Saturday, June 24, 2006

170: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 39

கோபுர காட்சிகள் # 3
கோபுரங்களை சற்று தள்ளி நின்று பார்த்தால் அழகாகவும் அன்னாந்து பார்த்தால், சிலைகள் அதிகமாகவும், அதன் கலைநயங்களும் தெரியவரும். தற்போது கோபுரத்தை சற்று அன்னாந்து பார்க்கலாம்.
(படத்தை சொடுக்கினால் பெரிதாகும்)

அம்மன் சன்னிதி

மேற்க்கு கோபுரம் (உள்ளே இருந்து)

வடக்கு கோபுரம் (இரவு காட்சி)




தெற்கு கோபுரம் (இரவு காட்சி)


சிறிய கோபுரம் (மீனாட்சி அம்மன்)

மேற்க்கு கோபுரம்

சுவாமி சந்நிதி

இராஜ கோபுரம்

இராஜ கோபுரம்

இராஜ கோபுரம்

தெற்க்கு கோபுரம் (உள்ளே இருந்து).

என்னங்க கழுத்து வலிக்குதா சரி அடுத்த பதிவில் கொஞ்சம் உயர கொண்டு செல்கிறேன் எவ்வளவு உயரம் செல்ல வேண்டுமென்று பின்னூட்டமிட்டல் அவ்வளவு உயரத்திற்க்கு அழைத்து செல்கிறேன். அதிக பட்சமாக 652 அடி (ஆம் செயற்க்கை கோள்ளின் வண்ணப்படம்).

முந்தைய பதிவு

குறிப்பு: தெற்கு கோபுரபடம் வலை யேற்றப்பட்ட படங்களில் 200வது படம்.

23 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

சிவமுருகன்
மறுபடியும் சொல்லுகிறேன் "காணவேண்டாமோ இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம் காணவேண்டாமோ" கோபுரதரிசனத்திற்கு நன்றி அன்பன் தி ரா ச

குமரன் (Kumaran) said...

இதுவே பணியென்று படங்களைச் சேகரித்தீர்கள் போல. :-) மிக்க நன்றி.

துளசி கோபால் said...

200 படங்கள் போட்டாச்சா?

வாழ்த்து(க்)கள்.

எல்லாம் அருமையான படங்கள்.

நன்றி சிவமுருகன்.

வடுவூர் குமார் said...

நல்லா இருக்குங்க!
மதுரை போய்வந்த உணர்வு.
நன்றி

சிவமுருகன் said...

ஆமாம் தி.ரா.ச அவர்களே,

இன்னும் சில படங்கள் உள்ளன அதையும் அவளருளால் காணசெய்து விடுகிறேன்.

சிவமுருகன் said...

//இதுவே பணியென்று படங்களைச் சேகரித்தீர்கள் போல. :-) மிக்க நன்றி.//

ஆம் அண்ணா,

அவளுக்கு என்னால் செய்ய முடிந்த சிறிய பணி.

சிவமுருகன் said...

அம்மா,
ஆமாம், இன்னும் 50-60 படங்கள் உள்ளன.

நன்றி.

சிவமுருகன் said...

வாங்க வடுவூர் குமார்,

//நல்லா இருக்குங்க!
மதுரை போய்வந்த உணர்வு.
நன்றி//

வருகைக்கும் பின்னூடடத்திற்க்கும் ரொம்ப நன்றி.

தருமி said...

குமரன் (Kumaran) said...
இதுவே பணியென்று படங்களைச் சேகரித்தீர்கள் போல. :-) மிக்க நன்றி.


எங்க இருந்து 'சுடுறீங்க' ?

சிவமுருகன் said...

தருமி சார்,
//எங்க இருந்து 'சுடுறீங்க' ?//

ஜோக்கா இல்ல...

இதற்க்காக நான் சுட்டதல்ல என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன்.

சரி நகைசுவை என்றே கொ(ல்)ள்கிறேன்.

