,
இத்துடன் அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா நிறைவடைகிறது. அடுத்த திருவிழாவான நவராத்திரி வரும் புரட்டாசி மாதம் 14ஆம் நாள் (30/09/2008) தொடங்கி புரட்டாசி மாதம் 23ஆம் நாள்(9/10/2008) வரை நடக்கவுள்ளது அதையும் பதிக்க ஐயன்/அம்மன் திருவுள்ளம் கொள்ள வேண்டி நிற்க்கும் அடியவன்.

இப்பதிவு தொடரை வந்து பார்த்து படித்த அனைவருக்கும் நன்றி.
சிவமுருகன்.

9 comments:

S.Muruganandam said...

//அடுத்த திருவிழாவான நவராத்திரி வரும் புரட்டாசி மாதம் 14ஆம் நாள் (30/09/2008) தொடங்கி புரட்டாசி மாதம் 23ஆம் நாள்(9/10/2008) வரை நடக்கவுள்ளது அதையும் பதிக்க ஐயன்/அம்மன் திருவுள்ளம் கொள்ள வேண்டி நிற்க்கும் அடியவன்.//

ஐயா அவசியம் பதிவிடுங்கள் வந்து மீனாக்ஷி சொக்கேசர் தரிசனம் பெறுகிறோம்.

ஒரு வேண்டுகோள் தாங்கள் வலைசரம் பதிவிற்கு சென்று போன வர இடுகைகளை பார்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தாங்கள் வந்து பார்க்கவில்லை என்ற குறை இருந்தது அதை அந்த அங்கயற்கண்ணி தீர்த்து வைத்து விட்டாள்.

அன்னையின் அருள் என்றைக்கும் அனைவருக்கும் கிட்ட் அவள் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றேன்.

சிவமுருகன் said...

//ஐயா அவசியம் பதிவிடுங்கள் வந்து மீனாக்ஷி சொக்கேசர் தரிசனம் பெறுகிறோம்//

நிச்சயம் முயல்கிறேன்!

//ஒரு வேண்டுகோள் தாங்கள் வலைசரம் பதிவிற்கு சென்று போன வர இடுகைகளை பார்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன். //

தங்களது கைலாஷ் யாத்திரையை வலைச்சரத்திலும் தொடர்ந்ததை நான் படிக்கவில்லை என்று எண்ணாதீர்கள், பின்னூட்டவில்லை, படிக்கிறேன். வாழ்த்துக்கள்! மேலும் ஆன்மீக பதிவர்கள், உங்களை ரசிக்கும் பதிவர்கள், வளைகர பதிவர்கள் என்று தாங்கள் பதித்ததை அறிவேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான படங்கள்...நன்றி சிவா!.

S.Muruganandam said...

மிக்க நன்றி ஐயா.

தாங்கள் வழி காட்டித்தான் வலைப்பூ ஆரம்பித்தேன். எனவே தாங்கள் வந்து காண வேண்டுமென்று ஆவல் கொண்டேன்.

மீண்டும் நன்றி.

சிவமுருகன் said...

//அருமையான படங்கள்...நன்றி சிவா!.//

நன்றி.

Test said...

Thanks for all your efforts and interest which helped for the peoples like us to see. These photos i havent seen when i was in chennai or in any news papers. thanks again and sorry for typing in english.

சிவமுருகன் said...

முருகானந்தம் அவர்களே!

//மிக்க நன்றி ஐயா.

தாங்கள் வழி காட்டித்தான் வலைப்பூ ஆரம்பித்தேன். எனவே தாங்கள் வந்து காண வேண்டுமென்று ஆவல் கொண்டேன்.//

ஆரம்பத்தில் நீங்கள் என்னிடம் கேட்டு தொடங்கியது என்னமோ உண்மை தான். நான் கூறியது சிற்சில குறிப்புகளை மட்டுமே. அச்சமயம் மிகுந்த வேலை பளு இருந்திருந்தது. வீட்டிற்க்கு கூட மாதத்தில் மூன்று முறையே பேசி வந்த காலம்! அத்தகைய தருணத்தில் நான் உங்களுக்கு அனுப்பிய 10-15 சுட்டிகளை பொருமையாக படித்து! அறிந்தது தங்களது திறமை.

தயவுசெய்து என்னை (இனியாவது) ஐயா என விளிக்க வேண்டாம்! எனக்கு வெறும் 28 வயது தான். :-)என்னை சிவமுருகன் என்றே அழையுங்கள்.

சிவமுருகன் said...

//Thanks for all your efforts and interest which helped for the peoples like us to see. These photos i havent seen when i was in chennai or in any news papers. thanks again and sorry for typing in english.//

வாங்க லோகன், வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி.

சிவமுருகன் said...

இத்துடன் "மீனாட்சி அம்மன் கோவில்" வகையில் 64 பதிவுகள் வந்துள்ளன. ஐயன் செய்தது 64 திருவிளையாடல்கள். அதுவும் இந்த நாளில்.