Wednesday, March 01, 2006

12: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 7


பொற்றாமரை குளம், தமிழ் மறைகள் நீரில் மூழ்காமல் பொன்மயமான தாமரையால் தாங்கிய இடம்.

'நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நக்கீரர் சிவபெருமனின் நெற்றிகண்ணால் ஆட்கொள்ளப்பட்டு விமோசனம் பெற்று எழுந்த இடம் இப்பொற்றாமறை குளம்.








குளமென்றால் நீரிருக்கும், மீனிருக்கும், கார்நீலமிருக்கும், கொகிருக்கும். இவையெல்லாமுடன், தங்க விமானத்தின் பிரதிபிம்பம் போல் குளத்தில் ஒரு தாமரை இருந்தால்? ஆம் தற்போது பொன்மயமான ஒரு தாமரையை குளத்தில் வைத்துள்ளனர்.

மேலும் பூஜைக்கு தேவையான தாமரை புஷ்பங்களை பொற்றாமரை குளத்திலிருந்தே எடுக்கிறார்கள்.

இத்தாடகத்தை சுற்றி உள்ள சுவற்றில் மூலிகையால் கோவில் வரலாற்றை வரைந்து வருகின்றனர். இதில் இதோ தாமரையில் வண்ண மூலிகை ஓவியம்.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

11 comments:

குமரன் (Kumaran) said...

அருமையாகச் செல்கிறது தொடர் சிவமுருகன். பொறுமையாக ஒவ்வொரு மண்டபமாக எங்களை அழைத்துச் செல்கிறீர்கள். நல்ல விஷயம்.

தருமி said...

அடடே, இன்னொரு மதுரக்காரர்...சந்தோஷம்..

கோவிலையே சுற்றி வர்ரது மாதிரி இருக்கு...நம்ம மண்டபத்தையும்தான் !

rnatesan said...

நன்றி சிவமுருகன்,
படைப்புகள் மிக அற்புதம்!!ஒன்று ஒன்றாக ரசிக்கிறேன்.மதுரை சென்றால் கோயிலில் அடைக்கலமாகிவிடுவேன்.மீண்டும் அந்நினைவுகள் என்னில் எழுந்தது!!

ENNAR said...

நன்றாக உள்ளது மதுரைகாரவுகளது படைப்பும் நல்லயிருக்கு

Geetha Sambasivam said...

tamilmanan fulla maduraikarar thna. romba romba santhoshamaga irukirathu maduraila irkkurappalaya.

தி. ரா. ச.(T.R.C.) said...

மணம் கமழும் மதுரை உங்கள் கைவண்ணத்தில் மேலும் சிறக்கிறது. தொடரட்டும் சீரிய பணி. தி. ரா. ச

சிவமுருகன் said...

அன்பு குமரன்,
நன்றி, இவ்வருடத்தில் முதல் 2 மாதத்திலேயே அவளடியை இருமுறை தொழசெய்துவிட்டாள், யாம் பெற்றதை பிறரும் பெறவே இத்தொடர்.

சிவமுருகன் said...

அன்பு தருமி ஐயா,
பின்னூட்டத்திற்க்கு நன்றி.

சிவமுருகன் said...

நன்றி என்னார் அவர்களே.
என் நினைவுகளில் இருந்து மீளாமல் இருக்கவே இத்தொடர்.

சிவமுருகன் said...

அன்புள்ள கீதா,
சென்ற வெள்ளியன்று (இதிலும் அம்மனோ) தான் தமிழ் மணத்தில் சேர்ந்துள்ளேன்.

சிவமுருகன் said...

அன்புள்ள தி. ரா. ச,
அது அவள் அருளாளே அவளே செய்வித்த கைவண்ணம், நான் வெறும் துண்டு பிரசுரம் தான்.