//ஆம் அண்ணா, அவளுக்கு என்னால் செய்ய முடிந்த சிறிய பணி.//

சில மாதங்களுக்கு முன் (பதிவிற்க்கு வருவதற்க்கு முன்) பல படங்களை சேகரித்தேன். இதைவைத்து ஒரு மென்பொருள் உருவாக்குவது என்ற திட்டம். ஆனால் சில முக்கிய படங்கள் கிடைக்கவில்லை ஆகவே மென்பொருள் திட்டத்தை கைவிட்டேன் :(, அச்சமயத்தில் தான் அண்ணன் குமரனின் மதுரை-1 கண்டதும் சரி என்று நம் கோப்பு தொகுப்பை, இங்கே இட ஆரம்பித்தேன். உண்மையை சொன்னால் சில படங்கள், (கோபுர பக்கவாட்டு தோற்றம், வரைபடம்) கடந்த ஜனவரியில் வலையில் கிடைத்த படங்கள். பிறகே(20-02-2006) பதிவுகளை பதிய ஆரம்பித்தேன்.

Anonymous said...

200 padangal mela pottu kalakiteenga sivamurugan.

Neenga Meenakshi amman koil padangal pottu mudinja kaiyoda, inda koilgala pathiyum eludanumnu kettukuren.

East - Maragada valli muktheeshwarar koil, Teppakulam
West - Immayil nanmai tharuvaar koil, West masi street
North - Aadi sokkanathar koil, near Simmkkal
South - Then thiruvalayam (Chenna dhowro in sourashtra), South masi street

Ivai naangum Meenakshi amman koil saarntha koilgal endrum, Shivanin 64 thiruvilayadalgal nigalda stalangal endrum So.So.Mee avargalin solpolivil kettirukiren. Ida pathi eludi namma ooru perumaya ulagathukku unarthungalen Sivamurugan.

By
Priya

சிவமுருகன் said...

அன்புள்ள பிரியா அவர்களுக்கு,
தங்களும் வந்து பின்னூட்டமிட்டதற்க்கு நன்றி.

அடுத்த 7 முதல் 10 பதிவுகளாவது இன்னும் வரும் பிறகு நீங்கள் சொன்ன எல்லா கோவில்களை பதிக்க ஆரம்பிக்கிறேன்.

நீங்கள் சொன்ன கோவில்களில் (ஏடக நாதர் கோவிலையும் சேர்த்து) சிவாலயம் என்ற ஒற்றுமை தவிர ஒரு ஒற்றுமை உள்ளது அதை நீங்களோ வேறுயெவரேனும் சொன்னால் நன்றாய் இருக்கும்.

//இவை நான்கும் மீனாக்ஷி அம்மன் கொவில் சார்ந்த கொவில்கள் என்றும், சிவனின் ௬௪ திருவிளையடல்கள் நிகழ்ந்த ஸ்தலன்கள் என்றும் சோ.சோ.மீ அவர்களின் சொற்பொழிவில் கெட்டிருகிறேன்.//

ஆம் அத்துடன் ஏடக நாதர் கோவிலும் அடக்கம். எல்லாம் சமயகுறவர்களால் பாடப்பெற்ற தலங்கள்.

//இதை பற்றி எழுதி நம்ம ஊரு பெருமய உலகதுக்கு உணர்த்துங்களேன் சிவமுருகன்.//

இதுவும் அவள் விருப்பம் என்றால் அதுவும் நடக்கும்.

Anonymous said...

Thaangal kurippita akkoilgalin sirappai naan terindukolla aavalaga irukkiren. Neengale engal ellorukkum solli vidungalen.

Melum, thaangal sollum Edaganaathar koilukku naan sendrathe illai. By any chance, adu Elu kadal agraharathil ulla koila? Illayel, akkoil ulla idathai sollungal. Edaganaadar peyarai kettale paravasam undagiradu. Adutha murai oorukku pogumpodu kandippaga darisikka vendum endru shivanidam vendugiren.

Anonymous said...

