Friday, June 09, 2006

164: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 35

ஆயிரங்கால் மண்டபம் பற்றி ஆயிரம் பதிவிட்டாலும் போதாது, அதை வெறும் 3 பதிவில் சுருக்கி இட்டுள்ளேன். கண்ணில் தோண்றிய காட்சிகள் உண்மைக்கு சாண்று என்பார்கள். கற்பனை காட்சிகள் கவிக்கு அழகு என்பர். இதோ மேலும் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.


மண்டபத்தின் நுழைவாயில், ஒரு சிறப்பு புகைபடம்

ஸ்ரீ விநாயகர்

ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு உட்புறகாட்சி. மண்டபத்தில் சூரிய ஒளி வர ஏதுவாக வேயபட்ட கூரை


பாதுகாக்கப்படும் சிற்பங்களின் ஒரு சிறப்பு பார்வை.


ஒரு உற்று பார்வை.

அக்கால சிற்பகலைக்கு சாண்று. நுண்ணிய வேலைபாடுகளை இங்கே காணலாம்.

பிக்ஷாடனார், பூதகனங்களுடன்

மயில்மீதமர்ந்த ஸ்ரீ முருகன்

வெளிநாட்டவர் சிலை

பகல் பொழுதில் சூரியனும் காட்சி தரும் சமயத்தில்
அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அதிசய படங்கள் # 1
அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அதிசய படங்கள் # 2


கலியுகத்தில் மனிதன் எவ்வாறு இருப்பான் என்று திருமலை மன்னர் கேட்ட கேள்விக்கு அவருடைய ஆஸ்தான சிற்பி செதுக்கிய விளக்க சிற்பம்.

சிலையில் ஆடவன் மேல் ஒரு பெண் அமர்ந்திருப்பாள், ஆடவனுக்கு வலது கரமிருக்காது (முதல் படம்) , பெண்ணிற்க்கு இடது கால் இருக்காது (மேல் படம்), மக்கள் தங்களது முக்கிய கடமைகளை செய்ய முடியாத நிலையில் இருப்பர் என்று சொல்லியுள்ளார். மேலும் பெண்ணின் பிடியில் ஆண்ணெனப்பட்டவன் சிக்கியிருப்பான் அவனது குடுமி அப்பெண்ணிடம் இருக்கும் என்று சொல்லியுள்ளார்.

(அவள் மனைவியா, மகளா, சகோதரியா,அன்னையா, அல்லது தோழியா என்று சொல்லவில்லை)

அடுத்த பதிவில் விடுபட்ட அம்மன் கோவிலின் சில உட்புற படங்கள்.

12 comments:

Dubukku said...

மிக அருமையாக தொகுத்து வழங்கிவருகிறீர்கள். நன்றி. இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். தேசிபண்டிட்

சிவமுருகன் said...

என்னை தேசி பண்டிட்ல் முன்மொழிந்தவரை டுபுக்கு என்று அழைப்பதா?

தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். கடைசிப் படத்திற்கான விளக்கத்தை எங்கே படித்தீர்கள்? படித்தீர்களா இல்லை யாராவது சொன்னார்களா? விளக்கம் பொருத்தமாக இல்லையெ?!

தருமி said...

நல்ல படங்கள்.........

சிவமுருகன் said...

குமரன் அண்ணா,

விளக்கம் ஒரு புத்தகத்தில் படித்தேன்
கலிகாலத்தின் முடிவில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் ஒரு சிற்பமாக கருதப்படுகிறது இந்த சிற்பம்.

ஏதேனும் தவறிருந்தால் சொல்வீர்களா?

சிவமுருகன் said...

தருமி சார்,
வாங்க வாங்க ரொம்ப நாள் கழ்ச்சு வந்திருக்கீங்க.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் ரொம்ப நன்றி.

rnatesan said...

நான் மதுரை சென்றபோது ஆயிரங்கால் மண்டபத்தை சரிவர பார்க்கத குறையை தீர்த்துவிட்டிர்கள்!!நன்றீ !!!!!!

rnatesan said...

நான் மதுரை சென்றபோது ஆயிரங்கால் மண்டபத்தை சரிவர பார்க்கத குறையை தீர்த்துவிட்டிர்கள்!!நன்றீ !!!!!!

மணியன் said...

மதுரைக் கோயிலின் அழகை இணையத்தில் தொகுத்து வழங்கி ஆற்றொணா சேவை செய்து வருகிறீர்கள். மிக்க நன்றி

சிவமுருகன் said...

யோகன் ஐயா,
//மீனாட்சியிடம் சென்றும் ,நின்று நிதானித்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் படங்கள் அருமை!! ,நேரில் பார்க்குமாசையைத் தூண்டியது.//

அடுத்த முறை செல்லும் போது அவசியமாக பார்க்கவும்.

சிவமுருகன் said...

நடேசன் சார்,
//நான் மதுரை சென்றபோது ஆயிரங்கால் மண்டபத்தை சரிவர பார்க்கத குறையை தீர்த்துவிட்டிர்கள்!!//

அடுத்த முறை செல்லும் போது அவசியமாக பார்க்கவும்.

சிவமுருகன் said...

அன்புள்ள மணியன்,
//மதுரைக் கோயிலின் அழகை இணையத்தில் தொகுத்து வழங்கி ஆற்றொணா சேவை செய்து வருகிறீர்கள். மிக்க நன்றி//

எல்லாம் அவள்(ன்) செயல், நான் ஒரு சிறு க(கு)ருவி.