Thursday, March 16, 2006

20: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 13

முழுமுதல் கடவுளை,
மோதகபிரியனை,
மூர்ஷிக வாகனனை,
முஷ்டியால் நெற்றியில் தாக்கி.


மூன்றுகுறனியால் மோதகம் படைத்து,
மஞ்சளால் பிடித்தோ, - களி
மண்ணால் பிடித்தோ
முழுமனதுடன் வணங்கினால்.

காட்சி தருவான்
காசினியை
கனபொழுதில் வலம்வந்தவன்
கணங்களின் அதிபதி

கந்தனக்கு மூத்தோன்,
கலிதோஷம் நீக்கோன்,
காண்பவர்க்கு,
கணபதி,
இதோ முக்குறனி விநாயகர்.

(பரம்பரிய தோற்றம்)

விநாயகர் சதுர்த்தி அன்று முக்குறனி விநாயகர்க்கு வெள்ளிகவசம் சாற்றி, 18 படி அரிசி மாவினால் செய்யப்பட்ட கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யும் காட்சி.

திருவாச்சியில் என்றும் தம் குடும்பத்துடன் வணங்கிய நிலையில் நிற்க்கும் மன்னர் திருமலை நாயக்கர், அதற்க்கும் மேலே 'எந்த பிரகார தெய்வங்களுக்கும் இல்லாத சிறப்பான' முக்குறனி விநாயகர் கோபுரத்தை நிர்மானித்த செட்டியாரும் தம் மனைவியுடன் வணங்கியபடி நிற்கிறனர்.

அடுத்த பதிவு, வெளிபிரகாரத்திலுள்ள சிவலிங்கங்களும், திருக்கல்யாண மூர்த்தி சன்னிதி.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

7 comments:

rnatesan said...

மிக அற்புதம் சிவமுருகா,
பாராட்ட வார்த்தைகளே இல்லை!!தொடரட்டும்!!

rnatesan said...

மிக அற்புதம் சிவமுருகா
பாராட்ட வார்த்தைகளே இல்லை!!தொடரட்டும்!!

சிவமுருகன் said...

நன்றி நடேசன் அவர்களே,

ENNAR said...

முக்குறுனியா? முக்கறனியா?
மூன்று மரக்கால் அதைத்தான் முக்குருனி என்பர்

சிவமுருகன் said...

என்னார் ஐயா முக்குறுணிப் பிள்ளையார் என்பதே சரி என்று எண்ணுகிறேன்.

//மூன்று மரக்கால் அதைத்தான் முக்குருனி என்பர்//

18படியை தான் முன்று குறுணி என்பர். ஒரு குறுணி 6 படி என்று படித்துள்ளேன்.

குமரன் (Kumaran) said...

மிகவும் சரி சிவமுருகன். 6 படி சேர்ந்தால் ஒரு முக்குறுணி. மூன்று குறுணி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டையை உண்பதால் இவருக்கு முக்குறுணி விநாயகர் என்று திருநாமம். திருமலை நாயக்கர் மகால் கட்டுவதற்காக வண்டியூர் தெப்பக்குளத்தில் மண் எடுக்கும் போது இவர் திருவுருவம் கிடைத்ததாய் வரலாறு.

சிவமுருகன் said...

சரியாக சொன்னீர்கள் குமரன். நன்றி.