சிவமுருகா!
நான் சென்றபோது,என்னிடம் டியிஸ்ரல் கருவி இல்லாததால் ;நிறையப் படங்கள் எடுக்க இயலவில்லை. உங்களால் அக்குறை தீர்ந்தது. அருமை
நன்றி
யோகன் பாரிஸ்

சிவமுருகன் said...

ப்ரியா, (நீங்கள் தானே?)
//தாங்கள் குறிப்பிட்ட அக்கொவில்களின் சிறப்பை நான் தெரிந்து கொள்ள ஆவலக இருக்கிறேன். நீங்களே எங்கள் எல்லொருக்கும் சொல்லி விடுங்களேன்.

மெலும், தாங்கள் சொல்லும் ஏடகநாதர் கொவிலுக்கு நான் சென்றதே இல்லை. அது ஏழு கடல் அக்ரஹரதில் உள்ளதா? இல்லயேல், அக்கொவில் உள்ள இடத்தை சொல்லுங்கள். ஏடகநாதர் பெயரை கெட்டாலே பரவசம் உண்டாகிறது. ஆடுத்த முறை ஊருக்கு பொகும்பொது கண்டிப்பாக தரிசிக்க வெண்டும் என்று சிவனிடம் வேண்டுகிறேன்.//

மதுரைக்கு எல்லை காட்டிய படலத்தில் "வெள்ளத்தில் மூழ்கிய மதுரையின் எல்லை காட்ட தன் கழுத்து பாம்பை விடுகிறார் சுந்தரேசர், அந்த பாம்பு தன் நீண்ட வடிவமெடுத்து சுந்தரேஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு மதுரைக்கு எல்லை காட்டும் படியாக வளைந்து நெளிந்து தன் வாலையும் தலையையும் இணைக்கிறது, இப்படியாக தன் உடல் வளைந்த இடங்கள் அனைத்திலும் ஒரு சிவன் கோவில் உருவானது அந்த 5 கோவில்கள் தான் மேலே குறிப்பிட்டுள்ள கோவில்கள்.

திருவேடகத்தில் ஏடக நாதர் கோவில் உள்ளது. சம்பதரால் பாடப்பெற்ற தலம். புனல் வாதத்தில் ஆற்றில் விடப்பட்ட வாழ்க அந்தணர் என்ற பாடல் கொண்ட ஏடு ஆற்றின் போக்குக்கு எதிராக வந்து இங்கு ஏறியதாக ஏடு ஏறிய படலம் கூறுகிறது.

சிவமுருகன் said...

யோகன் ஐயா,

//சிவமுருகா!
நான் சென்றபோது,என்னிடம் டியிஸ்ரல் கருவி இல்லாததால் ;நிறையப் படங்கள் எடுக்க இயலவில்லை. உங்களால் அக்குறை தீர்ந்தது. அருமை
நன்றி யோகன் பாரிஸ்//

மறுமுறை இந்தியா வரும் போது கொண்டுவந்து விடுங்கள் அவ்வள்வு தானே.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

தருமி said...

ஜோக்கா இல்ல...

இதற்க்காக நான் சுட்டதல்ல என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன்.

சரி நகைசுவை என்றே கொ(ல்)ள்கிறேன்//
நகைச்சுவை என்றே கொள்க.
எங்கிருந்து இவைகளைப் பெற்றீர்கள் என்பதை அப்படிக் கேட்டேன். மிக நல்ல படங்கள் என்பதாலேயே அந்தக் கேள்வி. தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

சிவமுருகன் said...

தருமி சார்,

//நகைச்சுவை என்றே கொள்க.
எங்கிருந்து இவைகளைப் பெற்றீர்கள் என்பதை அப்படிக் கேட்டேன். மிக நல்ல படங்கள் என்பதாலேயே அந்தக் கேள்வி. தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.//

இணைய தொகுப்புன்னு கீழே ரயில் வண்டி ஓடுதே பார்த்திருப்பீங்களே.

//தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.//

அப்படி தவறாக கொள்ளவில்லை. அதற்க்கு பதிலளித்தேன்.

