Saturday, September 13, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்



அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை வலம் வர அப்படியே பார்த்து கொண்டிருங்கள். என் கோப்பில் இருக்கும் ஏறத்தாழ 300 படங்கள் உங்கள் கண்முன்னே வந்தபடி இருக்கும். ஒரு படம் இரு வினாடிகள் தெரியும், எல்லா படமும் காண ஏறத்தாழ 10 நிமிடமாகும்.

4 comments:

Subbiah Veerappan said...

300 படங்களைக் கொடுத்தமைக்கு நன்றி. அசுர வேலைதான்!
ஒரு பிரேமிற்கு ஒரு படம் என்ற விகிதத்தில் இணைப்புக் கொடுக்காமல் ஒரு பிரேமில் பெரிதாக ஒன்று, அதன் பக்கவட்டில் மேலும் கீழுமாகச் சிறிய அளவில் இரண்டு என்பது கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது சுவாமி! முடிந்தால் சரி செய்யுங்கள்

சிவமுருகன் said...

வாத்தியார் ஐயா,
//300 படங்களைக் கொடுத்தமைக்கு நன்றி. அசுர வேலைதான்!//

நான் ராட்சஸ கணம் :-)லட்சுமணன் நட்சத்திரம்.(இதை ஏன் சத்ருக்கனன் நடச்த்திரம் என்று சொல்வதில்லை?).

//ஒரு பிரேமிற்கு ஒரு படம் என்ற விகிதத்தில் இணைப்புக் கொடுக்காமல் ஒரு பிரேமில் பெரிதாக ஒன்று, அதன் பக்கவட்டில் மேலும் கீழுமாகச் சிறிய அளவில் இரண்டு என்பது கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது சுவாமி! முடிந்தால் சரி செய்யுங்கள்//

பலவாறு முயன்று விட்டேன் இதுவே போதும் என்பது போல் இருக்கிறது.

தெரிந்தவர் சொன்னால் மாற்றுகிறேன்!

வித்யாசமான படங்கள் மேலும் கிடைத்துள்ளது.

அதை வைத்து வரும் திங்கள் முதல் மேலும் ஒரு தொடர் ஆரம்பிக்க இருக்கிறேன். தொடர்ந்து வருகை தருக!

Tech Shankar said...

//பலவாறு முயன்று விட்டேன் இதுவே போதும் என்பது போல் இருக்கிறது.

//தெரிந்தவர் சொன்னால் மாற்றுகிறேன்!

இப்படிக் கேட்டதால் சொல்லுகிறேன்.

வலது பேனலில் இருக்கும் படங்களை (எம்பெடெட் கோட்) எடுத்துவிடுங்கள்.


உங்களது எந்தப் பதிவைப் படித்தாலும் வலப்புறம் உள்ள படங்களும் வருகின்றன.

எழுத்துப்பதிவுகளில் பிரச்சினை இல்லை.

இந்த "மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்" பதிவில் நீங்கள் பிக்ஸெல் ரேட்டிங்க் 600 வைத்திருக்கிறீர்கள். இரண்டும் ஓவர்லேப் ஆகிறது.


உங்கள் பதிவினைப் பார்க்கும்போது மாத்திரம் புகைப்படங்கள் ஸ்லைட்ஷோவாகத் தெரியும்படி செய்யுங்கள். அப்படிச்செய்தால் பேஜ் லோட் ஆகும் நேரம் குறைவாக எடுத்துக்க்கொள்ளும்.

எப்போதும் வலப்பக்கம் ஸ்லைட் தெரியும்படி வைத்தால் உங்கள் தளத்தின் இயங்குதிறன் / செயல்திறன் பாதிக்கப்படும். பேஜ் லோட் ஆகும் நேரம் அதிகமானால், நமது மக்கள் - பார்வையிடுவோர் - ஜம்ப் ஆகிவிடுவர்.

நான் அவ்வாறுதான் வைத்துள்ளேன். உதாரணத்துக்கு இந்தப் பக்கத்தைப் பார்வையிடுங்கள்.



பெங்களூரு - கப்பன் பூங்கா - சிறப்புப் புகைப்படங்கள்


உங்களது ப்ளாக் டெம்ப்ளேட்டுக்கு 600 பிக்ஸெல் ஒத்துவராவிடில் அதை 400 பிக்ஸெல் ஆகக் குறைத்துக்கொள்ளுங்கள்.

க்ளாசிக் ப்ளாக் டெம்ப்ளேட்டில்
Stretch Denim வைத்தால் 600 பிக்ஸெல்லும் அற்புதமாகக் காட்சியளிக்கும்.

ஏனெனில் மற்ற எந்த டெம்ப்ளேட்டைவிடவும், கண்டென்ட்டுக்கு அதிக அகலம் தருவது Stretch Denim தான்.

சிவமுருகன் said...

வாங்க தமிழ் நெஞ்சம்!

//உங்கள் பதிவினைப் பார்க்கும்போது மாத்திரம் புகைப்படங்கள் ஸ்லைட்ஷோவாகத் தெரியும்படி செய்யுங்கள். அப்படிச்செய்தால் பேஜ் லோட் ஆகும் நேரம் குறைவாக எடுத்துக்க்கொள்ளும். //

உங்களோட சொல்படி எல்லாவற்றையும் செய்து விட்டேன். சற்றே டெம்ப்ளேட்டையும் மாற்றி அமைத்து விட்டேன். தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி.