Thursday, June 08, 2006

162: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 33

ஆயிரம் கால் மண்டபம்,
நூறுகால் மண்டம்,
ஆயிரம் கால்மண்டபம்,
கம்பத்தடி மண்டபம்,
இப்படி மண்டபங்கள் நிறைந்த, சூழ்ந்த தலம் நமது மீனாட்சி அம்மன் கோவில், ராயர் கோபுரத்தையும் கட்டிமுடிக்கப்பட்டிருந்தால், புதுமண்டபமும், நகரா மண்டமும் கோவிலின் உள்ளே இருந்திருக்கும், தேரை பட்டதால் இக்கோபுரம் கட்டி முடிக்க முடியாமல் போனதாக ஒரு கதையுண்டு.

இப்பதிவில் ஆயிரங்கால் மண்டபத்தை பற்றி பார்க்க உள்ளோம்.



ஆயிரங்கால் மண்டபம் அருங்காட்சியகமாக அறிவிக்கப்பட்டு, பல அறிய சிலைகள், பொருட்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.

இம்மண்டபத்தின் முத்து இசை தூண்.

இம்மண்டப படங்களை பற்றி நான் முன்னரே நிகழ்வுகள் வலைபூவில் மலையும் மாங்காயும் என்ற பதிவில் ச.திருமலை என்பவரை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவருடைய பதிவில் மிக அழகான படங்கள், பலகோணங்களில் இருந்தது, கண்டு வியந்தவன் அப்போதே எண்ணிவிட்டேன் நாம் ஆயிரங்கால் பதிவை பதிக்க போவதில்லை என்னுடைய இப்பதிவிற்கான சில படங்களை மட்டும் பதித்து விட்டு, அவருடைய பதிவிற்க்கு சுட்டி தரவேண்டும் என்று எண்ணியிருந்தேன். அப்படியே செய்தும் விட்டேன். சுட்டி இங்கே.

மேலும் சில படங்கள் அடுத்த பதிவில்.

4 comments:

Anonymous said...

Dear Siva

Thanks for the link. Your blog is a great source to know about Meenakshi Amman Temple. Let her bless you with all wealths.

Thanks
Sa.Thirumalai

சிவமுருகன் said...

வாங்க வாங்க திருமலை சார்.

நன்றி எல்லாம் எதற்க்கு சார்?
எல்லாம் ஒரு செயல், தொண்டு என்று நீங்கள் தானே சொன்னீர்கள்.

கட்டாயம் அம்மை அனைவருக்கும் அருள்வார்.

G.Ragavan said...

சிவமுருகன், ஆயிரங்கால் மண்டபம் என்பது வெறும் பேச்சு வழக்கென்று அறிகிறேன். உள்ளபடி நூற்றுக்கணக்கான தூண்களே உள்ளன. சரியா?

அதெல்லாம் சரி. கோயிலுக்குள் எப்படிப் படம் எடுத்தீர்கள்? நான் கேமரா கொண்டு சென்றால் இதையெல்லாம் படம் பிடிக்க முடியுமா?

சிவமுருகன் said...

இராகவன் சார்,

//ஆயிரங்கால் மண்டபம் என்பது வெறும் பேச்சு வழக்கென்று அறிகிறேன். உள்ளபடி நூற்றுக்கணக்கான தூண்களே உள்ளன. சரியா?//

இல்லை மண்டபத்தின் உள்ளே 990+ தூண்கள் உள்ளன. வாயில் தூண்களையும் சேர்த்து 1000 தூண்கள் உள்ளன உள்ளபடி உள்ளே 1000 தூண்கள் உள்ளன்.

//அதெல்லாம் சரி. கோயிலுக்குள் எப்படிப் படம் எடுத்தீர்கள்? நான் கேமரா கொண்டு சென்றால் இதையெல்லாம் படம் பிடிக்க முடியுமா? //

50 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் கேமரா உள்ளே எடுத்து செல்லலாம், (2- 3 சிப்பை கொண்டு போனீங்கனா எல்லா தூணையும் படம் எடுத்து விடலாம், இல்லாட்டி கூகுளாரிடம் கேட்டால் அவரே பல படங்களை வைத்துள்ளார், அதில் சில தான் இப்பதிவில்).

மூலவர் சன்னித்திக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பைக்குள் வைத்துக்கொள்ளலாம். இரவு பள்ளியறை பூஜையின் போது சன்னிதிக்கு வெளியே நடக்கும் பூஜைகளை படம் எடுக்கலாம் மிகவும் விஷேசமாக இருக்கும். வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும், நன்றி.