இதுவரை எதற்க்காக சேகரித்தேன் என்று யாரிடமும் சொன்னதில்லை இப்போது தான் சொல்லியுள்ளேன்.

Anonymous said...

Nandri Shivamurugan,
thangal blog moolam niraya arindu konden. Aanal, naan keeta kadaiyin padi, Maragadivalli Muktheeshwarar, Indirinanin Airavatham stapithu valipattadagavum, Chinna meenakshi amman koilil (Chenna dhowro) ulla lingam emanaal stapithu valipatadagavum ninaivu.

Neengal sonna vishayamum poruthamaaga irukkiradu...

Meendum nandri
Priya

சிவமுருகன் said...

//thangal blog moolam niraya arindu konden. //
நன்றி ப்ரியா,

//Aanal, naan keeta kadaiyin padi, Maragadivalli Muktheeshwarar, Indirinanin Airavatham stapithu valipattadagavum, Chinna meenakshi amman koilil (Chenna dhowro) ulla lingam emanaal stapithu valipatadagavum ninaivu.//

இதுவும் சரிதான்.

//Neengal sonna vishayamum poruthamaaga irukkiradu...//

இதுவும் சரிதான்.

மேலும் இந்த ஐந்து கோவில்களில், இம்மையில் நன்மை தருவார் கோவிலில் வழிபட்டால் இறை தரிசனம் கிடைக்கும் என்றும், தென் திருவாலய சுவாமி கோவிலை வழிபட்டால் மரண பயம் நீங்கும் என்றும், ஏடகநாதர் கோவிலில் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும், முக்தீஸ்வரர் கோவிலில் வழிபட்டால் முற்பிறவி சாபங்கள் தீரும் என்றும், பழைய சொக்கநாதர் கோவில்லில் வழிபட்டால் தீர்காயுள் கீர்த்தியிடனும் வாழலாம் என்றும், மீனாக்ஷி அம்மன் கோவிலில் உள்ள சுந்தரேஸ்வரரை வணங்கினால் மேற்கண்ட எல்லா நிகழும் என்றும் ஒரு நம்பிக்கையுண்டு.

இந்த எல்லா கோவிலின் மூலவர் இலிங்கங்களில் பெரிய இலிங்கமிருப்பது தென் திருவால கோவிலில் என்பது குறிப்பிடத்தக்கது.

Anonymous said...

Then thiruvaalaya sirapugal patri ketkumpothu migavum magilchiyaaga irukkiradu. Maduraiyil engal veedu kovilukku miga arugil ulladu. Vaarathil 3 to 4 naatkalukku poi sutri vittu vandu viduvom.

Enna mana kavalai irundaalum, en thantayaar, angu sendu varuvaar. Adey palakkam engalukkum. Manadil udane nimmadi kidaikkum.

Ivvalavu mahimai vaaynda kovilkalukku arugilye pirandu valarndatharkaaga anda iraivanukku kodi nanadrigal. Adai blog unarthiya sivamuruganukkum thaan.

Priya

சிவமுருகன் said...

அன்புள்ள ப்ரியா,

//Then thiruvaalaya sirapugal patri ketkumpothu migavum magilchiyaaga irukkiradu. Maduraiyil engal veedu kovilukku miga arugil ulladu. Vaarathil 3 to 4 naatkalukku poi sutri vittu vandu viduvom. //

நீங்கள் தான் அதற்க்கு காரணம். உங்களுக்கு தான் நன்றி.

//Enna mana kavalai irundaalum, en thantayaar, angu sendu varuvaar. Adey palakkam engalukkum. Manadil udane nimmadi kidaikkum. //

உண்மை.

//Ivvalavu mahimai vaaynda kovilkalukku arugilye pirandu valarndatharkaaga anda iraivanukku kodi nanadrigal.//

நானும் கோவிலுக்கு அருகில் இருப்பவன் தான்.

//Adai blog unarthiya sivamuruganukkum thaan.//

நன்றி அந்த அங்கயர்கன்னிக்கு தான்.

Anonymous said...

Good brief and this mail helped me alot in my college assignement. Thank you on your information.