![](http://photos1.blogger.com/blogger/5895/1311/320/sidhivinayagar.jpg)
சிவசங்கரனுக்கு மக்கள் பல கணபதி(கணங்களின் அதிபதி), கார்த்திகேயன் (தேவசேனாபதி), தர்மஸாஸ்தா ஐப்பன், அக்னிவீரபத்திரர், அகோர வீரபத்திரர், (தீமைகளை அழிக்கும் தொழிலின் அதிபதிகள்), துவாரபாலகர்கள், முருகனுடன் பிறந்த வீரபாகு முதலிய சேனை, கலியுகமுழுவதும் இராம நாம ஜெபம் செய்ய வரம்பெற்ற, வனரவீரன் சிரஞ்சீவி அனுமன் என்று படியல் நீள்கிறது.
இவர்களனைவரையும் மீனாக்ஷி அம்மன் கோவிலின் தரிசிக்கலாம். தந்தை காணவருபவர்கள், அவர்தம் மக்களை செல்லமாக கன்னத்தில் முத்தமிடுவதில்லையா? அதேபோல் கூட்டுகுடும்பத்தை ஒரு பல்கலை கழகம் என்று சொல்வது போல் இவர்களனைவரும் ஒருங்கே ஓரிடத்தில் இருக்கிறார்கள், அருள்கிறார்கள்.
![](http://photos1.blogger.com/blogger/5895/1311/320/Dwara_palar%20swamisannathi.jpg)
ஈசனை காண இரு துவாரபாலகர்களிடமும் அனுமதி பெறவேண்டும். சுவாமி சன்னிதியில் இருக்கும் மற்றொருவர் நர்த்தன கணபதி சங்கரனின் கால்மாறி ஆடியகோலம் கண்டு இவரும் ஆட ஆரம்பித்திருக்க வேண்டும்.
![](http://photos1.blogger.com/blogger/5895/1311/320/00_Narthana_Ganesh00.jpg)
![](http://photos1.blogger.com/blogger/5895/1311/320/swamisannidhi_ganesh.jpg)
அடுத்த பதிவு, ஈசனின் சன்னிதியில் உள்ளே, மாலுக்கும், பிரம்மனுக்கும் கிட்டாத, ஆதி அந்தமில்லாத சிவனும், மதுரையில் கால்மாறி ஆடிய வெள்ளியம்பலநாதர்.
முந்தைய பதிவு.
அடுத்த பதிவு
4 comments:
ஆமாம் கால் மாறியாடியது என்றால் என்ன?
என்னார் ஐயா, எல்லா இடங்களிலும் நடராஜர் இடதுகால் ஊன்றி, வலது கால் வீசி நடனமாடுவார், ஆனால் மதுரையிலுள்ள, வெள்ளியம்பலத்தில் பாண்டியனின் வேண்டுகோள்படி கால்மாற்றி வலதுகால் ஊன்றி, இடது கால் வீசி நடனமாடுவார்.
இதை தான் கால்மாறி ஆடிய படலம் என்று ஒரு திருவிளையாடல்.
என்னார் ஐயா. பாண்டிய அரசன் ஒருவன் பரதம் கற்றுக் கொண்ட போது இடது காலைத் தூக்கி நின்றாடும் பதம் வந்த போது அவனால் இடக்காலை அதிக நேரம் தூக்கி நிற்கவில்லை. சிவபெருமானின் மேல் அளவில்லாத பக்தி கொண்ட அவனுக்கு உடனே இடக்காலைத் தூக்கி நின்றாடும் நடராஜப் பெருமானின் நினைவு வந்தது. உடனே கோயிலுக்கு வந்து எவ்வளவு நேரம் தான் இடக்காலையே தூக்கிக் கொண்டு நிற்பீர்? கால் மாறி ஆடியருள வேண்டும் என்று வேண்ட இறைவன் தன் அளவற்றத் திருக்கருணையால் வலக்காலைத் தூக்கி நின்று ஆடியதாக திருவிளையாடல் புராணம் சொல்லும். அதனால் எல்லா இடத்திலும் இடக்காலைத் தூக்கி நின்றாடும் நடராஜர் மதுரையில் மட்டும் வலக்காலைத் தூக்கி நின்றாடுவார்.
நன்றி குமரன் அண்ணா.
Post a Comment